Published:Updated:

"மேக்-அப் மேன், லைட்மேன் தெரியும்... `க்ரெளடு மேன்' தெரியுமா?!" - அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் சரவணன்

"'ரஜினி படத்துல நடிச்சிருக்கேன், விஜய் படத்துல நடிச்சிருக்கேன்னு சொல்றியே, எந்த சீன்ல வர்ற'ன்னு வீட்டுல கேட்பாங்க. அப்போ, `வரும்... ஆனா, வராது'ன்னு இழுப்போம்!"

Saravanan
Saravanan

லைட் பாய் தொடங்கி, ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் வரை... சினிமா, எல்லோருக்குமே கனவுதான். 24 மணி நேரமும் கனவைக் கலையவிடாமல் பாதுகாத்து, முட்டி மோதுகிறவர்களில்கூட, லைம்லைட்டுக்கு வருகிறவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருப்பார்கள். எனவேதான், உழைப்பைத் தாண்டி, அதிர்ஷ்டத்தையும் துணைக்கு அழைக்கிறார்கள், அந்தப் பயணத்தில் இருப்பவர்கள்.

thaniyoruvan
thaniyoruvan

சினிமாவில் சாதித்த கதைகள் இங்கே நிறைய எழுதப்பட்டுள்ளன. சினிமா கைவிட்டவர்களின் கதைகளையும் படித்திருக்கிறோம். `சாதிக்கவும் இல்லை, அதேநேரம் சினிமாவை நம்பி கெட்டுப்போகவும் இல்லை' என்கிற குரல்களைக் கேட்டிருக்கிறீர்களா, `இதென்ன வரும்.. ஆனா, வராது' டைப் கதையா இருக்கே என்கிறீர்களா...

மேற்கொண்டு, சென்னை வில்லிவாக்கம் சரவணனின் வார்த்தைகளிலேயே கேட்கலாம். சரவணனும் சினிமா தொடர்புடையவர்தான். மேக்-அப் மேன், லைட் மேன் போல, இவர் `க்ரௌடு மேன்'. சினிமா மொழியில் சொன்னால், `அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்'. இன்னும் புரிகிறபடி சொன்னால், கூட்டத்தில் வந்துபோகும் நடிகர்கள்.

"லிவிங் டுகெதர், லெஸ்பியன் கேரக்டர்ல ஏன் நடிச்சீங்க?’’ - நித்யா மேனன் பதில்

"ஆமாம் சார். என்னை மாதிரி ஆள்கள், அடிக்கடி `வரும் ஆனா, வராது' வடிவேலு வசனத்தைத்தான் அவங்கவங்க வீட்டுல சொல்லிக்குவோம். `ரஜினி படத்துல நடிச்சிருக்கேன், விஜய் படத்துல நடிச்சிருக்கேன்னு சொல்றியே. எந்த சீன்ல வருவ'ன்னு கேட்டா, எங்க பதில் அந்த வசனம்தான். சமயத்துல `வசனமெல்லாம் இருக்காது, நடிச்சிருக்கோம்'னு பதில் சொல்வோம்.

என்னை எடுத்துக்கோங்க... `குசேலன்' படத்துல தியேட்டர்ல பூசணிக்காய் சுத்துற சீன்ல நடிச்சேன். அஜித் நடிச்ச `பரமசிவன்' படத்துல குத்துப்பாட்டுல தலைகாட்டுவேன். `ஆதி', `ஆணை', `மன்மதன்' இப்படி சுமார் 20 படங்கள் வரை தலை காட்டியிருக்கேன். கடைசியா, ஜெயம் ரவி - அரவிந்த்சாமி நடிச்ச `தனி ஒருவன்' படத்துல செக்யூரிட்டி ஆபீஸரா வந்தேன். கிட்டத்தட்ட 15 வருடமா நானும் சினிமாவுல இருந்துக்கிட்டுதான் இருக்கேன்." என்றவர், தொடர்ந்தார்.

saravanan
saravanan
வெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ்!

"சமயத்துல என்னாலேயே என் முகத்தைத் திரையில பார்க்க முடியாது. அந்தக் காட்சி மைக்ரோ செகண்ட்ல கடந்துபோயிடும். அல்லது கூட்டத்தோடு கூட்டமா நிற்கிறதால, நாங்க இருக்கிற இடமே ஃபிரேம்ல தெரியாது. நாலு நாள் ஷூட்டிங்ல நடிச்சிருப்போம். கேமராமேன் கருணை காட்டி, எங்க முகத்தையும் பதிவு பண்ணியிருப்பார். கடைசியில எடிட்டிங்ல மாட்டி, எங்க காட்சி காணாமப்போயிடும். முகம் தெரியவே மூச்சுத் திணறுதுங்கிறப்போ, வசனத்துக்கு எங்கே போறது!

அதனால, படம் ரிலீஸாகி, அதைப் பார்த்து, `பளிச்'னு ஒரு நொடியாவது திரையில நம்ம முகம் தெரியுதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டுதான், நடிச்ச விஷயத்தை வீட்டுல சொல்வோம்னா, பார்த்துக்கோங்க!

அப்போவும், வீட்டோடு சரி. தெருவுல இருக்கிறவங்ககிட்டயோ, பக்கத்து வீட்டுக்காரர்கிட்டயோகூட மூச்சு விடமாட்டோம். சொன்னா, கலாய்ப்பாங்க சார்!" அலட்டிக்கொள்ளாமல் சிரித்துப் பேசுகிற சரவணனின் முழுநேரத் தொழில் என்ன?!

thaniyoruvan
thaniyoruvan

"எந்நேரமும் சினிமா சிந்தனை இருந்துக்கிட்டேதான் இருக்கு. ஆனா, வயித்துக்கு வழி வேணுமில்ல... பெயின்ட் அடிக்கிற வேலை, கட்டட வேலைன்னு கிடைக்கிற வேலைக்குப் போயிடுவேன். இப்போ கொஞ்சநாளா பெரம்பூர் லோகோவுல ஆபீஸ் பாய் வேலையைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஒரு நாள் லீவு கிடைச்சாலும் `எங்கே ஷூட்டிங் நடக்குது'ன்னு விசாரிச்சுட்டு, அந்தப் படத்துல கமிட் ஆகிடுவேன்!" என்பவர், இதுவரை நடித்த படங்களில் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா... ஆயிரம் ரூபாய்!

"சம்பளம் பத்தியெல்லாம் பேசக்கூடாதுங்க. நானா விருப்பப்பட்டுதானே இதுல இருக்கேன். கூட்டிட்டுப்போற ஏஜென்டுகள் கொடுத்தா, வாங்கிக்குவோம்.

``டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தப்படுத்திக்கிட்டேன்..!'' - `பெட்ரோமாக்ஸ்' மீம் விமர்சனம்

பட பூஜை, ஷூட்டிங் ஸ்பாட்... இப்படி சினிமா சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும், நிகழ்ச்சியிலும் என்னை மாதிரி நூற்றுக்கணக்கான சரவணன்களை நீங்க பார்க்கலாம். ரஜினி, கமல், அஜித், விஜய் மாதிரி ஆகவேண்டாம் சார். இவங்க படங்கள்ல ஒரு காட்சியிலாவது வந்துபோயிடணும்ங்கிறதுதான், எங்க அதிகபட்ச ஆசை!" என்கிறார், சரவணன்.

சினிமாவைக் 'கனவுத் தொழிற்சாலை' என சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்!