Published:Updated:

சினிமால்

விகடன் விமர்சனக்குழு
சினிமால்

 'என் பேரு மீனாகுமாரி, என் ஊரு கன்யாகுமரி’ என்று கெட்ட ஆட்டம் போட்ட முமைத்கான் நல்ல பாடகியும்கூட என்று இப்போது தெரியவந்திருக்கிறது. 'அடிக்‌ஷன்’ என்ற மியூஸிக் ஆல்பத்தை வெளியிட்டு இசை மீதான தன் அடிக்‌ஷனை வெளிக்காட்டி யிருக்கிறார் முமைத். ஆல்பம் யூடியூபில் ஹிட்டடிக்க செம குஷியில் இருக்கிறார் முமைத்கான். அப்போ ஒரு டான்ஸ் போடலாமா?

சினிமால்
சினிமால்

 'யா யா’ என்ற படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த 'காதல்’ சந்தியா,  'கத்துக்குட்டி’ படத்தில் சூரிக்கு ஜோடியாக ஒரு குத்துப்பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார். எப்படி இருந்த சந்தியா..?!

சினிமால்

 'உயிர்மெய்’ தொலைக்காட்சித் தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும் அமலா நாகார்ஜுனா விடம், 'சினிமாவில் நடிப்பீர்களா'' என்று கேட்டால், 'பெண்களின் சக்தியைப் புலப்படுத்து கிற மாதிரி கேரக்டர் வந்தா நடிப்பேன். சும்மா அக்கா, அண்ணி, அம்மா எல்லாம் வேணாம். அதுவும் இப்போ இந்தத் தொடருக்கு 15 நாள், என் சமூக சேவைப் பணிகளுக்கு 15 நாள்னு டைம் போய்ட்டு இருக்கு. அதனால் இப்போதைக்கு நோ வெள்ளித்திரை'' என்கிறார். கெத்து!

சினிமால்
சினிமால்

 விக்ரம் நடிக்க விஜய் மில்டன் இயக்கும்’ பத்து எண்ணுறதுக்குள்ள’ படத்தில் விக்ரமின் நண்பராக நடிக்கிறார் 'முண்டாசுப்பட்டி’யில் முனீஸ்காந்தாக சிரிக்கவைத்த ராமதாஸ். இந்தப் படத்தில் ராமதாஸின் கேரக்டர் முனீஸ்காந்த் மகனாகவே வருகிறதாம். என்னமா புதுமை பண்றாங்கப்பா!

சினிமால்

 ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்த பிரபல ஈரான் இயக்குனர் மஜித் மஜிதி, 'ஏன் உங்கள் இந்தியப் படங்கள் எல்லாம் சொந்தக் கலாசாரம் பேசாமல் மேற்கத்தியப் படங்களாகவே இருக்கின்றன?'' என்று கேட்டாராம். ''அவருக்கு நல்ல பதிலாக நான் இசையமைக்கும் 'காவியத் தலைவன்’ இருக்கும்'' என்கி றார் ரஹ்மான். நல்லாக் கேட்டா ருய்யா கொஸ்டீன்!

சினிமால்
சினிமால்

 தமிழில் ஜெயம் ரவி ஜோடி யாக  நடிக்கும் அஞ்சலி யின் உடல் எடை கூடிக் கொண்டே போகிறதாம். அதை குறைக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லையாம் அஞ்சலி. கேட்டால் ''நமீதா, குஷ்பூ எல்லாம் ஒல்லி யாதான் இருந்தாங் களா?'' என்கிறாராம். நல்லா இல்லியே!

சினிமால்
சினிமால்

 சிம்பு, நயன்தாரா நடிக்கும் ’இது நம்ம ஆளு’ படத்தில் வரும் இன்னொரு காதலி கேரக்டரில் நடிக்க டாப்சி மறுத்துவிட்டாராம். இப்போ அந்த இடத்துக்கு பிந்து மாதவியைக் கொண்டுவந்திருக்கிறார் பாண்டிராஜ். அது யாரோட ஆளு?