Published:Updated:

‘வழவழா கொழகொழானு இல்லாம ரஜினி தைரியமா பேசணும்!’ - கஸ்தூரி அகெய்ன்

‘வழவழா கொழகொழானு இல்லாம ரஜினி தைரியமா பேசணும்!’ -   கஸ்தூரி அகெய்ன்
‘வழவழா கொழகொழானு இல்லாம ரஜினி தைரியமா பேசணும்!’ - கஸ்தூரி அகெய்ன்

‘வழவழா கொழகொழானு இல்லாம ரஜினி தைரியமா பேசணும்!’ - கஸ்தூரி அகெய்ன்

சரியோ, தவறோ தான் விமர்சிப்பது யாராக இருந்தாலும் எதிர்வினைகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய கருத்துக்களை செம தில்லாக வெளிப்படுத்தும் நடிகை கஸ்தூரியிடம் பல விஷயங்களைப் பேசியதிலிருந்து...

‘கஸ்தூரி எப்போதும் தன்னை லைம்லைட்ல வெச்சிக்கணும்னே எல்லா விஷயத்துக்கும் கருத்து சொல்றாங்க’ன்னு உங்கள குறித்து ஒரு பேச்சு உண்டு.  சினிமாவுல தீவிரமா நடிச்சுட்டு இருந்தப்போலாம் கஸ்தூரி எதுவும் பேசாம,   இவ்ளோ நாள் கழிச்சு திடீர்னுதான் நீங்க இப்டி பேச ஆரம்பிச்சு இருக்கீங்களே?

உண்மைதாங்க. சினிமாவுல 16 வயசுல நடிக்க வந்தேன். 24 வயசுல கல்யாணம் ஆய்டுச்சு. அமெரிக்கா போயிட்டேன். போன வருஷந்தான் இந்தியாவுக்கு வந்தேன். உண்மைய சொல்லனும்னா சினிமால இருந்த எட்டு வருஷத்துல இந்த மாதிரிலாம் கருத்து சொல்றதுக்கு எனக்கு நேரமும் இல்ல. மெச்சூரிட்டியும் இல்லைங்கிறதுதான் காரணம்.

அரசியல் சார்ந்த விஷயங்கள்ல சமூக வலைதளங்கள்ல தங்களோட எண்ணத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துறதுல நடிகைகள் ரொம்ப குறைவா இருக்காங்களே ஏன்?

பெண்களுக்கு மரியாதை குடுக்கிற கலாசாரம் இன்னும் இங்க வரல. பொண்ணுங்கள ஒன்னு கும்பிடத் தோணுது. இல்லாட்டி கூப்பிடத் தோணுது. இது ரெண்டுக்கும் நடுவுல பெண்களை அணுகணும்கிற கண்ணோட்டம் காலங்காலமா இங்கில்ல. அப்டிபட்டவங்க அதிகமா இருக்கிற ஊர்ல ஒரு சாதாரண பொண்ணு கருத்து சொன்னாலே 'பொட்டச்சிக்கு என்ன தெரியும்னு' கேக்ற சமூகம்ங்க இது. இந்த நிலையில நடிகைங்க கருத்து சொன்னா கேக்கவா வேணும். அவங்க தனிப்பட்ட வாழ்க்கைய இழுப்பாங்க. . இதெல்லாம் பொருட்படுத்தாம அந்த நடிகை தன்னோட அரசியல் பார்வையை முன் வெச்சாலும் அந்த நடிகையை பத்தி விமர்சனம் செய்றதுல்லாம் அவங்க குடும்பமும் இயல்பா ஏத்துக்கிற மனநில வர்றப்போ இன்னும் அதிகமான நடிகைகள் அரசியலுக்கு வருவாங்க இது நடிகைகளுக்கு மட்டுமில்ல. எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்.

இப்படி பல பிரச்சனைகளையும் தாண்டி உங்களபோல மனோதிடத்துடன் சமூக வலைத்தளங்கள்ல கருத்து சொல்ற நடிகை யாரு?

இருக்காங்க. நடிகை மட்டுமில்ல அரசியல்வாதியும் கூட. நா சொல்றது குஷ்பு அவங்களதான். கடுமையான விமர்சனங்கள்லாம் அவங்க மீது வந்தா கூட தன்னோட கருத்துல உறுதியா இருந்து தைரியமா பேசிட்டு வராங்க. தெரியலன்னா கூட தெரிஞ்சிட்டு வந்து பேசுறாங்க. ஆனா அவங்க சார்ந்த கட்சிலயும், அதோட கொள்கைகள்லயும் எனக்கு உடன்பாடு கிடையாது.

கவிதைலாம் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க போலயே.... தமிழ்ல உங்களுக்கு புடிச்ச எழுத்தாளர் யாரு?

தமிழ் மட்டுமில்ல. இன்னும் சில மொழிகள்லயும் வாசிப்பேன். எனக்கு மொழிகள் மேல காதல் உண்டு. ஆனா தமிழ்ங்கிறது தாய்ப்பாசம் இல்லையா? அப்டி தாய்ப்பாசத்தோட வாசிச்சதுல என்னோட அபிமான எழுத்தாளர்கள்னா பாரதியார், புதுமைப்பித்தன், சுஜாதா. ஏன்னா இவங்க மூணு பேருதான் அவங்க காலத்தவிட ரொம்ப அட்வான்ஸா எழுதுனவங்க.

கமலோட அரசியல் கருத்துக்களை நியாயப்படுத்துறீங்க. ஆனா அவரோட விமர்சனம் எல்லாம் மாநில அரசுக்கு மட்டுமானதா இருக்கே?

இல்லைல்ல. அவர் எல்லாரையும்தான் விமர்சிக்கிறார். ஜி.எஸ்.டி'ய விமர்சிக்கலயா? யாரை எதிர்க்கவும் அவர் தயங்குனது இல்ல. கமல் எப்பவும் எதிர்கட்சி. அதனாலதான் அவர் அரசியலுக்கு வரமாட்டார்னு நா நெனக்கிறேன்.

கமலோட நிலைப்பாடு இவ்ளோ தெளிவா இருக்கு ஓக்கே. மக்கள் உரிமை சார்ந்த போராட்டங்கள் நடந்துச்சு, நடந்துட்டு இருக்கு. இது எதுக்குமே குரல் கொடுக்காம நேரடியா போர் வரும்போது பாத்துக்கலாம்னு ரஜினி சொல்றாரே.. ?

அவர் எது பேசினாலும் பூதாகரமா வெடிச்சுடுமோன்னு ஒரு ஜாக்கிரதை உணர்வுலதான் அவர் அலர்ட்டா இருக்காரு. ஆனா இப்போ எல்லோருமே கேக்கறோம். அவர் இதுக்கு மேல அமைதியா இருக்காம தன்னோட நிலைப்பாட சொல்றதுதான் நல்லா இருக்கும்னு நெனக்கிறேன். வழவழ கொழகொழன்னு இல்லாம தைரியமா பேசலாம்.

உச்ச நடிகர் நடிகைகள் சம்பளம் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி மற்ற விலையேற்றத்துக்கும் காரணமா இருக்கே... நியாயமான சம்பளம்தான் நட்சத்திரங்கள் வாங்குறாங்களா? அப்படி வாங்கியும் அந்தப் படம் வெற்றியடைலைன்னா பணம் போட்டவங்களோட நஷ்டத்துல பங்கெடுத்துகிறாங்களா?

இந்தியாவுல பெரிய லாயர் ராம்ஜெத் மலானி. ஒரு அப்பீலுக்கு கோடில வாங்குறாரு. அதுக்காக அவர் வாதாடுற கேஸ்லாம் ஜெயிக்கிறாரா என்ன? ஆனா அவர் வாதாடுறார்னு சொல்லிகிறதுல ஒரு கெத்து இருக்குல்ல. பெரிய ஹாஸ்பிட்டல்ல போய் வைத்தியம் பாக்கிறவங்க எல்லாம் பொழச்சிகிறாங்களா என்ன. நடிகர்களோட பாப்புலாரிட்டி, அவங்களோட ஈர்ப்பு சக்தி இதெல்லாம் வெச்சித்தான் அவங்களுக்கு சம்பளம் தர்றாங்க. சும்மா அதிகம் தரணும்னு ஒன்னும் வேண்டுதல் இல்ல. இந்த குதிர மேல இவ்ளோ வெச்சு பந்தயம் ஆடுனா நமக்கு இவ்ளோ லாபம் வரும்னு கணக்குலதான் செய்றாங்க. அவங்க பேராசைக்கு நடிகர்கள் எப்டி பொறுப்பு ஏற்க முடியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தையை கமல் கண்டிக்கவில்லையே.. பிக் பாஸ் பாக்றீங்களா?

அப்பப்போ பாப்பேன். கமல் அவரா யோசிச்சு அவரா எல்லாத்தையும் பேசுறது இல்ல. ஸ்க்ரிப்ட்ல என்ன இருக்கோ அதுல இருந்து மிகச்சிறிய மாற்றங்களோடதான் அவர் பேச முடியும். என்னோட தனிப்பட்ட கருத்த கேட்டீங்கன்னா சேரி அப்டிங்கிற வார்த்த குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த மக்கள் வாழுற பகுதின்னு எனக்குத் தெரியாது. இந்த பிரச்சன வந்தப்போதான் தெரிஞ்சிகிட்டேன். அந்த இனத்தவரோட நடத்தையை இழிவு படுத்துற மாதிரி சொல்லி இருந்தா தப்புதான். அதுமட்டுமல்ல ஜாதி பேரால எந்தவொரு இழிச்சொல் சொன்னாலும் அது தப்புதான்.

 சாதி ஒழியணும்னா என்ன தீர்வுன்னு நெனக்கிறீங்க?

இந்தந்த சாதிக்கு இந்தந்த சலுகைன்னு கொடுக்கிறத மொதல்ல நிறுத்தணணும். பட்டியல் இனத்தவர்கள்ல கூட இப்போ நெறையப்பேர் நல்லா உயர்ந்துட்டாங்க. ஆதிவாசிகள், பழங்குடிகள்க்கு மட்டும் அது கிடைக்கணும். இட ஒதுக்கீடு முறை தலைகீழா மாறணும். கண்டிப்பா பொருளாதார நிலையை வெச்சுதான் இடஒதுக்கீடு கொடுக்கணும். 

ஆனா இடஒதுக்கீடுங்கிறது பொருளாதார ரீதியா முன்னேறதுக்கு கொண்டு வந்தது இல்லையே.  தவிர அது சலுகை இல்ல குறிப்பிட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை தானே 

இல்லைங்க. இன்னைக்கு இட ஒதுக்கீடு சலுகைக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும்தான் பயன்பட்டுட்டு வருது. சமூகநீதி கொடுக்கிறதுக்கு பதிலா கஷ்டப்படுற ஒவ்வொருத்தருக்கும் இவ்ளோ அமௌவுண்ட்னு கொடுத்துடுங்க அது அவங்களுக்கு பயனா இருக்கும்.

நீங்க பொருளாதாரத்தையே திரும்பத் திரும்ப  அடிப்படையா வெச்சுட்டு சமூக நீதி பேசிட்டு இருக்கீங்க. பொருளாதாரங்கிறது நிலையற்றதுதானே அப்புறம் அத வெச்சுட்டு எப்டி இடஒதுக்கீடு, சமத்துவம்னுலாம் பேச முடியும்.

இங்க பாருங்க அவ்ளோ தாங்க செய்ய முடியும். எல்லாமே நிலையற்றதுதான். கொடுத்த காச குடிச்சு அழிச்சா என்ன பண்ண முடியும். 

சினிமாவுல திரும்பவும் குத்துப்பாட்டு ஆடுற வாய்ப்பு வந்தா ஆடுவீங்களா.

நிச்சயமா ஆடுவேன். வித்தியாசமான கம் பேக்கா இருந்தா அது இன்னும் சந்தோஷம். எனக்கு போலிஸ் அதிகாரியா நடிக்கணும்னு ரொம்ப ஆச. அந்த யூனிபார்ம் எனக்கு செட் ஆகும் நெனக்கிறேன். பாப்போம்.

அடுத்த கட்டுரைக்கு