Published:Updated:

ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னை..! முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னை..! முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னை..! முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

ஃபெப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 

ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னை..! முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாததால், ஏராளமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் கைவிடப்படுவதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.

போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து, இன்று வழக்கம்போல படப்பிடிப்புகள் நடைபெற்றன. இதனிடையே, ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெப்சி சம்மேளன நிர்வாகிகள், அரசுத் தரப்பு நிர்வாகிகள் இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.