Published:Updated:

’’எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை..!’’ - கொந்தளித்த ரஜினி

மா.பாண்டியராஜன்
’’எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை..!’’ - கொந்தளித்த ரஜினி
’’எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை..!’’ - கொந்தளித்த ரஜினி

ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஃப்சி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் 'காலா', 'மெர்சல்' உள்ளிட்ட 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று தெரிவித்தார். மேலும் கமல், ரஜினி இணைந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டு செல்வமணி பேசினார்.  இந்நிலையில், செல்வமணி தலைமையிலான நிர்வாகிகள் இன்று ரஜினியை சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, ரஜினி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ’எனக்கு பிடிக்காத சில சொற்களில், ‘வேலை நிறுத்தம்’ என்பதும் ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி இரு தரப்பும் பேசி, சுமுகமான முடிவு எடுங்கள். மூத்த கலைஞன் என்கிற முறையில் இது எனது அன்பான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.