Published:Updated:

11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சூர்யா - கெளதம் மேனன் காம்போ! ஹாட்ரிக் அடிக்குமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வந்தன. அந்தத் தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

சூர்யா
சூர்யா

2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம், 'காக்க காக்க'. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா - ஜோதிகா ரசிகர்கள் இன்றைக்கும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு சூர்யாவை வைத்து 'வாரணம் ஆயிரம்' படத்தை இயக்கினார், கெளதம மேனன். இதில் அப்பா, மகன் என டூயல் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. இந்தக் கூட்டணி அதன் பிறகு சேராமலே இருந்தது. இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்து வந்தனர்.

கெளதம் மேனன் - சூர்யா
கெளதம் மேனன் - சூர்யா

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல்கள் வந்தன. தற்போது இது உறுதியாகியுள்ளது. 11 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இணையும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சூர்யாவின் 'காப்பான்' வரும் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் 'சூரரைப் போற்று' படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்த பிறகு, சிவா இயக்கவிருக்கும் படத்துக்குச் செல்கிறார் சூர்யா.

தவிர, பாலா இயக்கும் ஓர் படத்திலும் நடிக்கிறார். தற்போது இந்தப் படமும் சூர்யாவின் படவரிசையில் இணைந்துள்ளது. 11 வருடங்கள் கழித்தும், சூர்யா - கெளதம் மேனன் எனும் ஹிட் காம்போ இணைவதால் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.