Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

ரஜினி புராணம்...

அனுஷ்கா யோகா டீச்சர் என்பது அகிலம் அறிந்த உண்மை. கர்நாடகாவில் நடக்கும் 'லிங்கா’ படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் ரஜினிக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்து இருக்கிறார், அனுஷ்கா. அருந்ததியின் அதிநுட்ப திறனைப் பார்த்து அசந்து விட்டாராம், ரஜினி. அதன்பின் அனுஷ்காவுக்கு ரஜினி தியானம் குறித்து பெரிய க்ளாஸ் எடுத்து சொல்லியும் கொடுத்து இருக்கிறார். இப்போது  தன்னைச் சந்திக்க வரும் எல்லோரிடமும் 'யோகாவைவிட தியானம்தான் பெஸ்ட்...’ என்று ரஜினி புராணம் பாடுகிறார், டீக்வுட் டீச்சர்!

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஏழுமலை சித்ரா...’

திரைப்பட இயக்கத்தில் எஸ்.ஜெ. சூர்யா கில்லாடி. இப்போது இயக்கி வரும் 'இசை’ படத்தின் இசை எஸ்.ஜெ.சூர்யா. தனக்கு நெருக்கமானவர்களுக்குப் பாடல்களை போட்டுக்காட்ட கேட்டவர்கள் கிறுகிறுத்து போய்விட்டார்களாம். ஏற்கெனவே சிம்பு, அசின் நடிப்பில் 'ஏ.சி’ படத்தை இயக்க இருந்தார், ஏனோ அந்தப் படம் ஆரம்பத்திலேயே ட்ராப். பரண்மேல் கிடந்த ஏ.சி.யை மீண்டும் தூசு தட்டுகிறார். பழைய ஏ.சி 'ஏழுமலை சித்ரா’ நாமகரணத்துடன் வெளிவரப் போகிறது. ஹீரோ

எஸ்.ஜெ.சூர்யா, ஹீரோயின் தமன்னா!

கெமிஸ்ட்ரி ஹிஸ்ட்ரி...

விஷாலுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் அநியாயத்துக்கு கெமிஸ்ட்ரி, ஹிஸ்ட்ரி, ஜாகரபி எல்லாமே ஒர்க்-அவுட்டாகி விட்டது. 'பூஜை’ படப்பிடிப்பில் இருவரும் அடித்த அரட்டையைப் பார்த்து யூனிட்டே பேஸ்தடித்து நின்றதாம். அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தை விஷால் தயாரித்து நடிக்கிறார். 'பூஜை’யில் ஸ்ருதியின் நேசத்தால் பாசமாகிப் போன விஷால் தனது அடுத்த படத்திலும் ஸ்ருதிஹாசனை ஜோடியாக்கி விட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism