Published:Updated:

''டப்பிங் ஆர்டிஸ்ட், ஆர்.ஜே, ஆக்டிங், அம்மா ரோல்... எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?" - தீபா வெங்கட் ஷேரிங்

''டப்பிங் ஆர்டிஸ்ட், ஆர்.ஜே, ஆக்டிங், அம்மா ரோல்... எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?" - தீபா வெங்கட் ஷேரிங்
''டப்பிங் ஆர்டிஸ்ட், ஆர்.ஜே, ஆக்டிங், அம்மா ரோல்... எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?" - தீபா வெங்கட் ஷேரிங்

"டப்பிங் ஆர்டிஸ்ட், ஆர்.ஜே வேலையோடு குடும்பத்தை கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்குது. அதனால்தான் நடிப்பை பல வருஷங்களா நிறுத்தியிருந்தேன். செய்யும் வேலையைச் சிறப்பா செய்யறேன். என்னுடைய இந்தக் குணம்தான் தினமும் என்னை உத்வேகத்தோடு பயணம் செய்யவைக்குது" - அழகான வார்த்தை உச்சரிப்புடன் பேசத் தொடங்குகிறார் தீபா வெங்கட். 'விஐபி 2' திரைப்படத்தில் நடிகை கஜோலுக்கு பின்னணிக் குரல் கொடுத்து, வரவேற்பைப் பெற்றுள்ளார். 

" 'விஐபி 2' படத்தில் டப்பிங் பேசிய அனுபவம்..." 

" 'மின்சார கனவு' படத்துக்குப் பிறகு நடிகை கஜோல், 'விஐபி 2' மூலமாகத் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறாங்க. அதனால் நிறைய எக்ஸ்பெக்டேஷன். அவங்களுக்கு 'விஐபி 2' படத்தின் தமிழ், தெலுங்கு வெர்ஷன்ல டப்பிங் பேசினேன். படத்தின் டைரக்டர் செளந்தர்யா மேடமும், நடிகர் தனுஷ் சாரும் கஜோலை தமிழில் டயலாக் பேசவெச்சிருந்தாங்க. அதனால், என் வேலை ஈஸியாகிடுச்சு. நான் டப்பிங் கொடுத்தாலும் அவங்களே ரியலா பேசுற மாதிரி இருந்துச்சு. அவங்க கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல்லா, போல்டா இருக்கும். அதற்கேற்ப டப்பிங் பேசினது வித்தியாசமான அனுபவம். அந்தப் படத்துக்காக ஒரு வார காலம் டப்பிங் பேசியிருப்பேன். அந்தச் சமயங்களில் தனுஷ் சார், செளந்தர்யா மேம் பக்கத்திலேயே இருந்தாங்க. நிறைய கமென்ட்ஸ் வரும். டப்பிங் தியேட்டர் கலகலப்பா இருந்துச்சு." 

"தனக்கான டப்பிங் பற்றி கஜோல் ஏதாவது சொன்னாங்களா?" 

"அவங்களை நான் நேரடியா சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலை. எல்லா வேலைகளும் முடிஞ்சு முழுப் படத்தையும் பார்த்த கஜோல், 'படம் சிறப்பா வந்திருக்கு. என் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்தவங்க, சிறப்பா வொர்க் பண்ணியிருக்காங்க'னு வாழ்த்தினாங்களாம். மூவி புரமோஷனுக்குப் போன இடங்களிலும், 'என் டப்பிங் வொர்க்கும் சிறப்பா இருக்கு'னு அவங்க சொல்லியிருக்கிறது ஸ்பெஷலான விஷயம்." 

"நயன்தாராவுக்கு உங்க வாய்ஸ் நல்லாவே மேட்ச் ஆகுதே..." 

