Published:Updated:

துல்கர் சல்மானின் 'பறவ', 'மகாநதி' போஸ்டர்களைப் பார்த்தீர்களா?

பா.ஜான்ஸன்
துல்கர் சல்மானின் 'பறவ', 'மகாநதி' போஸ்டர்களைப் பார்த்தீர்களா?
துல்கர் சல்மானின் 'பறவ', 'மகாநதி' போஸ்டர்களைப் பார்த்தீர்களா?

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் படம் 'சோலோ'. தமிழ், மலையாளம் என பைலிங்குவலாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. 

துல்கரின் பிறந்தநாள் என்பதால் 'சோலோ' போன்று துல்கர் நடித்திருக்கும் மற்ற இரண்டு படங்களின் போஸ்டர்களும் நேற்று வெளியிடப்பட்டது. மலையாளத் திரைப்படங்களில் காமெடி ரோல்களில் நடிப்பவர் சௌபின் சாஹிர். இவர் இயக்கியிருக்கும் 'பறவ' நிறைய புதுமுகங்களின் நடிப்பில் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் துல்கரும் நடித்திருக்கிறார். துல்கரின் வித்தியாசமான கெட்டப்புடன் வெளியானது 'பறவ' படத்தின் போஸ்டர். தமிழில் தெலுங்கில் பைலிங்குவலாக உருவாகும் படம் 'மகாநதி'. நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிவருகிறது இந்தப் படம். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்கும் இப்படத்தில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டரும் "உள்ளது ஒரே பிறப்பென்றால்" என்ற டேக் லைனுடன் வெளியானது. பிரபலங்களில் வாழ்த்துகளுடன், 'சோலோ', 'பறவ', 'மகாநதி' படங்களின் போஸ்டர்களும் சேர்ந்து துல்கரின் இந்தப் பிறந்தநாளை இன்னும் ஸ்பெஷலாக்கியிருக்கிறது.