Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

ஜஸ்ட் ஜெர்க்!

பூனைக்குட்டி வெளியில் வந்துடுச்சு. ஆந்திராவில் சித்தார்த், சமந்தாவின் காதல் கொடி உச்சத்தில் பறந்தது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்ததே. சித்தார்த் நடிக்கும் 'எனக்குள் ஒருவன்’ பட ஆடியோ விழா சென்னையில் நடந்தது. சித்தார்த்துடன் திடீரென்று சமந்தா ஆஜராக, ஆடியோ ஃபங்ஷனில் இருந்த கெஸ்ட்கள் முகத்தில் ஜஸ்ட்  ஜெர்க்! 'படத்திலேயே நடிக்காத சமந்தா இங்கே எப்படி?’ என்பதே ஷாக் அடிக்கக் காரணம்!

பாலுமகேந்திரா பட்டறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை தசரதபுரத்தில் இயங்கிவந்த 'பாலுமகேந்திரா திரைப்பட பட்டறை’யை இழுத்து மூடிவிட்டார்கள். 'இனி ஸ்டுடியோ மட்டும் இயங்கும். சினிமா பயிற்சி வகுப்புகள் அங்கே நடக்காது’ என அறிவித்துவிட்டனர். இப்போது பயிற்சிப் பட்டறை நடந்த இடத்தை எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டார்கள்.

மிஸ்டர் மியாவ்

எம்.ஜி.ஆர் முகம்

எம்.ஜி.ஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்’ 175-வது நாள் விழாவில் பி.வாசு, ''எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் எங்கப்பா பீதாம்பரம் மேக்கம் தொழிலையே விட்டுட்டார். கேட்டால் அந்த முகத்தைத் தொட்டுட்டு வேறு எந்த முகத்தையும் தொடமாட்டேன்’ என்றார். அடமானம் இருந்த எங்க வீட்டை மீட்டுக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.'' என்று கலங்கினார் வாசு.

புவர் பவர்!

அசால்ட்டாக ஆயிரம் ருபாய் நோட்டுகளை அள்ளி விட்டவர் பவர்ஸ்டார். இப்போது பவருக்கு பணத்தட்டுப்பாடு. கூடியிருந்தவர்கள் ஓடிவிட்டார்கள். புழல் போய் வந்த பிறகு நிழல்கூட மதிப்பது இல்லை. புதுசாக ஒப்பந்தம் செய்யவரும் டைரக்டர் ப்ளஸ் தயாரிப்பாளரிடம் ஷூட்டிங் முடிந்தபின் சம்பளத்தை தினசரி பட்டுவாடாவாக செய்துவிடுங்கள் என்கிறாராம், புவர் பவர்!

சபதம் பணால்!

சிவகுமார் வாரிசுகள், பிரபு வாரிசு, கார்த்திக் வாரிசு... எல்லோரும் சினிமாவில் கடும் பிஸி. ஹீரோவுக்கான ஸ்தானத்தையும் பிடித்துவிட்டார்கள். 'என் மகன் சிபி இன்னும் ஜெயிக்கலையே’ என்ற ஆதங்கம் சத்யராஜுக்கு. 'லீ’ படத்துக்குப் பிறகு சொந்தப் படம் தயாரிப்பது இல்லை என்று விரதமிருந்தார். பாசத்துக்கு முன் சபதம் பணால்!  சிபிக்காக மீண்டும் 'நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தயாரித்துவருகிறார், சத்யராஜ்.