"அப்படித்தான் பலரும் சொல்றாங்க. நிறைய ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கேன். ஆனாலும், 'ராஜா ராணி'யில் நயன்தாராவுக்குப் பேசினது பெரிய ரீச். 'போடா போ. உனக்கு ஊர்ல தேன்மொழி, கனிமொழின்னு எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிஞ்சுட்டு இருப்பா. அவளைத் தேடித் தேடி லவ் பண்ணு. நான்லாம் உனக்கு செட்டே ஆக மாட்டேன்' என்கிற டயலாக் இப்போ வரை ஹிட். 'தனி ஒருவன்', 'மாயா', 'நீ எங்கே என் அன்பே', 'இது நம்ம ஆளு', 'காஷ்மோரா'னு அவங்களின் பல படங்களுக்கு டப்பிங் பேசினேன். இப்போ, அவங்களோட இன்னொரு படத்துக்கு டப்பிங் வொர்க் போயிட்டிருக்கு."

 "உங்க உச்சரிப்பு ரொம்பவே பளிச்னு இருக்கே. என்ன ரகசியம்?" 

(சிரிப்புடன்) "என் சின்ன வயசுல வீட்டுல ஸ்லோகம், கிளாசிக்கல், கர்னாட்டிக் மியூசிக் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு ஸ்லோகமும் ஸ்வரமும் சரியா இருக்க, முறையான உச்சரிப்பு வர்ற வரைக்கும் பாடணும். அந்தப் பழக்கம் பெரிய பொண்ணாகும் வரை தொடர்ந்துச்சு. அதனால், உச்சரிப்பு சிறப்பாக இருக்கு. தவிர, பாலச்சந்தர் சார் சீரியல்களில் நடிக்கிறப்போ, லைவ் டயலாக் ரெக்கார்டிங் இருக்கும். அதனால், டயலாக்கை தெளிவாகப் பேசி பழக்கமாச்சு. வேற ரகசியம் இல்லை." 

"நடிப்பில் பெரிய இடைவெளி விழுந்துடுச்சே..." 

"ஆமாம். நானும் அதைப் பத்தி நிறைய டைம் ஃபீல் பண்ணியிருக்கேன். சின்ன வயசிலிருந்து சினிமா, சீரியல்னு தொடர்ந்து நடிச்சுட்டிருந்தேன். 'உள்ளம் கொள்ளைப் போகுதே', 'தில்', 'பாபா' போன்ற படங்களில் நடிச்சிருந்தாலும் சீரியல்களில்தான் பெரிய அங்கீகாரம் கிடைச்சுது. 'கோலங்கள்' உஷா கேரக்டர், இன்றுவரை பெரிய அடையாளமா இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகள் அதிகமாகிடுச்சு. என் ரெண்டுப் பெண் குழந்தைகளைக் கவனிச்சுக்கிறது, டப்பிங், ஆர்.ஜே வேலைனு பிஸியா இருக்கிறதால், நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும் ஏற்க முடியலை. ஒரு நாள்ல டப்பிங் ஆர்டிஸ்ட், ஆர்.ஜே, ஆக்டிங், அம்மானு பல ரோல் ப்ளே பண்றேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு எப்பவும் பிடிச்ச ஒரு ரோல்னா அது அம்மாவா இருக்கிறதுதான். யாராலும் செய்ய முடியாத பொறுப்பான பதவி. பார்க்க சிம்பிளா இருக்கும். ஆனா அதீத கவனமும், பொறுமையும் தேவைப்படக்கூடிய ரோல்." 

"ஆர்.ஜே. வொர்க் பற்றி சொல்லுங்களேன்..." 

"ஹலோ எஃப்.எம் 106.4-ல், ஆறு வருஷமாக பகுதி நேரமா வொர்க் பண்றேன். காலையில் ரெண்டு மணி நேரம் 'சில்லாக்ஸ்' நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வொர்க் பண்ற அனுபவமும் அலாதியானது. ஏராளமான நேயர்களோடு பேசறது, புதுப் புதுத் தகவல்களை ஷேர் பண்ணிக்கிறதுன்னு ஆர்.ஜே வொர்க் அர்த்தமுள்ளதாகப் போயிட்டிருக்கு. டப்பிங், ஆர்.ஜே வொர்க் ரெண்டுமே நான் விரும்பித் தேர்ந்தெடுத்த துறைகள். அதனால், மகிழ்ச்சியோடு பயணம் செய்துட்டிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார் தீபா வெங்கட்.

அடுத்த கட்டுரைக்கு