Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

சிம்பு சம்பளம்!

 சிம்பு நடித்து வரும் 'வாலு’, 'வேட்டை மன்னன்’, 'இது நம்ம ஆளு’ என்று எல்லா படங்களும் அந்தரத்தில் நிற்கின்றன. அதனால், கடந்த மூன்று வருடங்களாக எந்தப் படங்களும் நோ ரிலீஸ். சமீபத்தில் சந்தித்த புது தயாரிப்பாளரிடம் சிம்பு கோடிகளில் சம்பளம் கேட்டிருக்கிறார். அம்புட்டுதான்... பீப்பி ஊதும் ரேஞ்சுக்கு பிபி எகிற, பதறியபடி பறந்து இருக்கிறார் தயாரிப்பாளர்.

ஆக்டிங் நோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உண்மையில் கேமராவைவிட நட்ராஜுக்கு நடிப்பு மேல்தான் நாட்டம். 'சதுரங்க வேட்டை’ படத்துக்குப் பிறகு நடிக்கக்கேட்டு, நட்டி வீட்டு வாசலில் ரேஷன் கடை க்யூ. தேடிவந்து சொன்ன கதைகள் தேறவில்லை. 'கத்தி’ படத்துக்கு கேமராவை தூக்கிவிட்டார். இந்தியில் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நட்டிக்கு 'கத்தி’யில் ஒரு கோடி சம்பளம்.    

மிஸ்டர் மியாவ்

கெடுபிடியில் ஹன்சிகா!

இதுகாறும் தமிழ் சினிமாவில் ஹன்சிகாவை சிம்புவின் ஆளு என்று யாரும் தொடர்புகொள்ளாமல் தவிர்த்து வந்தனர். இப்போது காதல் வேலி கத்தரிக்கப்பட்டதால், இலகுவாக சந்திக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் ஹன்சிகாவின் நிலைமை கெடுபிடியாகிவிட்டது. மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவின் கஸ்டடியில் ஹன்சிகா. அங்குள்ள ஹீரோக்கள் ஹன்சியை நெருங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

ஹாட் ஸ்பாட்!

மிஸ்டர் மியாவ்

தண்டச்சோறு படத்தின் வெற்றிக்காக தடபுடல் பார்ட்டியை ஸ்டார் ஹோட்டலில்  கொடுத்தார், புரூஸ் லீ நடிகர். எப்போதும் பப்ளிக்கில் முகம் காட்டாத பிரகாச கப்புள் விடிய விடிய விழாவில் கலந்துகொண்டனர். உற்சாகத்தின் உச்சத்தில் புரூஸ் லீ நடிகர் புலம்பியது படத்தின் டயலாக்கைவிட படு ஷார்ப்!

மிஸ்டர் மியாவ்

அம்மா, அப்பாவை இழந்து, அல்சரை சுமந்து, கூர்க்கா நடிகரிடம் கதை சொல்ல போயிருக்கிறார் அரச இயக்குநரின் உதவி இயக்குநர். அதன் பின்பு தனது தயாரிப்பாளரை நடிகரிடம் அறிமுகம் செய்திருக்கிறார் உதவி. இப்போது அழைத்துப்போன உதவியைத் துரத்திவிட்டு, தயாரிப்பாளரைத் தன்வசம் பறித்து வைத்திருக்கிறார் கூர்க்கா நடிகர்!