Published:Updated:

உதயா முதல் மெர்சல் வரை... விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ப்ளேலிஸ்ட் பயணம்! #MersalSongs

பரிசல் கிருஷ்ணா
உதயா முதல் மெர்சல் வரை... விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ப்ளேலிஸ்ட் பயணம்! #MersalSongs
உதயா முதல் மெர்சல் வரை... விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ப்ளேலிஸ்ட் பயணம்! #MersalSongs

உதயா படம் தான், விஜய்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம். அதுவும் பாடல்கள் மட்டும்தான். பின்னணி இசை பிரவீண் மணி. 

உதயா படம் இரண்டு மாஸ் படங்களுக்கு இடையில் ரிலீஸ் ஆன படம். அதுவரை எல்லா வகை கேரக்டரும் மாற்றி மாற்றி செய்துவந்த விஜய், கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக நடித்து ஹிட் ஆன திருமலை(2003)க்கும், இன்னொரு ப்ளாக்பஸ்டரான கில்லி(2004-ஏப்ரல்)க்கும் இடையில் மார்ச் 2004ல் வெளியான படம். அந்தப் படத்தின்போது ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிலிருந்து, பாலிவுட்டில் கால்பதித்து அங்கேயும் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். விஜய்யைவிட, அன்றைய தேதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் மோஸ்ட் வாண்டட். 

பாடல்களில் உதயா உதயா மட்டும் ஹிட். அடுத்ததாக கொஞ்சம் கவனம் பெற்ற பாடல் திருவல்லிக்கேணி ராணி (ரெஹனுமா.. ரெஹனுமா - ஞாபகம் வருதா ட்யூன்?)

மற்றதெல்லாம்  - பூக்கும் மலரை / என்ன என்ன / அஞ்சனம் என்று - பாடலைச் சொன்னால்கூட ட்யூன் ஞாபகம் வராத அளவுக்குதான் சென்று சேர்ந்தது.

‘உதயா உதயா உளறுகிறேன்..’ இன்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்பெஷல் மெலடி டூயட் பாடல்களைக் கணக்கிட்டால் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பாடல். ஹரிஹரன், சாதனா சர்கம் இருவரும் உருகி உருகிப் பாடியிருப்பார்கள். பல்லவியில் ஹரிஹரன் ‘உன் பாதி வாழ்கிறேன், என் பாதி தேய்கிறேன்’ என்று பாடும்போது பின்னணியில்  ஏ.ஆர்.ரஹ்மான் வயலினைப் போட்டுச் செதுக்கியிருப்பார். ஹரிஹரனும் ‘உன்னாலே... தன்னாலே’ வார்த்தைகளில் சங்கதியில் விளையாடியிருப்பார். முதல் இடையிசையின் உடன் வரும் வயலின்களோடு, ஒற்றை வயலின் கதற, கோரஸ் ஒலிக்கும் இடம்.... கேட்கக் கேட்க இனிக்கும். 

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ தொலைந்தே  மீண்டேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே

பல்லவியில் சாதனா சர்கமும், ஹரிஹரனும் போட்டி போட்டு பாடியபடி...  ‘ஆயுள் ஆனவளே’ என்று ரோலர் கோஸ்டர் அனுபவம் தந்து முடிந்ததும், எலக்ட்ரிக் கிடாரில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர் பங்குக்கு இரண்டாம் இடையிசையில் கலக்கியிருப்பார். இன்றைக்கும் கேட்கக் கேட்க உருக்கும் மெலடி இந்த உதயா. 

இப்படியாக விஜய்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட முதல் ஹிட் பாடலாக ‘உதயா உதயா’ அமைந்தது. 

அடுத்த படம்: அழகிய தமிழ்மகன். இப்போது விஜய்யின் மார்க்கெட் உயர்ந்திருந்தது. திருப்பாச்சி, சச்சின், சிவகாசி, போக்கிரி என்று கம்ப்ளீட் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிரூபித்திருந்தார் விஜய்.  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, சொல்லவே வேண்டாம். தமிழில் ஆயுத எழுத்து, அ.ஆ, சில்லுனு ஒரு காதல், குரு, சிவாஜி என்றும் ஹிந்தியில் பல படங்கள் என்றும் அவர் கிராஃபும்  ஏறிக்கொண்டிருந்தது. 

கமர்ஷியல் ஹீரோவுக்கு இசை என்றால் கண்டிப்பாக இன்ட்ரோ சாங், ஒரு டூயட் என்ற 5 பாட்டு கான்செப்ட்தான். கதைக்காக பாடலோ, பாடலுக்காக ஒரு காட்சி / சூழலோ எல்லாம்.. ம்ஹும். அழகிய தமிழ்மகன் அப்படித்தான். ஆனால் இப்போது விஜய்யின் மார்க்கெட் அறிந்து, வேறு ஆட்டம் ஆடியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 

அறிமுகப் பாடலான ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’, டிபிகல் ஹீரோ இன்ட்ரோ பாடலாக ஹிட்டடித்தது.   ‘பொன்மகள் வந்தாள்’ ரீமிக்ஸ் பரவலாகப் பேசப்பட்டது. அந்தப் பாடலின் நடுவில் ஒலிக்கும் ராப்.. வாவ் ரகமாக இருந்தது. ‘நீ மர்லின் மன்றோ க்ளோனிங்கா’,  ‘வலயப்பட்டி தவிலே தவிலே’ இரண்டும் சுமார் ஹிட் ரகம். ஆனால் மர்லின் மன்றோ க்ளோனிங்கா டிவியில் அடிக்கடி போடப்பட்டு ஹிட்டடித்தது. காரணம் சொல்ல வேண்டியதில்லை. இன்னொரு பாடலான ‘மதுரைக்குப் போகாதடி’ பட்டிதொட்டியெங்கும் (அல்லது அபார்மெண்ட்டெங்கும்) ஒலித்தது. விஜய் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்க, இசை ரசிகர்களுக்கு ‘கேளாமல் கையிலே’ மிகப்பிடித்துப் போனது.

என் பேரை கூவிடும்
உன் பேரும் கோகிலம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம் 

பாடல் முழுவதும் ஒரு மெட்டில் இருக்க, சரணம் ‘இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை / போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்’ என்று கொஞ்சம் வேறு டைப் மெட்டில் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல தாமரையின் வரிகளும், ஸ்ரீராம் பார்த்தாரதி, சைந்தவி குரல்களும் அமைந்தன. ’உதயா உதயா’ பாடலைப் போலவே இதுவும் ஏ.ஆர்.ரஹ்மானின் க்ளாஸ் மெலடிகளில் ஒன்று. 

மெர்சல். ஏற்கெனவே ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே இரண்டு பாடல்கள் பற்றியும் எழுதிவிட்டேன். அடுத்து ரெண்டே பாடல்கள்தான்.

மெர்சல் அரசன்

ஜி.வி.பிரகாஷ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய்க்கு பாடியிருக்கிறார். ஒரு சின்னப்பையன் குரலில் ‘அட்ச்சுப் காலிப்பண்ணும் தில்லு தில்லு.. பச்சக்கொழந்தைக்கும் சொல்லு சொல்லு’ என்றுதான் ஆரம்பிக்கிறது. 'காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது’ என்ற வழக்கமான, தேய்ந்து போன வசனத்தைச் சொல்லிக் கொள்கிறேன். காரணம், 24 வருடங்களுக்கு முன் இதே போல் குட்டிப்பையன் குரலில் ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடிய அதே ஜிவிபி, இன்று இன்னொரு குட்டிப்பையன் ஆரம்பிக்க - ஹீரோவுக்குப் பாடும் ஹீரோ!

பாடலின் இசை ஸ்பீடு, ஸ்லோ என்று மாறி மாறிப் பயணிக்கிறது. பல்லவி முடிந்து வரும் இசை, துள்ளலாட்டம். சரணமெல்லாம் கொஞ்சம் எம்.ஜிஆர் டைப் வரிகளும், மெட்டுமாய்  இருக்கிறது. மிருதங்கம், நாதஸ்வரம் என்று மிக்ஸிங் பாடலில், அந்த இடையிடையே வரும் இசைதான் ஆறுதல். 

மாச்சோ

இந்தப் பாடல் நிஜமாகவே சர்ப்ரைஸ்! ட்ராக் லிஸ்ட் பார்த்து,  ‘வெறும் நாலு பாட்டு’ என்பது மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது.  முதலில் வந்த இரண்டில், நீதானே மிகவும் கவர்ந்தது. இந்த இரண்டில்.. மாச்சோ ஒட்டுமொத்தமாக கொள்ளை கொண்டது. அத்தனை பெப்பி நம்பர். ஷங்கர் படங்களுக்கான ஒரு டெம்ப்ளேட் பாடலிருக்குமே, அந்த டைப். பாடலை திரும்பத் திரும்ப கேட்கையில், நம் கால்களே ஆட்டம் போடும்போது, விஜய்யின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. 

சித்ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் - பெர்ஃபெக்ட் குரல்கள்! ஆரம்பம் முதலே வாவ்தான். விவேக்.. .. இந்த bouquetவ Catchங்க! ரொம்ப Toughஆன  Typeல் பாடல்களை Writeஇ இருக்கீங்க!  செம்ம! 

பாடல் வரிகள் கீழ இருக்கு பாருங்க. அஸ்க லஸ்காவுக்கு அப்பறம், வரிகள்ல, புதுமையாவும் அர்த்தமாவும் அமைஞ்சு, வாவ் சொல்ல வெச்ச வரிகள்!

பாடலின் மெட்டும், வரிகளும், இசையும் போட்டிபோட்டுக் கொண்டு கவர்கின்றன.  அதும் முதல் இடையிசை வயலின்... ட்ரீட்!  மெர்சலின் ‘மாச்சோ’ விஷுவலாகவும் வந்தபின்  கன்னாபின்னா ஹிட்டடிக்கப்போகிறது. ‘ நீதானே’ என்றும் நிலைக்கும் மெலடி! 

ஆனாலும்.. இன்னும் ஒரு பாட்டோ, அல்லது தீம் மியூசிக்கோ கொடுத்திருக்கலாம் ரஹ்மான் சார்! அட்லீஸ்ட், மெர்சல் இசைவிழால கொடுத்த மாதிரி, ‘நீதானே’ வோட இன்ஸ்ட்ரூமெண்டல் வெர்ஷனாவது...! 

மாச்சோ பாடல் வரிகள்:

மாச்சோ என்னாச்சோ 
அவ touchஇட்டா உயிர் into two ஆச்சோ
மாச்சோ match ஆச்சோ
அவ speakகிட்டா குயில் கீச்சோ

Dreamல் hugஇட்டேன் flower shower ஆச்சோ
Bp போல சோகம் Smooth ஆச்சோ
கல கல கலா நீ classy யோ
கல கல கலா நான் massஇ யோ

Look at ஜூஸி
Click a classy
Thinkஇப் பாத்தேன் You'r Sy Daisy 

-

Icy Doll அசைஞ்சா
கண்ணு Whistleஉதடி

என் Morning Flashஆ... shiny போயி
Caramel அழக Taste-இப் பாக்கறேண்டி
நீ Smiey-ப் போனா Girly காலி
Three Much-சா Miss-ஸிட்டேன் 
என்னைவிட உன்ன Love-இட்டேன்
உன் Heart-க்குள்ளநான்
Love Rabbit ஆயிட்டேன்
வெளி வராமலே Hope-இப்போவேன்

(மாச்சோ)

என்ன Kiss-u Wet-நிலா பாயும்
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன Smell-ஓ கூந்தலின் பூவோ
நறுமணம் இழுத்ததும் தல சாயும்
நீ Takeகிட்டா  Sweetஆ போனேன்
பால் வீதியில் float ஆனேன்
மெலடியா ட்வீட்டுறேன்
ப்யூட்டிஃபுல் மெமரியா டிரீட்டுறேன்  **