Published:Updated:

'விவேகம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
'விவேகம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு!
'விவேகம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு!

'விவேகம்' படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். 

'விவேகம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு!


சிவா இயக்கத்தில் அஜித், அக்‌ஷராஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'விவேகம்'. இந்தப் படத்துக்கான பாடல்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. 

‘விவேகம்’ படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல், ‘சர்வைவா’. யோகிபி பாடிய இந்தப் பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. இதுவரை யூடியூபில் மட்டும் 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  பார்த்திருக்கிறார்கள். தவிர, Saavn மியூசிக்கிலும் அதிரிபுதிரி ஹிட். இரண்டாவதாக, ‘தலை விடுதலை’ மூன்றாவதாக 'காதலடா' பாடலும் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது, படத்தின் அனைத்து பாடல்களும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் சிவா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.