Published:Updated:

அந்த சிவகார்த்திகேயனைப் பார்க்கும்போதே ஒரு எனர்ஜி வருதுல்ல... வி மிஸ் யூ எஸ்கே! #TVNostalgia

சிவகார்த்திகேயன்
News
சிவகார்த்திகேயன் ( Credits : Vijay Tv )

`அது இது எது' நிகழ்ச்சியில் அவர் வாரம்தோறும் அணிந்து வந்த டிசைன் டிசைன் டி-ஷர்ட்டுகளைப் போல செம கலர்ஃபுல்லாக இருந்தது. டைம்பாஸுக்கு நான்கு காலேஜ் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்குமோ அதே போலத்தான் எஸ்கே-வின் ஷோக்களும் இருக்கும்.

க்வாரன்டீன் நாள்களில், எல்லா டி.வி சேனல்களும் தங்களுடைய பழைய ஹிட் நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. அதில், விஜய் டி.வி ஒளிபரப்பும் `லொள்ளு சபா' மீண்டும் செம ஹிட். அதேபோல சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய விஜய் டி.வி-யின் `அது இது எது' யூடியூப் ஹிட்ஸில் டாப்பில் இருக்கிறது.

டி.வி-க்கு முன்பான காலத்தில் ரேடியோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களுக்கு, அவர்களின் குரலைக் கேட்கவே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும். அதன்பிறகு, மெட்ரோ பிரியா, பெப்சி உமா, விஜயசாரதி என டி.வி ஆங்கர்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டானது. தற்போது, யூடியூபுக்கு முன்பான டி.வி தலைமுறையில் உச்சபட்ச வைரல் வரவேற்பைப் பெற்ற கடைசி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சிவகார்த்திகேயன்தான்.

சனிக்கிழமையானால் சிவகார்த்திகேயனின் `அது இது எது' நிகழ்ச்சியை டியூஷனை கட் அடித்துவிட்டு பார்த்ததெல்லாம் என்றென்றும் நாஸ்டால்ஜியா. 7-8 `அது இது எது' முடிந்தவுடன் ஒரு மணி நேரம் இடைவெளிவிட்டு, 9 மணிக்கு ஜோடி No.1 என சிவகார்த்திகேயன் ஓவர் டியூட்டி பார்த்து அன்லிமிட்டட் என்டெர்டெயின்மென்ட் கொடுத்திருப்பார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருந்தது. டி.வி நிகழ்ச்சிகளுக்கும் ஆங்கர்களுக்கும் இருந்த ஃபார்மலான ஸ்டைலை உடைத்தெறிந்து, புதுவிதமான கலாய் பாணியைக் கையிலெடுத்தார். அந்த ஸ்டைல், `அது இது எது' நிகழ்ச்சியில் அவர் வாரம்தோறும் அணிந்து வந்த டிசைன் டிசைன் டி-ஷர்ட்டுகளைப் போல செம கலர்ஃபுல்லாக இருந்தது. டைம்பாஸுக்கு நான்கு காலேஜ் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்குமோ அதே போலத்தான் எஸ்கே-வின் ஷோக்களும் இருக்கும். சிவகார்த்திகேயனின் ஷோக்களுக்கு வரும் கெஸ்ட்டுகளும் நடுவர்களும்தான் அங்கே அவருக்கு நண்பர்கள். அவர்களை அவ்வளவு இலகுவாக ஃபீல் பண்ணவைத்து, தன்னுடன் சேர்ந்து காமெடி களேபரம் நடத்தத் தயார் செய்துவிடுவார்.

இன்றைக்கும் யூடியூபில் டிரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் ஜோடி No.1 ப்ளூப்பர்கள்தான் அதற்கான சான்று. ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து சிவா அடித்திருக்கும் லூட்டிகள் எவர்கிரீன் ரகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1970-80... நாடகப் பாணியிலான தன்மைகளில் இருந்து தமிழ்சினிமா தன்னை புதுப்பித்துக்கொண்ட காலகட்டம். புதுப்புது இயக்குநர்கள் பல வித்தியாசமான திறமைகளோடு வந்திறங்கினர். உண்மையில், தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் டைரக்டர்களாகப் போற்றப்படும் பலரும், அந்த காலகட்டத்தில்தான் சினிமாவில் அறிமுகமாகினர். அதே காலகட்டத்தில்தான், பாலிஷ் ஹீரோக்களைத் தாண்டி, கலைந்த தலையோடும் கறுப்புத்தோலோடும் முகம் முழுவதும் தாடியோடும், சற்று பெருத்த உடலோடும் சினிமாவுக்கென்று வரையறுக்கப்பட்ட அழகு எல்லையை உடைத்தெறிந்து திறமையை மட்டும் நம்பி தமிழ்நாட்டின் இண்டு இடுக்குகளிலிருந்து ஹீரோக்கள் கோடம்பாக்கத்துக்கு வர ஆரம்பித்தார்கள். கோலிவுட்டின் அந்த காலகட்டத்தைப் படமாக வரைந்தால், சாமான்யன் சாதித்த பொற்காலம் எனப் பெயர் வைத்துவிடலாம். ஆனால், அதன் பிறகு 90-களின் நடுப்பகுதி அல்லது பிற்பாதியிலிருந்து சாமான்ய ஹீரோக்களின் வருகை மற்றும் நிலைத்தாடல் என்பது மிகவும் குறைவாகிப்போனது. முன்னே குறிப்பிட்ட சாமான்ய ஹீரோ, இயக்குநர்களின் வாரிசுகள், விளம்பர மாடல்களாக இருந்த `வெள்ளாவி வச்சு வெளுத்த' ஹீரோக்கள்தான் மிகுதியாக அறிமுகமாகத் தொடங்கினர். எந்த சாமான்யனும் சினிமாவுக்குள் வரக்கூடாது என யாரும் ரெட் கார்ட் போடவில்லை. இருப்பினும், சினிமாக் களம் என்பது இவர்களுக்கானதாக மட்டுமே உருமாறியிருந்தது. ஒரு சாமான்யன் ரசிகனாக மட்டுமே இருந்து சினிமாவை ரசிக்க வேண்டிய நிலை. வாரிசாக இருந்தாலும் அந்த நிலையில் உண்டாகும் சங்கடங்களைக் கடந்து சில ஹீரோக்கள் தொடர் வெற்றிபெற்று உச்சம் தொட்டனர். சிலர், இன்னும் தங்களுக்கான இடத்தைப் பெறுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றனர். 2010 வரைக்குமே இதே நிலைதான். ஆனால், இந்தக் கட்டத்தில்தான் சினிமாவுக்குள் மீண்டும் சாமான்யனுக்கு இடமுண்டு என்பதை நிரூபிக்க நம்மிலிருந்து புறப்பட்டவர்கள் போன்றே உணரவைக்கும் இரு நடிகர்கள் அறிமுகமானார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

ஒருவர் விஜய்சேதுபதி, இன்னொருவர் சிவகார்த்திகேயன். முதலில் நாடக பாணியிலிருந்து வேறொரு நடைக்கு சினிமா மாறும்போது எப்படி சாமான்யர்கள் உள்ளே நுழைந்தனரோ, அதே போன்று 2010-க்குப் பிறகு உண்டான குறும்பட அலையில் தமிழ்சினிமா ஒரு மாற்றத்தைக் காணத் தொடங்கியது. கையில் ஒரு கேமராவும், மூளைக்குள் ஒரு ஐடியாவும் இருந்தால் போதும்... சினிமாவில் ஜெயித்துவிடலாம் என்ற நிலை உருவானது. இந்த கட்டத்தில், தமிழ்சினிமாவில் நுழைந்தவர்தான் சிவகார்த்திகேயன். இந்த ஷார்ட் ஃபிலிம் அலைதான் எஸ்கே-வை சினிமாவுக்குள் இழுத்துப்போட்டது என முழுமையாகச் சொல்லமுடியாது. இளம்வயதிலேயே டி.வி மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்து, தனக்கான தனி முகவரியை உருவாக்கிவிட்டார். அதில் அவர் உச்சம்பெற்று தலைதட்டிக்கொண்டிருந்த காலத்தில்தான், ஷார்ட் ஃபிலிம் யுகம் ஆரம்பிக்கிறது. புதுப்புது ஐடியாக்களுடன் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் உள்ளே வர, அவர்களோடு சேர்ந்து சிவாவும் வளரத்தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திறமை இருந்தால் போதும், சின்னச்சின்னதாக முன்னேறி சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையைப் பிடித்துவிடலாம் எனப் புது டிரெண்டை உருவாக்கினார்.

அதன்பிறகு, ஒரு டஜன் டி.வி ஆங்கர்களும் அதே பாணியில் புறப்பட்டார்கள். இன்னமும் எஸ்கே-வின் மேனரிசங்களோடும், ஸ்லாங்கோடும் கலாய்த்துக்கொண்டிருக்கும் ஆங்கர்களை பல சேனல்களில் பார்க்கமுடிகிறது.

இந்த டிகேடில் புதுப்புது ஐடியாக்களையும், டைரக்டர்களையும் தமிழ் சினிமா பெற்றிருந்தாலும், தன்னுடைய என்டர்டெயின்மென்ட் பாதிப்பை அது இழந்துவிட்டதென்றுதான் சொல்ல வேண்டும். வரிசைகட்டி எல்லா ஹீரோக்களுமே `சோஷியல் மெசேஜ் சொல்கிறேன்' என கேமராக்கள் முன் நின்று பிரஸ்மீட் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏற்கெனவே பிரேக்கிங் நியூஸ் யுகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு, இந்தப் படங்கள் ஒருவித சலிப்பையும், வெறுப்பையும் உண்டாக்கின. இந்த வெறுப்புகளிலிருந்து மீட்டு, சிரிப்பைக் கொடுத்து ஓரளவுக்கு கூலாக்கியது சிவகார்த்திகேயனின் படங்கள். ஆனால், அவரது சமீபத்திய படங்களும் கருத்து பேச ஆரம்பித்திருப்பது தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு நாயகனின் தனித்துவமான குவாலிட்டிகளைக் காலிசெய்வதுபோல் இருக்கிறது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஒரு ஹீரோவும் காமெடியனும் மட்டுமே படம் முழுவதும் மாறி மாறி பேசிக்கொண்டிருப்பதை இரண்டரை மணி நேரம் யாராலும் பார்க்க முடியுமா!? முடியும், அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இருந்தால் பார்க்க முடியும். ரசிகர்களும் அந்தப் படங்களை 100 நாள்கள் ஓடவைத்து பம்பர் ஹிட் கொடுப்பார்கள். அதுதான் எஸ்கே-வின் தனித்தன்மை. அவரின் அந்தப் படங்கள் ஒரு டிரெண்ட் செட்டர்ஸ். `கேடி பில்லா கில்லாடி ரங்கா', `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என ஹிட் அடித்த அவர் படங்களின் சாயலில் பல டஜன் படங்கள் வெளியாகிவிட்டன. `ரஜினிமுருகனை' குடும்பம் குடும்பமாக வந்து கண்டனர்.

எஸ்கே-வை விஜய் டி.வி-யின் ஆரம்ப கட்டத்திலிருந்து ரசித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும், அவர் டி.வி-யில் கொடுத்த என்டர்டெயின்மென்ட்களில் 25 சதவிகிதத்தைத்தான் சினிமாவில் கொடுக்கிறார் என்பது. சுமாரான `மிஸ்டர் லோக்கல்' படம்கூட அந்த ஜோடி No.1 காலத்து எஸ்கே-வை ஆங்காங்கே பிரதிபலித்தது.

`மெரினா', `மனங்கொத்திப்பறவை', `எதிர்நீச்சல்', `வ.வா.ச', `ரஜினி முருகன்' என சிவகார்த்திகேயனின் சினிமா கரியருக்கு ஒரு கிராஃப் வரைந்தால், அது ஏறுமுகத்தில் மட்டுமே இருக்கும். இவையெல்லாமே சின்னத்திரை சிவாவின் எனர்ஜிக்கு வெகுவாக தீனிபோட்ட படங்கள். அவரது டிரெண்டில் இருந்தும் ஸ்டைலில் இருந்தும் மாறி `வேலைக்காரன்', `ஹீரோ' என சில படங்கள் நடிக்கும்போது கொஞ்சம் தடுமாறினார்.

இந்த மாதிரி படங்களைக் குறைத்துவிட்டு, எஸ்கே எப்போது வருவார் என ஏங்கவைத்த அந்த டி.வி என்டர்டெயினரை உங்களுடைய படங்களில் காட்டுங்க ப்ரோ.

கடந்த வாரம் ஒளிபரப்பான அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன் விஜய் கையால் பெஸ்ட் என்டர்டெயினர் விருது வாங்கும்போது, ``சிவா எப்பவுமே ஒரு என்டர்டெயினர். எப்பவும் மக்களை எப்படியாச்சு என்டர்டெயின் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பார்'' என கோபிநாத் சொல்வார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

துக்கப்பட்டு... துன்பப்பட்டு... துயரப்பட்டு... கஷ்டப்பட்டு... என்றும் பிரேக்கிங் நியூஸ், எதிலும் பிரேக்கிங் நியூஸ் என்ற கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு எஸ்கே போன்ற என்டர்டெயினிங் கலைஞர்கள்தான் தேவைப்படுகிறார்கள்.

`மான்கராத்தே' பட க்ளைமேக்ஸில், `தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்' என சிவகார்த்திகேயன் சொல்லும் திருக்குறள், நிஜவாழ்க்கையில் அவருக்கே 100% பொருந்தும்.

மாஸா, ஜாலியா, கலாயா, கேலியா படங்கள் பண்ணுங்க ப்ரோ...

ஹீரோ வேண்டாம்... நண்பன்தான் வேண்டும்!