Published:Updated:

`தனுஷ்னாலே கன்னடியன்ஸ் ஒரு வெறியோட கிளம்பிடுறாங்க!' சாண்டல்வுட் vs கோலிவுட்

கன்னட சினிமா
கன்னட சினிமா

கன்னடத்தில் பல நல்ல சினிமாக்கள் இருந்தாலும் ரீமேக் என்ற பெயரில் நம்மூர் படங்களைப் பாரபட்சம் பார்க்காமல் வைத்து செய்திருக்கிறார்கள். உடைந்த பர்னிச்சர்களை மீண்டும் உடைப்பதுபோல் நம் மீம் பாய்ஸும் பர்ஃபாமன்ஸ் செய்து வருகிறார்கள்.

அமலுக்கு வந்த சில நாள்களே ஆன, புத்தம்புதிய `க்வாரைன்டீன் 3.0' தற்போது வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் பசி, பட்டினி எனப் பலர் துவண்டுபோய் கிடக்க, மறுபக்கம் சினிமா, மீம்ஸ், வெப்சீரிஸ் எனச் சிலர் பொழுதை ஓட்டுகிறார்கள். அந்த மீம் க்ரியேட்டர்கள் கும்பலோ, தற்போது கையிலெடுத்திருப்பது கன்னட சினிமாவை. யாரோ ஒரு புண்ணியவான், `பாட்ஷா' படத்தின் கன்னட ரீமேக்கான `கோட்டிக்கோப்பா'வின் வீடியோவை ஃபேஸ்புக்கில் எடுத்துப்போட, கன்னட சினிமா கன்டன்ட் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. "தனுஷ் நடிச்ச `பொல்லாதவன்' படமாடா இது?" என நம் ஆட்கள் கலாய்க்க, ``ரஜினி நடிச்ச `பொல்லாதவன்' படமே கன்னட ரீமேக்தான் என் சிப்ஸு" எனப் பதிலுக்கு அவர்கள் கலாய்க்க, பிரச்னை அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது.

கன்னட சினிமா
கன்னட சினிமா

சரி, நமது ஆட்கள் இப்படி வெறிகொண்டு கலாய்த்துக்கொண்டிருக்கும் கன்னட சினிமாக்களில் என்னதான் இருக்கிறதென பார்க்க சில படங்களை ஓடவிட்டேன். முதல்படம், `காவலன்' படத்தின் கன்னட ரீமேக்கான `பாடிகார்ட்'. படத்தின் போஸ்டர் பார்க்கையில், விஜய்க்கு பதில் ராஜ்கிரண் கதாபாத்திரத்தை பாடிகார்டாக மாற்றி, திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள் என நினைத்தேன். என் தவறுதான், அது விஜய் கதாபாத்திரம்தான்! மிரட்டியிருக்கிறார் நாயகன் ஜக்கேஷ். ஆம், படம் தொடங்கி 10 நிமிடங்களிலேயே, படபடப்பாகி குப்பென வியர்த்துவிட்டது. இந்நேரத்தில் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் எனப் படத்தை க்ளோஸ் செய்துவிட்டேன். `பேரழகன்' படத்தின் நாயகனும் நம் ஜக்கேஷ்தான். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், சின்னா கதாபாத்திரத்தில் உழைப்பைக் கொட்டி நடித்திருக்கிறார். ஆனால், அந்த பாக்ஸிங் கதாபாத்திரம் இருக்கிறதே! விடுங்கள் அது எதற்கு இப்போது.

``தனுஷ் `பொல்லாதவன்' படமாடா இது?" என நம் ஆட்கள் கலாய்க்க, ``ரஜினி நடிச்ச `பொல்லாதவன்' படமே கன்னட ரீமேக்தான்" எனப் பதிலுக்கு அவர்கள் கலாய்க்க, பிரச்னை அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜக்கேஷுக்குப் பிறகு யோகேஷைதான் அதிகம் வறுத்தார்கள் நம் மீம் க்ரியேட்டர்கள். அதுவும் `பொல்லாதவன்' படத்தின் கன்னட ரீமேக்கான படத்தில் ஒரு காட்சியை உலவவிட்டிருந்தார்கள். அதில் டேனியல் பாலாஜியாக நடித்திருந்தவர் தாடி பாலாஜியை விட காமெடியான எக்ஸ்பிரஷன்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். தனுஷாக நடித்த யோகேஷோ, நடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். `திருவிளையாடல் ஆரம்பம்' படத்தின் கன்னட ரீமேக்கிலும் அவர்தான் ஹீரோவாம். நம் ஊர் லொள்ளு சபாவில் ரஜினி கதாபாத்திரத்தில் எல்லாம் ஜீவா நடிப்பதுபோல், தனுஷ் படம் என்றாலே யோகேஷ்தான் நடிப்பார் போலும்.

கன்னட சினிமா
கன்னட சினிமா
கன்னடத்தில் 'லூசியா', 'திதி', 'ஒண்டு மொட்டேய கதா', 'கே.ஜி.எஃப்', 'உள்ளிட்டவறு கண்டந்தே', 'காவலுதாறி', 'கதேயொண்டு ஷுருவாகிதே', 'அவனே ஶ்ரீமன் நாராயணா' எனப் பல நல்ல சினிமாக்கள் இருந்தாலும் ரீமேக் என்ற பெயரில் நம்மூர் படங்களைப் பாரபட்சம் பார்க்காமல் வைத்து செய்திருக்கிறார்கள். உடைந்த பர்னிச்சர்களை மீண்டும் உடைப்பதுபோல் நம் மீம் பாய்ஸும் பர்ஃபாமன்ஸ் செய்து வருகிறார்கள்.

படத்தின் டைட்டிலை வைத்தே அடிக்க ஆரம்பித்தார்கள். இங்கு `மன்மதன்' என்றால் அங்கு `மதனா', இங்கு `மைனா' என்றால் அங்கு `சைலு', இங்கு `நட்புக்காக' என்றால் அங்கு `டிக்கஜாரு', இங்கு `அமர்க்களம்' என்றால் அங்கு `அசுரா', இங்கு `தேவர் மகன்' என்றால் அங்கு `தந்தேகே தக்கா மகா', இங்கு `காக்க காக்க' அங்கு `தண்டம் தசகுணம்'... `அடங்கப்பா... சுகர் பேஷன்ட் டா நானு' என்றால், `படுத்தபடுக்கையில் இருந்தாலும் எழுப்பி கன்னட சினிமாவின் புகழ்பாடுவேன்' எனக் கலாய்த்து வருகிறார்கள்.

கோலிவுட்டின் முக்கிய இயக்குநரான பாலாவின் முக்கால்வாசி படங்களைக் கன்னட தேசத்தில் ரீமேக்கியிருக்கிறார்கள். சிரிக்காதீங்க பாஸ். `இளங்காத்து வீசுதே' பாடலில் பலாப்பழத்தைப் பிய்த்தெடுத்த காட்சியைக் கன்னட வெர்ஷனில் பார்த்தால் பழத்தோடு சேர்ந்து மனமும் பிய்ந்து நாறு, நாறாகத் தொங்கும். பாலா படங்களின் ரீமேக்கில் மிக முக்கியமான படம் `ஹுச்சா'. தமிழில் `சேது'. உண்மையில், அப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்லுபாய் செய்த காமெடிகளைவிட, `ஹுச்சா'வில் கிச்சா சுதீப் நன்றாகவே நடித்திருப்பார்.

தமிழகத்தின் பட்டித்தொட்டி எல்லாம் ரசிகர்களைக் கொண்டிருக்கும் `ராக்கிபாய்' யஷ்கூட சில தமிழ் ரீமேக்குகளில் நடித்திருக்கிறார். `களவாணி'யின் கன்னட ரீமேக்கான `கிரடகா'வில் யஷ்தான் ஹீரோ. அடுத்து `களவாணி-2' ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்த்தால் `கே.ஜி.எஃப்-2' வில் மாஸ் காட்டுகிறார். சலாம் ராக்கிபாய்.
கன்னட சினிமா
கன்னட சினிமா
'பிதாமகன்' முதல் 'பவர் பாண்டி' வரை..! - கன்னட சினிமா கண்டம் பண்ணிய தமிழ்ப் படங்கள் (பாகம்-2)

பார்த்தாலே பயந்துவரும் படங்கள் உண்டுதான் என்றாலும், ஆச்சர்யப்பட வைக்கும் படங்களும் இருக்கின்றன. ரீமேக் வகையறாக்களுக்கே இந்தச் சோகக்கதை. இதைத்தான்டி நல்ல கதைகளோடு, தாறுமாறான அசல் கன்னட சினிமாக்களும் நிறைய இருக்கின்றன. அந்தக் கன்னட சினிமாக்களைக் கண்டு உய்யவும் எம் தமிழ்மக்களே!

நீங்கள் ரசித்த கன்னடப் படங்களை கமென்ட்டில் சொல்லவும்.
அடுத்த கட்டுரைக்கு