பிரீமியம் ஸ்டோரி

நறநற சிம்பு!

 ஹன்சிகா நடித்த சில படங்கள் சொதப்பியபோது 'சிங்கம்-2’ படத்தின் மூலம் பிரேக் கொடுத்தார் ஹரி. அடுத்து தன் 'பூஜை’ படத்தில் நடிக்க அழைத்தார். 'விஷாலுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்...’ என்று 'நோ’ சொன்ன ஹன்சிகா, இப்போது திடீரென சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏனோ நறநறவென கடைவாய் பல்லைக் கடிக்கிறார் சிம்பு.

இந்தியில் 'மௌன குரு’!

தமிழ்ப் படங்களை இயக்கினாலும் ஏ.ஆர்.முருகதாஸின் இரண்டு கண்கள் எப்போதும் பாலிவுட் மீதே பாய்கிறது. இங்கே பிரமாதமாகப் பேசப்பட்ட 'மௌன குரு’ படத்தை இந்தியில் தயாரித்து இயக்குகிறார், முருகதாஸ். அதை அப்படியே ஹீரோயின் ஓரியன்டட் கதையாக உருமாற்றி, அருள்நிதி வேடத்தில் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹாவை நடிக்கவைக்கிறார். இனியா ரோலில் மும்பையின் டம்மி ஹீரோ ஒருவர் தலையைக் காட்டுகிறார்.  

மிஸ்டர் மியாவ்

பெஸ்ட் ஃபிலிம்!

'ஐ’ படத்தின் 50 செகண்ட் ட்ரெய்லரைப் பார்த்த சினிமா புள்ளி ஒருவர் 'உங்கள் படத்திலேயே 'இந்தியன்’ படத்துக்குப் பிறகு 'ஐ’தான் பெஸ்ட்’ என்று ஷங்கரிடம் சொல்ல, ''அப்படியா? 'எந்திரன்-2’ பாருங்க'' என்றாராம் சிரித்துக்கொண்டே.

கௌதம்மேனன், விக்ரம்...

இப்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துவரும் விக்ரம், அடுத்து கௌதம் மேனன் படத்தில் நடிக்கப்போகிறார். அஜித் படத்தை முடித்த பிறகு, விக்ரம் காம்பினேஷனில் படத்தைத் தொடங்குகிறார் கௌதம்.

பச்சை தமிழச்சி!

'அரிமா நம்பி’யில் அநியாயத்துக்கு கவர்ச்சி மேளா நடத்திய ப்ரியா ஆனந்தின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. 'நான் மும்பை, ஆந்திரா, கேரளா பொண்ணு கிடையாது, பச்சை தமிழச்சி...’ என்று கெத்தாக சொல்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் ஸ்பார்ட்!

கூடல்நகர இயக்குநர் பிரகாச நடிகரின் சொந்தப் படத்தை இயக்கப் போய்விட்டார். நம்பர் நடிகையின் கால்ஷீட் வேறு குளறுபடியாகிக் கிடக்கிறதாம். அதனால் இயக்குநர் மீது விரல் நடிகர் கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு