Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

பதறும் பவர் ஸ்டார்...

 ''நான் தயாரிச்ச படங்களை ஸ்கிரீன்ல பார்த்தேன். என் நடிப்பை என்னாலேயே சகிச்சுக்க முடியலை. அதனால எல்லா படத்தையும் பரண்மேல போட்டுட்டேன். 'ஆனந்தத் தொல்லை’ படத்தை மட்டுமே ரிலீஸ் செய்யப் போறேன். மூணு கோடி பட்ஜெட்ல படத்தை எடுத்துட்டு, 10 கோடின்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க...'' என்று கிளிசரின் போடாமல் கலங்குகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

விஜயகாந்த், சரத்குமார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பு 'சகாப்தம்’ படப்பிடிப்புக்காக விஜயகாந்த் மலேசியா சென்றார். அப்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட, சிங்கப்பூர் எலிசெபத் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். எதிர்பாராதவிதமாக, அப்போது எதிர் அறையில் சரத்குமார் செக்கப்புக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாராம்.

மிஸ்டர் மியாவ்

தள்ளிப்போகுமா 'கத்தி’

இலங்கை அரசின் ஜெயலலிதா அவதூறு பிரச்னை லண்டன் வரை தீப்பற்றி எரிகிறது. அதனால், இந்த மாதம் 20-ம் தேதி நடக்க திட்டமிட்டிருந்த 'கத்தி’ பட ஆடியோ விழாவைத் தள்ளி வைக்கும்படி தயாரிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

வெளிப்படமா நோ...

'வேலையில்லா பட்டதாரி’ வெற்றிக்குப் பிறகு, வெளி கம்பெனி பட அழைப்புகளுக்கு 'நோ’ சொல்ல ஆரம்பித்துவிட்டார், தனுஷ்.  இனி, சொந்தப்பட நிறுவனத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தன் நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களுக்கு சான்ஸ் கொடுப்பதையும் தொடர்கிறார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படமும் அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது.

ஹாட் ஸ்பாட்!

•  'மதுரை பான' பட ரிலீஸின்போது திடீர் பிரச்னையைக் கிளப்பினார் புத்த நடிகர். தயாரிப்பு உரிமையில் தலையிட்டதால் கடுப்பானது கவுன்சில். இனிமேல் புத்த நடிகரை வைத்து யாரும் படம் தயாரிக்கக் கூடாது என்று முடிவெடுக்க இருக்கிறதாம்.

•  ஷாஜகான் காதலி நடிகைக்கு முதிர்கன்னி வயசாகியும் 'நோ’ மேரேஜ். கைவசம் படங்களும் நஹி. நடிகை அவ்வப்போது பிரபல புள்ளிகளை சந்திக்கிறார். எப்போதும் அருகாமையில் இளைஞர் ஒருவரோடு இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism