Published:Updated:

‛என்ன விளையாடுறீங்களா?’- டென்ஷனான பர்னிங் ஸ்டார்...! - தெலுங்கு பிக் பாஸ் அப்டேட்! #BiggBossTelugu

‛என்ன விளையாடுறீங்களா?’- டென்ஷனான பர்னிங் ஸ்டார்...! - தெலுங்கு பிக் பாஸ் அப்டேட்! #BiggBossTelugu
‛என்ன விளையாடுறீங்களா?’- டென்ஷனான பர்னிங் ஸ்டார்...! - தெலுங்கு பிக் பாஸ் அப்டேட்! #BiggBossTelugu

‛என்ன விளையாடுறீங்களா?’- டென்ஷனான பர்னிங் ஸ்டார்...! - தெலுங்கு பிக் பாஸ் அப்டேட்! #BiggBossTelugu

முதல் வாரம் போன்றே இரண்டாவது வாரத்திலும் அத்தனை எமோஷன்கள், சின்னச் சின்னத் தவறான புரிதல்கள், டாஸ்க்குகள், சில சர்ப்ரைஸ் எனக் கலவையாக இருந்தது தெலுங்கு `பிக் பாஸ்'. அதன் ஹைலைட்ஸ் இதோ...

இது ஒண்ணும் ஹாஸ்டல் கிடையாது:

* புது கேப்டனான கல்பனா, “ரூமை நீங்க க்ளீன் பண்ணுங்க. நீங்க டாய்லெட்டைச் சுத்தமா வெச்சுக்கோங்க" என எல்லோருக்கும் வேலைகளைப் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்தார். இது முமைத் கானுக்குப் பிடிக்கவில்லை, ``க்யாரே... க்யூ இத்னே ஸ்ட்ரிக்ட்மே, இது ஹாஸ்டல் கிடையாதுல. எதுக்கு இப்படி ஸ்ட்ரிக்டா இருக்காங்க?" என முமைத் அழ, அவரை கல்பனா சமாதானப்படுத்தியது தனிக்கதை.

* தொடர்ந்து அடுத்த நாளும் ``ஏம்மா, எழுந்ததும் பெட்டை மடிச்சு வைக்க எவ்வளோ நேரம் ஆகப்போகுது?" எனக் கல்பனா க்ளாஸ் எடுக்க, இதையே அன்றைக்குப் பெரிய டாப்பிக்காக எல்லோரும் பேசினார்கள்.

காபி பொடியைக் காணோம்:

* தன்ராஜ் சமைத்துக்கொண்டிருக்கும்போது ஜாலியாகப் பாட ஆரம்பிக்க, எசப்பாட்டை ஸ்பானிஷ் மொழியில் பாடிக்கொண்டே கல்பனா வருகிறார். கல்பனா பாட, தன்ராஜ் பாலே ஆட ஒரே ரகளையானது இடம்.

* `வீட்டில் இருக்கும் பெண்களிடம், ஆண்கள் எல்லோரும் ப்ரப்போஸ் செய்ய வேண்டும். போட்டி முடிந்ததும், யார் மிக அழகாக ப்ரப்போஸ் செய்தார் என, பெண்கள் ரிசல்ட் கூற வேண்டும்' என்று டாஸ்க் கொடுக்கப்பட, வீடு முழுக்க ப்ரப்போஸ்கள் பறக்கின்றன. அதில், ``உன்னை நான் காதலிக்கிறேன். நீ உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. நான் உன்னோட கல்யாணம் வரை காத்திருப்பேன். அது என்கூட நடக்கும்கிற நம்பிக்கையில" என தன்ராஜ் செய்த ப்ரப்போஸ்தான் ஹைலைட்.

* முமைத், அர்ச்சனா இருவரும் காபிப்பொடியை ஒளித்துவைத்தது, வீட்டுக்குள் நடந்த நாடகம், கேப்டனுக்கான போட்டி, சிவபாலாஜி குளிக்காதது என ஐந்து நாள்களில் நடந்தை எல்லாம் ஜூனியர் என்.டி.ஆர் ரீகேப் செய்ய, வீட்டில் இருப்பவர்களுக்குள்ளேயே ``இதெல்லாம் எப்ப நடந்துச்சு... சொல்லவே இல்ல!" என்ற ரியாக்‌ஷன்கள். 

* அர்ச்சனா மற்றும் சமீர் கேமரா முன் நின்று ``எங்களுக்கு இந்த டாஸ்கெல்லாம் போரடிக்குது. ஒருநாள் முழுக்க நடக்கிற மாதிரி பார்ட்டி ஏற்பாடு பண்ணுங்க. ஒயின், சாக்லேட் எல்லாம் குடுக்கச் சொல்லுங்க" எனக் கேட்ட க்ளிப்பிங்கைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர், ``நான் இங்கே `பிக் பாஸ்' நடத்துறேனா இல்லை பார் நடத்துறேனா?" எனக் கலாய்த்துவிட்டு, ``வெளுத்துப்புடுவேன் வெளுத்து. அதெல்லாம் இங்கே கிடைக்காது. மறுபடியும் கேட்காதீங்க" எனக் கண்டித்தார்.

நாமினேஷன்:

* சம்பூவும் மதுவும் `வீட்டுக்குப் போக வேண்டும்' என அழுது புலம்பிக்கொண்டே இருப்பதால், இந்த இருவரையுமே எல்லோரும் நாமினேட் செய்தார்கள். சமீர், பிரின்ஸ், மது ப்ரியா, சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டார்கள்.

உங்களுடைய வில்லன் யார்?:

* `கார்டன் ஏரியாவில் நான்கு கூண்டுகள் உள்ளன. வேட்டைக்காரர்கள், வெளியே உள்ள விலங்குகள், கூண்டுக்குள்ளே உள்ள விலங்குகள் எனப் போட்டியாளர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். கல்பனா, சமீர், சிவபாலாஜி ஆகியோர் வேட்டைக்காரர்கள். வெளியே சுதந்திரமாக இருக்கும் விலங்குகளாக முமைத், பிரின்ஸ், ஆதர்ஷும், கூண்டுக்குள் அடைப்பட்ட விலங்குகளாக மது ப்ரியா, கார்த்திகா, தன்ராஜ், ஹரிதேஜா, அர்ச்சனா, மகேஷ் கத்தி ஆகியோரும் இருப்பார்கள். டாஸ்க் முடியும் வரை விலங்குகள், பழங்களும் காய்கறிகளும் மட்டுமே சாப்பிட வேண்டும். வெளியே இருக்கும் விலங்குகள், கூண்டுக்குள் இருக்கும் விலங்குகளை விடுதலை செய்யவேண்டும். ஆனால், ஒருமுறை ஒரு விலங்கை மட்டுமே விடுதலை செய்ய முடியும். இது நடக்காமல் வேட்டைக்காரர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இறுதியில் வேட்டைக்காரர்களோ, விலங்குகளோ யாரேனும் ஒரு குழு வெற்றியடைவார்கள்'. ``சரிங்க சரிங்க... பண்ணிடலாம்" எனச் சொல்லிவிட்டு, சொதப்பலாக அந்த டாஸ்கைச் செய்ய, ``உங்களுக்கு லக்ஸூரி பாயின்ட்ஸும் கிடையாது... ஒண்ணும் கிடையாது" என காண்டாகிறார் `பிக் பாஸ்'.

* `வீட்டுக்குப் போகணும்', `இவ்வளவு கண்டீஷன்லாம் ஆகாது' என எங்கு திரும்பினாலும் ஒரே அழுகையாக இருப்பதால், வீட்டினருக்குக் கலகலப்பாக்க ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.  `வீட்டினர் ஒவ்வொருவருக்கும் ஒரு திரைப்படக் கதாபாத்திரம் வழங்கப்படுகிறது. அவர்களிடம் உள்ள பொருள்களைக்கொண்டே அந்தக் கதாபாத்திரம்போல மேக்கப் செய்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றதுபோல ஒரு நாடகத்தை நடித்துக்காட்ட வேண்டும். இறுதியில் அவர்களுக்குள்ளேயே சிறந்த நடிகர், சிறந்த நடிகை யார் என முடிவுசெய்துகொள்ள வேண்டும். நாடகம் முடிந்து கல்பனாவை சிறந்த நடிகையாகவும், ஆதர்ஷை சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுத்தது குழு. 

* வார இறுதியில் எலிமினேஷன் பற்றிப் பேசும் முன், போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார் ஜூனியர் என்.டி.ஆர். கத்தியால் செய்யப்பட்ட நாற்காலி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பிவைத்து, ``இந்த வீட்டில் நீங்கள் யாரை வில்லனாக நினைக்கிறீர்களோ அவரை அந்த நாற்காலியில் உட்காரவைத்து, ஏன் அவரை வில்லனாக நினைக்கிறீர்கள்?" எனச் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வில்லனை நாற்காலியில் அமரவைத்து அறிமுகப்படுத்தி, அதற்குக் காரணம் சொல்லி, `இதை சீரியஸா எடுத்துக்காதீங்க" எனச் சமாளித்து டாஸ்க்கை ஒருவழியாக முடித்தார்கள்.

கேப்டனுக்கு குதிரை ரேஸ்:

* கேப்டனுக்கான தேர்வுக்கும் வித்தியாசமான போட்டி ஒன்றை யோசித்துவைத்திருந்தது `பிக் பாஸ்' குழு. பெரிய சைஸ் பொம்மை குதிரை அது. அதில் போட்டியாளர்கள் ஏறி அமர்ந்துகொள்ளவேண்டும். யார் அதிக நேரம் ஆடுகிறார்களோ அவர்கள்தான் கேப்டன். ஈஸியாகத் தோன்றுகிறதா, அங்கேதான் ட்விஸ்ட். ஆடிக்கொண்டிருக்கும்போதே இடையிடையில் பஸர் ஒலிக்கும். அப்போது குதிரையில் அமர்ந்திருப்பவருக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கப்படும். அதை, குதிரையில் ஆடிக்கொண்டே, ஒரே மூச்சில் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்ததால் ஏற்படும் நெருக்கடியையும் தாங்கிக்கொண்டு, யார் அதிகநேரம் குதிரையில் ஆடுகிறாரோ, அவரே கேப்டன். எப்பூடி..? கலந்துகொண்ட மூவரில், சிவபாலாஜி முதலில் இறங்கிவிட, மீதம் இருக்கும் பிரின்ஸையும் கல்பனாவையும் உற்சாகப்படுத்த, பாட ஆரம்பித்தார் மது ப்ரியா. கடைசியில் பிரின்ஸ் வெற்றி பெற்று கேப்டன் ஆனார்.

டென்ஷனான சம்பூ:

* ஏதோ ஒரு காரணத்துக்காக, வீட்டிலிருந்து கார்டன் ஏரியாவுக்கும் கழிவறைக்கும் செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே நான்கு சுவருக்குள் அடைப்பட்ட ஃபீலிங்கில் இருந்த சம்பூ, மேலும் வெறியானார். கையில் இருந்த தலையணையை விசிறியடித்து டென்ஷனான சம்பூவை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்த முயற்சிசெய்தார்கள். ஆனால், சம்பூ இன்னும் இன்னும் கோபமாகி ``என்ன விளையாடுறீங்களா?" என கேமரா முன் கத்தினார். சிறிது நேரத்திலேயே  கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்படுகிறார் சம்பூர்னேஷ். ``என்னால இந்த நாலு சுவருக்குள்ள இருக்க முடியலை. நான் கிளம்புறேன்" எனச் சொல்ல, ``நீங்க உங்க விருப்பத்தோடுதானே உள்ளே வந்தீங்க. `பிக் பாஸ்' விதிமுறைகளை மாற்ற முடியாது. நீங்க இங்கே இருக்கும்வரை விதிகளைக் கடைப்பிடிச்சுதான் ஆகணும்" என்றார் பிக்பாஸ். ``இல்லை, நான் இங்கேயிருந்து போயே ஆகணும்" என பரணியின் தெலுங்கு வெர்ஷன்போல சம்பூ பேச, ``சரி, கன்ஃபெஷன் ரூமிலிருக்கும் இடதுபுறக் கதவைத் திறந்து நீங்கள் வெளியே போகலாம்" என அனுப்பிவைக்கிறார் `பிக் பாஸ்'.

* திடீரென முமைத் கான் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார். ``சில சட்டப் பிரச்னைகள் காரணமாக நீங்கள் `பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது. தன் உடைகளை பேக் செய்யும் முமைத்தைப் பார்க்கும் மற்றவர்கள், `ஏதோ விளையாடுகிறார்போல' என எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சீரியஸாகக் கிளம்புவதைப் பார்த்ததும் `என்ன காரணம்?' எனக் கேட்டு நச்சரித்தார்கள். ஆனால், அவர்களுக்குக் காரணம் என்ன என எதுவும் சொல்லாமல் கிளம்பினார் முமைத். அவரின் `தோஸ்த்து... படா தோஸ்த்து' தன்ராஜ் கதறி அழ ஆரம்பிக்க, `பேபி... இட்ஸ் ஓகே. நான் போயே ஆகணும்" என சமாதானம் செய்து அங்கிருந்து வெளியேறினார் முமைத். 

திடீர் ரீஎன்ட்ரி:

நள்ளிரவு திடீரென விளக்குகள் ஒளிர்கின்றன. கன்ஃபெஷன் ரூமிலிருந்து முமைத் ஒவ்வொருவர் பேராகச் சொல்ல ஆரம்பிக்கிறார். எல்லோரும் முமைத் திரும்ப வரப்போகிறார் என உற்சாகமானார்கள். அதேபோல ஸ்டோர் ரூமிலிருந்து கம்பேக் கொடுத்தார் முமைத். 

`பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய சம்பூவை மேடையில் அழைத்து ``என்ன ஆச்சு?" என விசாரித்தார் ஜூனியர் என்.டி.ஆர். ``என்னால நாலு சுவருக்கு நடுவுல இருக்க முடியலை. அதனால்தான் கிளம்பினேன்" எனத் தழுதழுத்தபடி பேசுகிறார். ஆனா, வீட்டுக்குப் போய் ஃபேஸ்புக் பார்த்தபோதுதான் என்னை எல்லாரும் எப்படி எல்லாம் கலாய்ச்சிருக்காங்கனு தெரிஞ்சது. அப்பதான் ரொம்ப கஷ்டமா இருந்தது" எனச் சொன்ன சம்பூவை ``கூல்டவுன் பர்னிங் ஸ்டார், எல்லாம் சரியாகிடும்" எனத் தேற்றி அனுப்பிவைத்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

கத்தி சிக்கன்:

எலிமினேஷன் பரபரப்புக்கிடையில், “மகேஷ் கத்திகாரு, நீங்க சிக்கன் கறியைப் பிரமாதமா சமைப்பீங்கனு சொன்னீங்க. ஆனா, அதை ஒருநாள்கூட செஞ்சு நான் பார்த்ததில்லை. என்ன செய்வீங்களோ தெரியாது. இன்னிக்கு அதைச் செய்றீங்க, நான் சாப்பிடுறேன்" என ஜூனியர் என்.டி.ஆர் கண்டிஷன்போட, கிச்சனுக்குப் போய் மசாலாக்களைப் பறக்கவிட்டு சிக்கன் கறி செய்து கொடுக்கிறார் மகேஷ் கத்தி. ஸ்டோர் ரூமிலிருந்து `பிக் பாஸ்' மேடைக்கு டோர்டெலிவரியானது சிக்கன் கறி. அதை மேடையில் சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிட்டு ``வாவ், பின்னிட்டீங்க மகேஷ் காரூ. இந்த ரெசிப்பிக்கு நானே ஒரு பேர் வெக்கிறேன், `கத்தி சிக்கன்' ” என முழு கிண்ணத்தையும் காலி செய்தார். 

எலிமினேஷன்:

இறுதியில் மது ப்ரியாதான் எலிமினேட் ஆகிறார் என அறிவிக்கப்பட்டதும் மேடைக்கு வந்தார் மது. `பிக் பாஸ்' என்ன கற்றுத் தந்தது, கேப்டன் ஆன பிறகு கல்பனாவின் மாற்றம், மோசமான ஹவுஸ் மேட், நல்ல ஹவுஸ் மேட், ஒவ்வொரு ஹவுஸ் மேட் பற்றியும் ஒரு வாக்கியம் எழுதுவது, மார்க் கொடுப்பது எனப் பல டாஸ்க்குகள் மேடைலேயே மது ப்ரியாவுக்குக் கொடுக்கப்பட்டு, ஜோதிக்குக் கொடுத்ததுபோல ஸ்பெஷல் பவர் மதுவுக்கும் கொடுக்கப்பட்டது. ``இரண்டு நபர்களைக் குறிப்பிட வேண்டும். மது சொல்லும் இரண்டாவது நபர், முதல் நபருக்கு வேலைக்காரராக ஒரு வாரம் பணியாற்ற வேண்டும். இதுதான் மதுவுக்குக் கொடுக்கப்பட்ட பவர். கல்பனாவுக்கு அர்ச்சனா வேலைக்காரராக இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு, ``விடுதலை... விடுதலை'' என ஜாலியாகக் கிளம்பினார் மது ப்ரியா.

புதுமுகம்:

“14 நான்கு பேர் போன `பிக் பாஸ்' வீட்டுல, இப்போ 11 பேர்தான் இருக்காங்க. அதனால அந்தப் பதினொன்னை பன்னெண்டா மாத்தலாம்னு `பிக் பாஸ்' முடிவுபண்ணியிருக்கார். யார் வர்றாங்கனு நீங்களே பாருங்க" என அறிமுகம் தந்துவுடன் தீக்‌ஷா பன்த் செம பெர்ஃபாமன்ஸுடன் மேடைக்கு வந்தார். இங்கு பிந்து மாதவியைப் புது கன்டஸ்டன்ட்டாகச் சேர்த்ததுபோல அங்கு தீக்‌ஷாவைப் புதிதாகச் சேர்த்தார்கள். அவரின் என்ட்ரி... அடுத்த பதிவில்!

அடுத்த கட்டுரைக்கு