Published:Updated:

`பிளான் பண்ணி பண்ணனும்' விமர்சனம்: காமெடியையும் கொஞ்சம் நல்லா பிளான் பண்ணி பண்ணிருக்கலாமே பாஸ்?!

பிளான் பண்ணி பண்ணனும்

பிளான் பண்ணாமலே அடுத்தடுத்து நிகழும் பிரச்னைகளும், அதைச் சமாளிக்க நண்பர்கள் இருவர் படும் அவஸ்தைகளும்தான் இந்த டிராவல் மற்றும் காமெடி சினிமாவின் கதை.

`பிளான் பண்ணி பண்ணனும்' விமர்சனம்: காமெடியையும் கொஞ்சம் நல்லா பிளான் பண்ணி பண்ணிருக்கலாமே பாஸ்?!

பிளான் பண்ணாமலே அடுத்தடுத்து நிகழும் பிரச்னைகளும், அதைச் சமாளிக்க நண்பர்கள் இருவர் படும் அவஸ்தைகளும்தான் இந்த டிராவல் மற்றும் காமெடி சினிமாவின் கதை.

Published:Updated:
பிளான் பண்ணி பண்ணனும்
ஐடி ஊழியர்களான இரண்டு நண்பர்கள் தங்களின் குடும்பத்துடன் சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அலுவலகம் சார்பாக பார்ட்டி ஒன்றை அவர்கள் ஏற்பாடு செய்ய, அதில் சினிமா நடிகை ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். அவருக்குத் தரவேண்டிய பணம் காணாமல்போக, கூடவே நாயகனின் நண்பனின் தங்கையும் காணாமல்போக, இரண்டையும் தேடிச் செல்லும் இந்த இரண்டு நண்பர்களின் பின்னே படத்தின் கதையும் செல்கிறது. அவர்கள் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்னைகளும், அரங்கேறும் காமெடி ட்விஸ்ட்களும்தான் இந்த 'பிளான் பண்ணி பண்ணனும்'.
பிளான் பண்ணி பண்ணனும்
பிளான் பண்ணி பண்ணனும்

நாயகன் செம்பியனாக ரியோ ராஜ். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக வாய்ப்பு. தன் பணியைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். படமே லாஜிக்கில்லா காமெடிதான் என்பதால் சீரியஸான காட்சிகள் எதுவுமில்லை. அதனால், காமெடியில் தேறிவிடும் ரியோ, சென்டிமென்ட் எமோஷனல் காட்சிகளில் எப்படி என்பது போகப் போகத்தான் தெரியும். நாயகியாக ரம்யா நம்பீசனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்தான். அவர் எடுக்கும் முடிவுகள் கதையை நகர்த்திச் செல்கின்றன. காமெடி ஏரியாவுக்கு பால சரவணன், ரோபோ சங்கர், டைகர் கார்டன் தங்கத்துரை, எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த் என ஒரு பட்டாளத்தையே இறக்கியிருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். ஆனால், காமெடிதான் பழங்கால சிரிப்பு டிராக் கொண்ட காமெடி சீரியல்களை நினைவூட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் பாதி டிராவல் படமாக, ஒரு ரோடு மூவியாக ஆங்காங்கே சிரிப்பு மூட்டியபடி நம்மை அழைத்துப் போகிறது. பால சரவணன், ரோபோ சங்கர் காம்போ பல இடங்களில் நம்மைச் சோதித்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அளவுக்கு நம்மைச் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த 'விஷபாட்டில்' காமெடியையே ஜவ்வாக இழுக்காமல், கொஞ்சம் மாற்றியும் யோசித்திருக்கலாம் பாஸ்.

பால சரவணனின் தங்கையாக வரும் பூர்ணிமா ரவி ஒரே டேக்கில் லென்த்தானதொரு வசனத்தைப் பேசி அசத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் தனுஷ் ஒரு பெண்ணை காதலிக்க வைக்க ஓர் இளைஞன் தான் செய்யும் 'சாகசங்களாக' பட்டியலிடுவதன் 'இளைஞி' வெர்சன் இது. அரசியல் பார்வையில் சரி, தவறு என்ற அளவீடுகளோடு இந்தப் படத்தை அணுகக்கூடாது என்றாலும், இதில் சிக்கல்கள் பல இருப்பதை மறுப்பதற்கில்லை.

பிளான் பண்ணி பண்ணனும்
பிளான் பண்ணி பண்ணனும்

அப்பாவி பணக்கார மாப்பிள்ளையாக சித்தார்த் விபின், நாயகியின் அப்பாவாக ஆடுகளம் நரேன், அம்மாவாக ரேகா, நாயகனின் அம்மாவாக விஜி சந்திரசேகர், அப்பாவாக சந்தானபாரதி, வில்லனாக மாரிமுத்து என அடிஷனல் ஷீட் கேட்டு பெயர் எழுதும் அளவிற்கு ஆட்கள் இருந்தாலும், ஆடுகளம் நரேனுக்கு மட்டுமே இதில் முக்கிய வேடம். வில்லனாகக் காட்டப்படும் மாரிமுத்து கடைசியில் என்னவானார் என்றே தெரியவில்லை. ரம்யா நம்பீசனின் கதாபாத்திரம் மூலம் பெண்ணின் முடிவெடுக்கும் சுதந்திரம் குறித்து விவாதித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அதை மறக்கடிக்கும் வண்ணம் வெளிப்படும் உருவக்கேலிகள், பெண்களை இழிவுப் பேசும் காமெடிகள் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாமே?!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் படக்குழு உணர்ந்ததாகவே தெரியவில்லை. காமெடி, அரசியல் பார்வை என இரண்டிலுமே அப்டேட்கள் தேவைப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜாவாம்! அவர் குரலில் ஒரு பாடல் ஒலிக்கும்போதுதான் நமக்கே அது தெரிகிறது. இளமைத் துள்ளலான படத்துக்கு யுவன் இசையென்றால் நிகழும் அந்த அதிசயம், அற்புதம் முற்றிலும் மிஸ்ஸிங்! சீக்கிரம் பழைய யுவனா திரும்பி வாங்க லிட்டில் மேஸ்ட்ரோ!
பிளான் பண்ணி பண்ணனும்
பிளான் பண்ணி பண்ணனும்

ஜி.ராதாகிருஷ்ணனின் வசனங்களில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டாலும், ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்துக்கான ஹூயூமர் அதில் புலப்படவேயில்லை. இயக்குநர் பத்ரி வெங்கடேஷே தோன்றும் காட்சிகளும், ரியோவை அவர் ஹீரோவாக செலக்ட் செய்யும் காட்சியும் ஒரு மெட்டா சினிமாவாக பக்கா முயற்சி. அதே பாதையில் இந்த ரோடு டிரிப் சினிமாவையும் கொண்டு சென்றிருக்கலாமே?! நகைச்சுவை என்பது சீரியஸான ஒரு பிசினஸ் என்பதை உணராமல் வண்டியை ஸ்டார்ட் செய்திருப்பதால், முழுமையானதொரு காமெடி படம் பார்த்த உணர்வை இந்த ட்ரிப் தர மறுக்கிறது.

காமெடிதான், இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணிருக்கலாம்ங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism