Published:Updated:

லைவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான்... திட்டு வாங்கிய குஷ்பு... நாஸ்டால்ஜிக் நதியா... இந்த நாள் இப்படித்தான்

சோஷியல் மீடியா ரவுண்டப்
சோஷியல் மீடியா ரவுண்டப்

சோஷியல் மீடியா மூலம் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களையும், ரசிகர்கள் பிரபலங்களை அணுகுவதும் எளிதாகிவிட்ட நிலையில், பிரபலங்களின் சோஷியல் மீடியா ரவுண்ட்தான் இந்தக் கட்டுரை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

50-வது புவி தினம் (Earth Day) நேற்று கொண்டாடப்பட்டது. பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்தான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் விதமாக, உலகின் முக்கியமான இசைக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கைகோத்துள்ளார் `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்.

`Hands Around the World’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புராஜெக்ட்டுக்கான பாடல் இன்று வெளியான நிலையில், அது குறித்து உரையாட நேற்று மாலை இன்ஸ்டாவில் முதன்முறையாக லைவ் வந்தார் ரஹ்மான். தனது ஸ்டூடியோவில் இருந்தபடி, பின்னால் திரையில் பாடலை ஒளிபரப்பிய ரஹ்மான், கொரோனா சூழல் குறித்தும் இந்தப் பாடல் குறித்தும் பேசினார். `இன்ஸ்டாவில் லைவ் வருவது இதுவே முதல்முறை… வரும் நாள்களில் உரையாடலாம்’ என ஸ்வீட் அண்ட் சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

அறிக்கைவிடுவது, கருத்து சொல்வது என அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் சோஷியல் மீடியாவை தங்களது நவீன களமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், குஷ்பு இன்று தனது ட்விட்டர் பதிவில், ``இந்த லாக் டௌன் சூழலில் பலரும் சோஷியல் மீடியாவில் உணவு வகைகளைப் புகைப்படம் எடுத்து பெருமையாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நாள்களில் பலரும் உணவுக்காக கஷ்டப்படும்போது, இந்த மாதிரியான பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது” என ட்வீட் போட வழக்கம் போலவே எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கீழே கமென்டில் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க்வாரன்டீன் நாள்களில் சோஷியல் மீடியாவில் செலிப்ரிட்டிகள் பலரும் பிஸியாக இருக்க, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதிலும் தலைகாட்டாமல் இருந்த நதியா முதல்முறையாக ட்விட்டர் மூலமாக சோஷியல் மீடியா உலகுக்கு வந்திருக்கிறார்.

தான் சினிமாவில் நடித்தபோது வெளிவராத ஸ்டில்கள், தன் மகள்கள், கணவர் எனக் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், யோகா, சமையல் புகைப்படங்கள் எனப் பலவற்றைப் பதிவிட்டு தினம் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து வருகிறார் நதியா.

பல பெரிய படங்கள் தியேட்டர் ரிலீஸைவிட OTT ரிலீஸில் பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகின்றன. சாதியைத் தவறாக முன்னிறுத்தியது, கதைத்திருட்டு என OTT ரிலீஸுக்குப் பிறகு சர்ச்சைகளில் சிக்கிய மாஃபியா, ஹீரோ பட வரிசையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து OTT-யில் வெளியான `வரன் அவஷ்யமுண்டு’ சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

படத்தில் பாடி ஷேமிங் காட்சியில் பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர், இது குறித்து ட்வீட் போட படக்குழு மன்னிப்பு கேட்டு அந்தக் காட்சியை நீக்கியிருக்கிறது.

விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியிடப்படவுள்ள புதிய சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா. இதற்கான அறிவிப்பைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லாக் டௌன் சூழலில் வெறுமனே பொழுதைக் கழிக்காமல், இந்தச் சூழலில் அதிகரித்துள்ள குடும்ப வன்முறை, கோலியைச் சந்தித்த பிறகு தங்கள் வாழ்வில் நடந்த மாற்றங்கள் எனப் பலவற்றையும் பதிவிட்டு வருகின்றனர் கோலி - அனுஷ்கா தம்பதியினர்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்பட விருது விழாவை, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இதில் கலந்துகொண்ட ஜோதிகா, ``தஞ்சையில் படப்பிடிப்பு நடந்தபோது பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அழகாக இருந்தது. நன்கு பராமரித்து வந்தார்கள். அடுத்தநாள் மருத்துவமனையில் எனக்குப் படப்பிடிப்பு இருந்தது. அங்கு பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது. கோயிலுக்குச் செலவு செய்வதைப் போலவே, பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்” எனப் பேசியுள்ளார். இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மதத்தைப் புனிதமாக்கி முன்னிறுத்தும் கும்பல் வழக்கம்போல, சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகிறது.

கடினமான இந்த க்வாரன்டீன் சூழலில் மக்களிடம் பாசிட்டிவிட்டியை விதைக்க `அன்பும் அறிவும்’ என்ற பாடலை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். ஜிப்ரான் இசையமைக்க, ஷ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, சித்தார்த், அனிருத் எனக் கிட்டத்தட்ட 49 பேர் இந்தப் பாடலை இணைந்து பாடியுள்ளனர். வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதியைப் பாடி பதிவு செய்து அனுப்ப, அதை ஜிப்ரான் இணைத்துள்ளார். இன்று வெளியான இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே லைக்ஸை அள்ளி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு