வழக்கமாக தனது கவர்ச்சி தாராளமயமாக்கல் கொள்கையை தெலுங்கு படங்களில் மட்டுமே ரணகளப்படுத்துவார் ஸ்ருதி ஹாசன்! தமிழ் படங்களுக்கு தடா போட்டுவிடுவார். இப்போது ஹரி இயக்கத்தில் நடித்துவரும் 'பூஜை’ படத்தில் விஷாலுடன் காட்டும் நெருக்கத்தைப் பார்த்து யூனிட்டே அதிர்ந்துபோனதாம். அதுசரி... வரலட்சுமியும் லட்சுமி மேனனும் ஷாக் ஆகாமல் இருந்தால் சரி!

'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின்போதே விஜய் சேதுபதிக்கு 'ஸ்டுடியோ-9’ சுரேஷ் அட்வான்ஸ் பணம் கொடுத்து இருந்தார். அதன்பின் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடித்துக்கொண்டே இருப்பதால், கவுன்சிலில் புகார் கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ்!

முன்பு வைரமுத்து சில மொழிமாற்றப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதி வந்தார். இப்போது அவரது வாரிசு கிளம்பிவிட்டார்! 'நான் ஈ’ ராஜமௌலி தெலுங்கில் பிரமாண்டமாக 'பகுபாலி’ வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய, அதற்கு வசனம், பாடல்கள் எழுதுகிறார் மதன் கார்க்கி!

50 படங்களை கடந்துவிட்ட அஜித், இதுவரை குழந்தைக்கு அப்பா வேஷத்தில் நடித்தது இல்லை. முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கும் படத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்குத் தந்தையாக நடிக்கிறார். அம்மாவாக த்ரிஷா நடிக்கிறார்!

தமிழ் பதிப்பில் உருவாகும் 'திருஷ்யம்’ படத்தின் பட்ஜெட் ரொம்ப ரொம்ப குறைவு. ஹீரோவாக நடிக்கும் கமலுக்கு சம்பளமாக பெருந்தொகையை ஒரே பேமன்ட்டாக இயக்குநர் ஸ்ரீப்ரியா தர, சகலகலா வல்லவனுக்கு ஷாக்! மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்தார். தமிழில் கமலுக்கு ஜோடி கவுதமி!