‛அசத்தட்டும் அஜித்திஸம்!'- பிரபலங்கள் வாழ்த்துமழை! #AK25

பிறந்த நாளை மட்டும்தான் இப்படி கொண்டாடுவார்கள் என்றால், சினிமாவுக்கு வந்து  25 ஆண்டுகள் ஆனதையும் கொண்டாடித் தீர்க்கின்றனர் அஜித் ரசிகர்கள். அன்றிலிருந்து இன்று வரை பல பெண்களுக்கு கனவு நாயகனாகவும், ஆண்களுக்கு உழைப்பால் சாதித்த முன்னோடியாகவும் திகழ்கிறார் அஜித். பல்வேறு மட்டங்களிலும் அன்பைத் தெளிக்கும் ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் அஜித் சிலையைத் திறக்க அடிக்கல் நாட்டினர். மேலும், நெல்லையிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் அமைந்திருக்கும்  ஒரு கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் 45 லட்சம் ரூபாய் செலவில் நூலகத்துடன் கூடிய அஜித் சிலை நிறுவும் பணி நடக்கிறது. 'ரசிகர் மன்றங்கள் வேண்டாம்' என்று அஜித் சொன்ன பிறகும் கூட அவரின் பின்னால் இவ்வளவு ரசிகர்களா என மற்ற முன்னணி நடிகர்கள் வியக்கும் அளவிற்கு அவர்களின் அன்பு ஆர்ப்பரிக்க வைக்கிறது. 

Ajith

 

தவிர சினிமா பிரபலங்களும் அஜித்துக்கு தீவிர ரசிகர்களாகவே உள்ளனர். அஜித் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ், "நன்றி அஜித் சார். நல்ல மனிதராகவும் சரி, நடிகராகவும் சரி, பலருக்கு முன் மாதிரியாக இருந்து வருகிறீர்கள். சல்யூட்." என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ்

விவேகம், மெர்சல் மற்றும் AAA ஆகிய பாடல்களின் எடிட்டர் ரூபன், "அவரது சினிமா பயணம் தொடர வாழ்த்துக்கள். அன்பைக் காட்டும் ரசிகர்களுக்கும் நன்றி" என்றும் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், "இது அஜித் சாரின் தொடக்கம்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருக்கிறார்" என்று கூறியுள்ளார். 

நடிகர் அருண் விஜய், "இரண்டு தசாப்தங்களாக எழுச்சியூட்டி வரும் அஜித் சாருக்கு வாழ்த்துகள். உங்களுடன் சேர்ந்து வேலை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார். "2010-ஆம் ஆண்டு இதே நாளில்தான் மங்காத்தா டீஸர் வெளியானது. அஜீத்திஸம் தொடரட்டும்" என்று இயக்குநர் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். 

தொகுப்பாளினி டிடி, "சில நேரங்களில் இந்த உலகம் தான் பார்த்து வியந்த மனிதர்களை பற்றி பேச மறுக்கிறது. அஜித்தின் 25-வது வருடத்திற்கு வாழ்த்துகள்." என்று கூறியுள்ளார். 

"உங்களது 25வது வருட கொண்டாட்த்ததில் நானும் ஒரு பங்காக இருப்பது பெருமை. அஜித் சிறந்த நடிகர், கடுமையாக உழைப்பவர், சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்தவர், அவரது உற்சாகம் குழந்தை போன்றது என்று குறிப்பிட்டு மாத இதழ் ஒன்றில் அட்டை படமாக  வெளிவந்த அஜித் -காஜல்  புகைப்படத்தையும்  நடிகை காஜல் அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். 

காஜல் அகர்வால்

பொதுவாக நடிகரின் முதல் படம் வெளியான நாளைத்தான் கொண்டாடுவார்கள். ஆனால் அஜித்தைப் பொறுத்தவரை அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கும், திரை உலகினருக்கும் வெகு முக்கியமாகவே அமைகிறது. அந்தவகையில் சினி உலகில் அஜித் அடியெடுத்து வைத்த இந்த நாள் சம்திங் ஸ்பெஷல்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!