Published:Updated:

நமிதாவின் இன்ஸ்டா போஸ்ட் சொல்லும் சூசக கவிதை பிக் பாஸ் பற்றியா..?!

நமிதாவின் இன்ஸ்டா போஸ்ட் சொல்லும் சூசக கவிதை பிக் பாஸ் பற்றியா..?!
நமிதாவின் இன்ஸ்டா போஸ்ட் சொல்லும் சூசக கவிதை பிக் பாஸ் பற்றியா..?!

தமிழகத்தில் அனைத்துப் பரபரப்புகளையும் மீறி பிக் பாஸ் ஃபீவர் அனைவரையும் தொற்றியுள்ளது. தினமும் அந்த ஷோவில் நடக்கும் விஷயங்கள்தான் அடுத்த நாள் நெட்டிசன்களுக்கு தீனி. சமீபத்தில் இந்த ஷோவில் இருந்து வெளியேறிய நமிதா மீடியாவிடம் பேச தொடர்ந்து மறுத்துவந்தார். ஆனால், தற்போது இன்ஸ்டாகிராமில் நமிதா பதிவு செய்திருக்கும் ஒரு போஸ்ட், பிக் பாஸ் பற்றியதா என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அவர் பதிவு செய்திருக்கும் போஸ்டின் தமிழாக்கம்...

பாதி உண்மை (The Half Truth)

நீ காலையில் சிரிப்போடு எழுவாய், ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு மன நிம்மதியை உடைப்பாள், தூள் தூளாக உடைந்த பீஸ்களை எடுத்து அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் அடிப்பாள்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழப்பாய், ஏனென்றால் உனக்கும் தன்மானம் இருக்கும்தானே. அது, அந்த விஷயத்தில் இருந்து உன்னை பாதுகாக்கும். அங்கு இருக்கிற விரல்கள் எல்லாம் உன்னை நோக்கியே இருக்கும். அவர்கள் பேசுவது உனக்குக் கேட்கும்.

நீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான். அந்த ஷோ இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள். உனக்குள் இருந்த அவ்வளவு நம்பிக்கையும் நரகக் குழியாகத் தெரியும்.

ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும். இது பாதி உண்மை தான். நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான்.

நீங்கள் யாரும் அந்த ஷோவை கவனிக்கவில்லை. பார்க்கமட்டும்தான் செய்தீர்கள்' இதை அவர் கையால் எழுதி, கீழே கையெழுத்தும் போட்டுள்ளார். அந்தப் போஸ்டில் கீழே, ’’உண்மைதான் உன்னை வெளிக்கொண்டுவரும், அதுவரை கம்பீர முகத்தோட சிரி. உங்களால் வரிகளுக்கிடையே உள்ள செய்தியைப் புரிந்துகொள்ள முடியும் என்றால் இதுவும் உங்களுக்குப் புரியும்’’ என்று சூசகமாக பதிவு செய்திருக்கிறார். நமிதா பதிவு செய்திருப்பது பிக் பாஸ் பற்றியதா என்பதை அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை.