Published:Updated:

'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்!' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி

'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்!' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி
'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்!' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி

'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்!' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி

'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கும் ஓவியாவின் காதலுக்கு ஆரவ் சம்மதம் தெரிவிப்பாரா என்று ஓவியாவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, ஆரவ்வின் அண்ணன் நதீம், என் தம்பி ஆரவ் மீது அதீத நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி-யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசாதவர்களும் மீம்ஸ் போடாதவர்களும் இல்லை என்னும் அளவுக்கு 'பிக் பாஸ்' காய்ச்சல் எல்லோரையும் தாக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி எல்லாம் ஸ்க்ரிப்ட்தான். நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சில விஷயங்களை நிகழ்ச்சிக்குள் வலுக்கட்டாயமாகப் புகுத்துகிறார்கள் என்ற டாக்கும் 'பிக் பாஸ்' பார்வையாளர்களிடம் உண்டு. இதனிடையே 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சமூகத்தில் நிலவும் கலாசாரத்தைச் சீரழிக்கிறது. அதனால் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சிலர் போர்க்கொடியும், அவ்வப்போது  நிகழ்ச்சிக்குத் தடை கோரி நீதிமன்றம் வாசலையும் மிதித்து வருகின்றனர்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். அதற்குக் காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்றுயிருக்கும் போட்டியாளர்களின் விவாதங்கள், போட்டிகள், கண்ணீர் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடிகை ஓவியா, ஆரவ் மேல் வைத்திருக்கும் காதல் என்று சொல்லலாம். 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளிருக்கும் ஆரவ் பற்றி, அவரின் குடும்பத்தினர் என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆரவ்வின் அண்ணன் நதீமைத் தொடர்புகொண்டோம்.

''எங்கள் வீட்டில் கடைக்குட்டி ஆரவ்தான். அவர் இன்ஜினீயரிங் முடித்தவுடன் படிப்புக்குத் தொடர்புடைய ஒரு கம்பெனியில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால், அவருக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை. காலேஜ் முடிக்கும் வரை நடக்கும் அனைத்து கலைநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். நல்ல பாடகரும்கூட. 
ஒருநாள் எங்களிடம் வந்து உங்கள் ஆசைபோல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். என்னுடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும். அதனால் என்னை சினிமாவில் நடிக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். நாங்கள் முதலில் மறுத்தோம், பின்பு அவர் சினிமாவில் மிகவும் கண்ணியமாகயிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி மாதிரி பெரிய ஆள்களைச் சுட்டிக் காட்டி இவர்களைப்போல் கண்ணியமாக இருப்பேன் என்று வாக்குக்கொடுத்தார்.  


'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ஆரவ் செல்வதற்கு அழைப்பு வந்தபோது, அவர் என்னுடன்தான் இருந்தார். நூறு நாள்கள் வெளியுறவுத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார். கேட்கும்போது கஷ்டமாகயிருந்தது. இதுவரை ஆரவ்வைப் பார்க்காமல் இத்தனை நாள்கள் இருந்ததே இல்லை'' என்றவரிடம் 'பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரவ்வின் செயல்கள் பார்க்கும்போது எப்படி இருக்கும் என்று கேட்டால், ''என்னுடன் இருக்கும்போது மட்டும்தான் ஆரவ்வை என் தம்பியாகப் பார்ப்பேன். திரையினுள் ஆரவ்வைப் பார்க்கும்போது ஒரு நடிகனாக மட்டும்தான் பார்ப்பேன். அவர் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சினிமாவில் நடிப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதுபோல்தான் எனக்குத் தோன்றும். அது ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் அப்படிதான் பார்க்கிறேன்'' என்றவரிடம்,
''ஒருவேளை ஓவியாவை, ஆரவ் காதலித்தால் ஒப்புக்கொள்வீர்களா என்றால், ''என் தம்பி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அப்படி செய்யமாட்டார். அவர் மீது நம்பிக்கை உள்ளது. ஆரவ் இந்த 'பிக் பாஸ்' டைட்டிலில் வெற்றி பெறுவார். அவர் மட்டுமில்லை, ஓவியா, ஆரவ் இருவரும் இந்த டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது. அவர்கள் இருவரும்தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். அவர்கள் செய்வது எல்லாம் 'பிக் பாஸ்' அவர்களுக்கு கொடுத்திருக்கும் டாஸ்காகத்தான் இருக்கும்'' அவர்கள் இருவரும் அதற்காகத்தான் அங்கு நடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்'' என்று சொன்னார் ஆரவ் அண்ணன் நதீம்.

அடுத்த கட்டுரைக்கு