Published:Updated:

'பாகுபலி' படத்தின் டிஜிட்டல் உரிமை 26 கோடி ரூபாய்க்கு விற்பனை!

'பாகுபலி' படத்தின் டிஜிட்டல் உரிமை 26 கோடி ரூபாய்க்கு விற்பனை!
'பாகுபலி' படத்தின் டிஜிட்டல் உரிமை 26 கோடி ரூபாய்க்கு விற்பனை!

'பாகுபலி' படத்தின் டிஜிட்டல் உரிமை 26 கோடி ரூபாய்க்கு விற்பனை!

ராஜமெளலி இயக்கிய, 'பாகுபலி' படத்தின் முதல்பாகம், இரண்டாம் பாகம் இரண்டுமே உலகளவில் பெரிதாகப் பேசப்பட்டது. இதுவரை இந்தியப் படங்கள் பெற்றிறாத பெரும் வசூலை வாரிக்குவித்தது. இயக்குநர்கள் மத்தியில் ராஜமெளலிக்கு ராஜமரியாதையைப் பெற்றுத் தந்தது.

திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸின் நடிப்பு பிரமாதமாகப் பேசப்பட்டு, இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டார். வில்லனாக நடித்த ராணாவின் நடிப்பைப் பார்த்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளே பொறாமைப்பட்டனர். 'பாகுபலி' படத்துக்குப் பிறகு, ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு படத்தின் கதையையும் உன்னிப்பாகக் கேட்ட பிறகே, புதுப் படங்களின் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுவருகிறார் அனுஷ்கா. 'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கலைஞரும் புகழின் உச்சாணிக்கொம்பில் அமர்ந்து கண்சிமிட்டுகின்றனர். தெலுங்கு மொழியில் உருவான 'பாகுபலி', தமிழ், கன்னடம், மலையாளம். இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாயின. இந்தியாவைத் தாண்டி சீனாவில் வெளியான 'பாகுபலி' படத்தைப் பார்த்து, சீன மக்கள் ஆச்சர்யத்தில் வியந்துபோயினர்.

'பாகுபலி' பட முதல் பாகத்தின் வசூலே இந்திய சினிமா உலகை மிரளச்செய்தது. அடுத்து வந்த இரண்டாம் பாகத்தின் வசூல், அதையும் தாண்டி பிரமிப்பாகப் பேசவும்வைத்தது, கனமாக கால்லாவையும் கட்டவைத்தது. ' பாகுபலி-2' திரைப்படத்தின் பாலிவுட் விநியோக  உரிமை  120 கோடிக்கு விற்றதாகவும் இந்தி சாட்டிலைட் உரிமையை சோனி டிவி 51 கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் சொல்கிறார்கள்.  இதுதவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளின் விநியோக  வியாபாரமும், சாட்டிலைட்  உரிமையும் பெரும்விலைக்கு விற்றனர். 'பாகுபலி-2' படத்தை விலைக்கு வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இப்போது, 'பாகுபலி' படத்தின் முதல்பாகம், இரண்டாம்  பாகங்களின் டிஜிட்டல் உரிமையை 26 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். நெட் ப்ளிக்ஸ் என்கிற நிறுவனம் 26 கோடி ரூபாயைக் கொடுத்து 'பாகுபலி' படங்களுக்கான டிஜிட்டல் உரிமையைப் பெற்றிருக்கிறது.                   

அடுத்த கட்டுரைக்கு