Election bannerElection banner
Published:Updated:

'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா!

'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா!
'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா!

'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா!

ன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், காயத்ரியாக வரும் ரேகா குமார், பிரகாஷாக வரும் கிருஷ்ணா இருவரின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு. பழிவாங்கல், சண்டை என கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இப்படி கதையில் பரபரப்பு இருந்தாலும், 'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலவென இருக்கும். நேற்று (ஆகஸ்ட் 1) சர்ப்ரைஸ் நாளாக இருந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கொண்டாடினார் கிருஷ்ணா. அதை டீமிலிருந்த ஒருவர், வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தார். நான்கு மணி நேரத்தில் 36,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைத் தொட்டது. பிறகு 50,000 பார்வையாளர்களை அடைந்துள்ளது. கிருஷ்ணாவுக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டது வாணிபோஜனும், ரேகா குமாரும். அந்த நொடிகளை மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். முதலில் வாணி போஜன் பேசினார்.

''கடந்த சில வாரங்களாகவே விளம்பரங்கள், சீரியல் எனத் தொடர்ந்து வேலைகள் இருந்ததால் மத்த விஷயங்களில் கவனம் செலுத்தமுடியலை. பொதுவாகவே, எனக்கு நெருக்கமானவங்களோட பிறந்தநாளை ஞாபகம்வெச்சு சர்ப்ரைஸ் கொடுத்துடுவேன். மூன்று வருஷமாவே 'தெய்வமகள்' சீரியலில் நடிக்கும் நண்பர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துட்டிருக்கேன். என் பிறந்தநாளான அக்டோபர் 28-ம் தேதியையொட்டி எப்படியும் நான்கு நாள் லீவு எடுத்துக்கிட்டு குடும்பத்தோடு இருப்பேன். இந்தமுறை நேற்று காலை எழுந்ததும், 'இன்னிக்கு யாருக்கோ பிறந்தநாளாச்சே'னு யோசிக்கிறேன். கொஞ்சம் நேரம் கழிச்சுதான் 'அச்சச்சோ கிருஷ்ணாவுக்குப் பிறந்தநாளாச்சே'னு ஞாபகம் வந்துச்சு. ஆனாலும். இன்னிக்குத்தானானு ஒரு சின்ன சந்தேகம். 

ஷூட்டிங் ஸ்பாட் போனதும், 'ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா'னு வாழ்த்தினேன். அவரும் 'தேங்க்யூ'னு சொன்னார். பிறகுதான், 'ஸ்ஸ்ப்பா... இன்னிக்குத்தான்னு உறுதிப்படுத்திக்கிட்டேன். அப்புறம், ரேகா குமார் உதவியோடு சாக்லெட் கேக் ஆர்டர் பண்ணினோம். கிருஷ்ணாவுக்கு சாக்லெட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ரொம்பப் பிடிக்கும். முதல்ல ஸ்ட்ராபெர்ரி கேக் வாங்க நினைச்சோம். இதுவரை இந்த வெரைட்டி கேக் ஆர்டர் பண்ணினதில்லை. அதனால், 'ரிஸ்க் வேண்டாமே'னு சாக்லெட் கேக் ஆர்டர் பண்ணினோம். மதிய நேரத்தில், கிருஷ்ணாவை மேக்கப் ரூமுக்கு கூப்பிட்டோம். அவர் ஏதோ டயலாக் சொல்லிக்கொடுக்க கூப்பிடறதா நினைச்சு வந்தார். உள்ளே நுழைஞ்சதும் எல்லோரும் சேர்ந்து 'ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா'னு சொன்னதும் திகைச்சுட்டார். அவர் பிறந்தநாளை வருஷா வருஷம் குடும்பத்தோடு கொண்டாடுவார். அதனால், சீக்கிரம் ஷூட்டிங் முடிச்சுட்டு கிளம்பிட்டார். என்ன ஒண்ணு இந்தக் கொண்டாட்டத்தில் டைரக்டர் குமரன் சார் மிஸ்ஸிங். அவர் இருந்திருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்'' என்கிறார் வாணிபோஜன் பூரிப்போடு. 

பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவைக் காண கீழே உள்ள படத்தைக் க்ளிக் செய்யவும்...

அடுத்துப் பேசிய ரேகா குமார், ''இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கிருஷ்ணா, வாணிபோஜன், அரவிந்த், கேமராமேன், கணேஷ் சார் (மூர்த்தியாக நடிப்பவர்) என எல்லோருமே இருந்தோம். எனக்கு, கிருஷ்ணா, வாணிபோஜன் என மூன்று பேருக்குமே சாக்லெட்னா அவ்வளவு பிடிக்கும். வெண்ணிற ஆடை நிர்மலா மேடம், எப்போ ஷூட்டிங் ஸ்பாட் வந்தாலும், சாக்லெட்டோடுதான் வருவாங்க. அந்த சாக்லெட்டைப் பிடிங்கி சாப்பிட்ட எங்களுக்குள் செல்லச் சண்டை நடக்கும். இப்போதான் இரண்டு குழுவா பிரிஞ்சாச்சே. அதனால், திலகா கேரக்டரோடு இருக்கும் டீமுக்குத் தனியாகவும், எங்க டீமுக்குத் தனியாகவும் ஷூட்டிங் லொக்கேஷன் இருக்கும். ஆரம்பத்தில் நாங்க ஒரே வீட்டில் நடிச்சுட்டிருந்தபோது இன்னும் கலாட்டாவாக இருக்கும். இந்தக் கொண்டாட்டத்தில் கிருஷ்ணா செம்ம ஹேப்பி. இதுக்கு முன்னாடி கிருஷ்ணாவுக்கு வாட்ச், வாணிக்கு ஹெட்செட் என கிஃப்ட் கொடுத்திருக்கோம். இந்த வருஷம் திடீர்னு செஞ்சதால் எதுவும் கொடுக்க முடியலை. இனிமேதான் பிளான் பண்ணணும். கிருஷ்ணாவின் பிறந்தநாள் செலிபிரேஷனாக லஞ்ச் பார்ட்டி வைக்கச் சொல்லணும். வரலைன்னா குண்டுகட்டா தூக்கிட்டுப்போய் சாப்பிட்டுட்டு, பில்லை தலையில் கட்டிடுவோம். இந்த சர்ப்ரைஸை கிருஷ்ணாகிட்ட சொல்லிடாதீங்க'' எனச் சிரிக்கிறார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு