பிரீமியம் ஸ்டோரி

அட்வான்ஸைக் கேட்கும் உதயநிதி...

'நண்பேன்டா’ படத்துக்கு அட்வான்ஸாகக் கொடுத்த 40 லட்சம் பணத்தைத் திருப்பிக் கேட்கிறார், உதயநிதி ஸ்டாலின். 'பணத்தைத் தர மாட்டேன்’ என்று காஜல் அகர்வால் ஒற்றைக் காலில் நிற்கிறார்.

'நண்பேன்டா’ படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான உதயநிதி:

மிஸ்டர் மியாவ்

''சினிமாவில் நடிப்பவர்கள் அட்வான்ஸ் பணம் வாங்கிக்கொண்டு, ஒரே நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டால்கூட பணத்தைத் திருப்பித்தர வேண்டியது இல்லை. ஆனால், அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு ஒருநாள்கூட படப்பிடிப்புக்கே வராமல் இருந்தால் வாங்கிய பணத்தைத் திருப்பித்தர வேண்டும் என்பது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சட்டம்.  'நண்பேன்டா’ படத்தின் ஷூட்டிங்கில் காஜல் அகர்வால் ஒருநாள்கூட கலந்துகொள்ளவில்லை. அதனால் அவருக்கு நான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்பக்கேட்டு கவுன்சிலில் புகார் கொடுத்தேன். நான் கொடுத்த கம்ப்ளைன்ட் மீடியாவில் வந்ததால் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை அழைத்துப் பிரச்னையைப் பெரிதாக்க வேண்டாம். நாங்கள் பேசி முடிக்கிறோம் என்று சொல்லி இருக்காங்க. அதனால் மௌனமாக இருக்கிறேன்'' என்று அடக்கி வாசித்தார்.

அடம்பிடிக்கும் காஜல் அகர்வால்!

''உதயநிதி தன்னோட படத்தில நடிக்க அட்வான்ஸ் கொடுத்தாரு. ஆனா, எந்த தேதியில ஷூட்டிங்னு என்கிட்ட சொல்லல. அப்புறம் திடீர்னு ஒருநாள் போன் பண்ணி ஷூட்டிங் தேதிய சொல்லி கால்ஷீட் கேட்டார். அவர் நடிக்க கேட்டபோது, என்கிட்ட டேட்ஸ் இல்ல. இது விஷயமா ஆர்டிஸ்ட் அசோஸியேஷன்ல என் மேனேஜரை பேசச் சொல்லியிருக்கேன். அவங்க எடுக்கிற முடிவுக்கு அப்புறம்தான் என்னோட கருத்தைச் சொல்ல முடியும்'' என்றார் காஜல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு