Published:Updated:

'இறுதிச்சுற்று' இயக்குநரின் அடுத்த படத்தில் 'விக்ரம் வேதா' கனெக்ட்!

'இறுதிச்சுற்று' இயக்குநரின் அடுத்த படத்தில் 'விக்ரம் வேதா' கனெக்ட்!
'இறுதிச்சுற்று' இயக்குநரின் அடுத்த படத்தில் 'விக்ரம் வேதா' கனெக்ட்!

'இறுதிச்சுற்று' இயக்குநரின் அடுத்த படத்தில் 'விக்ரம் வேதா' கனெக்ட்!

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், 'விக்ரம் வேதா'. மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி நடித்திருக்கும் இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

படம் வெளியாவதற்கு முன்பாகவே, இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அதிக லைக்ஸ் அள்ளியது. குறிப்பாக, படத்தின் இசை அனைவராலும் ரசிக்கவைத்தது. படத்தில் இடம்பெற்றிருக்கும் 10 ஆடியோ ட்ராக்குகளும் வைரலானது. அறிமுக இசையமைப்பாளர் சி.எஸ்.சாமுக்கு இந்தப் படம் சிறந்த ஓப்பனிங்காவே இருந்தது. 'விக்ரம் வேதா' படத்துக்கு முன்பாகவே சாம், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் படமான  'புரியாத புதிர்' படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

ஆனால், இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே, 'விக்ரம் வேதா' திரைப்படம் வெளியாகி இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது. இதனால், இவரது இசையில் விரைவில் வெளிவரப்போகும் 'புரியாத புதிர்' படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, 'இறுதிச் சுற்று' இயக்குநர் சுதாவின் அடுத்த படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவில்லை. மேலும், சுதாவின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்  இவர்களில் ஒருவர் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு