Published:Updated:

அதர்வா தம்பிதான் விஜய் வீட்டு மாப்பிள்ளை... உண்மையாகும் `காதலுக்கு மரியாதை’ க்ளைமேக்ஸ்!

அதர்வா தம்பி ஆகாஷ், சினேகா
அதர்வா தம்பி ஆகாஷ், சினேகா

அண்ணன் அதர்வா திருமணம் செய்யாமல் இருப்பதாலேயே தன்னுடைய திருமணம் குறித்து ஆகாஷ் பேசாமல் இருந்ததாகவும், ஆனால் காதலுக்கு எழுந்த எதிர்ப்பே விரைந்து முடிவெடுக்க வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

மறைந்த நடிகர் முரளி குடும்பமும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பமும் திருமண உறவின் மூலம் இணைகிறது. வருகிற டிசம்பர் 6-ம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷுக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி சினேகா பிரிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது.

இந்தக் காதல் திருமணம் குறித்து எஸ்.ஏ.சி குடும்ப வட்டாரத்தில் விசாரித்தோம்!

Sneha britto and Vijay
Sneha britto and Vijay

``முரளியின் இளைய மகன் ஆகாஷ். சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்தார். அங்க அவரோட கூடப் படிச்சவங்கதான் சினேகா பிரிட்டோ. படிக்கும்போது அப்படியே இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கு. எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. எஸ்.ஏ.சி-க்குப் பேத்தி முறை. விமலாவும் அவரின் கணவர் பிரிட்டோவும் சென்னையில் பள்ளி, கல்லூரி, ஹோட்டல், ரெஸ்ட்டாரன்ட்டுகள் நடத்திவருவதுடன் ஷிப்பிங் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பிரிட்டோதான் `விஜய் 64’ படத்தின் தயாரிப்பாளரும்கூட.

சினேகா வளர்ந்ததெல்லாம் விஜய் வீட்டில்தான். `` `தாத்தா தாத்தா’னு எஸ்.ஏ.சி. ஆபீஸ்லயே இருப்பாங்க. அதனால் இயல்பாவே சினிமா கனவு அவங்களுக்கு வந்திடுச்சு. பேத்தியின் சினிமா ஆசைக்கு தாத்தாவும் ஓகே சொல்லித்தான் `சட்டம் ஒரு இருட்டறை 2’ படத்தில் சினேகாவை இயக்குநராக அறிமுகம் செஞ்சார் சந்திரசேகர்’’ என்ற எஸ்.ஏ.சி-யின் நெருங்கிய உறவினர் திருமணம் குறித்தும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

Aakash murali
Aakash murali

``ஆகாஷ் இப்போ சென்னையில் ரெஸ்ட்டாரன்ட் பிசினசில்தான் இருக்கார். அவருக்கும் சினிமாவுக்கு வர்ற ஐடியா இருக்கு. அதுக்கான சில முயற்சிகளைச் செய்துட்டிருக்கார்.

ரெண்டு பேருமே தங்களோட காதலை வீட்ல சொன்னதும் இருதரப்புலயுமே ஆரம்பத்துல டபுள் டிக் விழல. இதற்கு முக்கியக் காரணம் மதம். ஆனால், காதலர்கள் கடைசி வரை காதலில் உறுதியா இருந்தாங்க. `காதலுக்கு மரியாதை’ படத்தின் க்ளைமேக்ஸ் ஞாபகம் இருக்கா? மினி (ஷாலினி) - ஜீவா (விஜய்) காதலுக்குத் தடையாய் இருந்த மதங்களைக் கடந்து, `என் மருமகளை எங்களோட அனுப்பிடுங்க’ என விஜய் அப்பா சிவக்குமார் கேட்க, `கூட்டிட்டுப் போங்க’ என ஷாலினியின் அம்மா சம்மதம் சொல்வாரே... அதே போன்றதொரு உருக்கமான காட்சி கடைசியில் உண்மையாகவே நிகழ, பெரியவர்கள் மனமிறங்கி வந்து சுபமா முடிச்சிட்டாங்க!’’ என்றார் அவர்.

sneha
sneha
`அதிசய' ரஜினி; `தம்பிமார்கள்' எஸ்.ஏ.சி; `சான்ஸ் கொடுங்க' விஜய் சேதுபதி... உலக நாயகனின் `உங்கள் நான்' விழாவில் நடந்தது என்ன?!

நிச்சயதார்த்தத்தில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. திருமணத் தேதியை அப்போது முடிவு செய்ய இருக்கிறார்கள். அண்ணன் அதர்வா திருமணம் செய்யாமல் இருப்பதாலாயே தன்னுடைய திருமணம் குறித்து ஆகாஷ் பேசாமல் இருந்ததாகவும் ஆனால், காதலுக்கு எழுந்த எதிர்ப்பே விரைந்து முடிவெடுக்க வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் `சட்டம் ஒரு இருட்டறை 2’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய எஸ்.ஏ.சி, ``இந்தப் படத்தை என் பேத்தி டைரக்ட் பண்றா’. சினிமாதான்னு முடிவெடுத்ததும் விஜய் எப்படி என்னுடனேயே இருந்து நிறைய கத்துக்கிட்டாரோ அதேபோலத்தான் சினேகாவும் காலேஜ் போற நேரம் தவிர மற்ற நேரம் முழுக்க என்னுடனேயே இருப்பார். லொக்கேஷன் செலக்‌ஷன்ல இருந்து ஸ்கிரிப்ட்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டது வரைக்கும் கத்துக்கிட்டா. அவளோட திறமைகள் வருங்காலத்துல தமிழ் சினிமாவுல பேசப்படும்னு நம்பறேன்'’ எனச் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்யாண வேலைகளுக்கு இடையிலும் தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளையும் தொடங்கிவிட்டாராம் சினேகா.

அடுத்த கட்டுரைக்கு