Published:Updated:

"பிக் பாஸ்ல நேர்மைன்னா ஓவியாதான்... கமல் சார் சொல்றதை யாரும் கேக்கலை!" - ப்ரியா ஆனந்த் #VikatanExclusive

"பிக் பாஸ்ல நேர்மைன்னா ஓவியாதான்... கமல் சார் சொல்றதை யாரும் கேக்கலை!" - ப்ரியா ஆனந்த் #VikatanExclusive
"பிக் பாஸ்ல நேர்மைன்னா ஓவியாதான்... கமல் சார் சொல்றதை யாரும் கேக்கலை!" - ப்ரியா ஆனந்த் #VikatanExclusive

'கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்குள் மிளிர்கிறார் ப்ரியா ஆனந்த். இடைப்பட்ட காலங்களில் நாட் ரீச்சபிளில் இருந்தவர், இப்பொழுது ஆன் லைன்  மோட். அவருடன் ஒரு சின்ன சிட் சேட். 

“படிப்பு மேல் ஆர்வம் இல்லாத நீங்க, படத்தில் காலேஜ் டாப்பர்! வீட்டுல என்ன சொன்னாங்க?” 

“நான் ஸ்கூல் படிக்கும் போதே ஒழுங்கா படிக்க மாட்டேன். படிப்புல ரொம்ப மோசமான ஸ்டூடன்ட். ஆனா, படத்துல காலேஜ் டாப்பர். வீட்டுல படத்தைப் பார்த்துட்டு என்ன கலாய்ச்சு எடுத்துட்டாங்க. எனக்கு நாலு வயசு இருக்கும். சினிமான்னா என்னன்னே தெரியாத வயசுலேயே சினிமா மேல ஆர்வம் வந்துடுச்சு. எங்க அப்பாவுக்கு சினிமான்னா ரொம்பப் பிடிக்கும். நான், என்னோட சின்ன வயசுல இருந்தே ஸ்ரீதேவியோட படங்கள், பாட்டு எல்லாம் கேட்டு வளர்ந்ததுனால சினிமான்னா தனி கிரேஸ், படிப்பே வேணாம்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்துல கல்லூரி டாப்பர் ரோல்....  கொஞ்சம் ஓவர்தான் இல்ல?“ வெடித்து சிரிக்கிறார் ப்ரியா.  

“ `பிக் பாஸ்' பார்க்கிறீங்களா?” 

“ஃப்ரீ டைம்ல `பிக் பாஸ்'தான் ஒரே என்டர்டெயின்மென்ட். வெளியே எங்கே போனாலும், `பிக் பாஸ்' பார்க்க டைமுக்கு வீட்டுக்கு ஓடிடுவேன். என்னோட ஃபேவரைட் ஓவியாதான். ஆனா ஓவியா வெளியே வந்துட்டதுல எனக்கு ரொம்ப ஃபீல். ரொம்ப நேர்மையான பொண்ணு. ஓவியாவைத் தனிப்பட்ட வகையில் தெரியாது. ஒருமுறைகூட சந்திச்சுப் பேசினதில்லை. ஆனா, இனி ஓவியாவை மீட் பண்ணணும்.”  

“ `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்களை எப்படிப் பார்க்கிறீங்க?”  

“நம்ம வாழ்க்கையில் சந்திச்ச, பழகிய கேரக்டர்கள்தான் அந்த வீட்டுக்குள்ளே இருக்காங்க. நம்மைச் சுற்றி இருக்கிறவங்கதான் அவங்க எல்லோருமே. அதுல நேர்மையா இருக்கிறது ஓவியா மட்டும்தான். இத்தனை வருஷங்களா `பிக் பாஸ்' நிகழ்ச்சி இந்தியாவில் பண்ணிட்டுத்தான் இருக்காங்க.  அதுமேல ஓர் ஆர்வமும் வந்ததில்லை. ஆனா, கமல் சார் பண்றதுதான் ஷோ ஹிட்டாகக் காரணம்னு நினைக்கிறேன். கமல் சார் உள்ளே இருக்கிறவங்களுக்கு எப்படி நடந்துக்கணும்னு ஜாடையா சொல்றார். ஆனா, உள்ளே இருக்கிறவங்களுக்கு எப்படி நடந்துக்கணும்னு புரியலை. அங்கே இருக்கிற யாரும் தங்களோட குணநலத்தை மாத்திக்கணும்னு யோசிக்கவே மாட்டேங்குறாங்க.” 

“ உங்களைப் படங்களில் தொடர்ச்சியா பார்க்க முடியலையே?” 

“சில பெர்சனல் காரணங்களுக்காகச் சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன்கிறதுதான் உண்மை. நடிக்கணும்கிற ஐடியாவே இல்லாத நேரத்துலதான் ஞானவேல் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதையைச் சொன்னார். கேட்டதும் பிடிச்சிப்போச்சு. மத்தவங்களுக்கும் இந்தக் கதை இன்ஸ்பரேஷனா இருக்கணும்கிறதுக்காத்தான் இந்தப் படத்துல நடிச்சேன். தமிழ், இந்தி, மலையாளம்னு மாத்தி மாத்தி நடிக்கிறதுனால்கூட இந்தச் சின்ன இடைவெளி பெருசா தெரியலாம். இனிமேலும்  நல்ல கதை வந்தால் நடிப்பேன். இல்லைன்னா சும்மா இருப்பேன். ” 

“இலக்கு இல்லாம பயணிக்கிறீங்கனு தோணுது. சினிமாவைத் தாண்டி நெக்ஸ்ட் ப்ளான்?”

“அது எனக்குமே தெரியலைங்க. சினிமாவில் எவ்வளவு வேணும்னாலும் கடின உழைப்பைப் போடலாம். எனக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம் சினிமா மட்டும்தான். அதைத் தவிர்த்து எதுவுமே எனக்குத் தெரியாது. போகிறபோக்கில் போயிட்டே இருக்கவேண்டியதுதான்.’’

அடுத்த கட்டுரைக்கு