Published:Updated:

`என்ன நடந்தாலும், யார் துண்டாட நினைத்தாலும் இந்தியன் எங்கும் செல்லமாட்டான்!' #25YearsOfBombay

பம்பாய்
News
பம்பாய்

இவர்களின் மூலமாக மனிதர்களுக்குள் புரையோடிக் கிடக்கும் மதவெறியை நம் கண்களுக்கு எடுத்துப் போட்டிருப்பார் மணிரத்னம். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், நாராயணன் பிள்ளையாக நடித்த நாசர் ஒரு முஸ்லிம். பஷீராக நடித்த கிட்டி ஒரு இந்து.

`நான் இந்துவும் இல்லை, நான் முஸ்லிமும் இல்லை. நான் இந்தியன்' எனும் கருத்தை முன்வைத்து வெளியான படம் `பம்பாய்'. 90-களின் முற்பாதிகளில் இந்தியா எங்கும் பல்வேறு இடங்களில் நடந்த மதக்கலவரங்களைக் களமாக எடுத்துக்கொண்டு, அதை இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு காதலன், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு காதலி என இரு காதலர்களின் கதையாகச் சொன்னது இப்படம்.

பம்பாய்
பம்பாய்

அந்தக் காலகட்டங்களில், தென் இந்தியா மற்றும் வட இந்தியாவில் நிலவிய சமூக சூழல்களின் இடையில் இருந்த வித்தியாசத்தை, இதமான மாங்குடி கிராமத்தையும், உஷ்ணமான மும்பை நகரையும் கொண்டு காட்டியிருப்பார்கள். ஆனால், அங்கும் இங்கும் மனிதர்களுக்குள் ஒரே மாதிரியாக இருக்கும் மத ரீதியான வெறுப்புணர்வை, நாராயணன் பிள்ளை மற்றும் பஷீர் கதாபாத்திரங்கள் மூலம் காண்பித்திருப்பார்கள். `அவங்க யார், நாம யாருடே', `ரெண்டும் வெவ்வேற ரத்தம். ஒண்ணு சேராது' என்பதே இருவரின் பிடிவாதமாக இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`நான் தவம் இருந்த பெத்த புள்ளடே நீ' எனச் சேகரிடம் பாசம் காட்டும் நாராயணன் பிள்ளை, தன் மகன் எங்கு தன் நிழலிலிருந்து விலகிச் சென்றுவிடுவானோ எனும் பயத்துடனேயே இருப்பார். `நான் மெக்கா போய் வந்ததும் பிறந்த புள்ள' என ஷாயிலாவிடம் பாசம் காட்டும் பஷீர், தான் இப்படி செங்கற்சூளையில் செத்து சுண்ணாம்பாக உழைப்பதே தன் மகளுக்காகத்தான் என்பார். இருவரின் கதாபாத்திரமும் கிட்டதட்ட பாதி மதவாதிகளைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பம்பாய்
பம்பாய்

அதிலும், நாராயணன் பிள்ளையின் கதாபாத்திரத்தினுள் இருக்கும் மத ரீதியான அதீத வன்மம், அவர் சேகருக்கு எழுதும் கடிதத்திலும் பஷீரிடம் செங்கல் வாங்க செல்லுமிடத்திலும் விளக்கியிருப்பார்கள். பஷீரோ ஆத்திரத்தில் உடனே அரிவாளைத் தூக்கிவிடுபவராகக் காண்பித்திருப்பார்கள். இப்படி இவர்களின் மூலமாக மனிதர்களுக்குள் புரையோடிக் கிடக்கும் மதவெறியை நம் கண்களுக்கு எடுத்துப் போட்டிருப்பார் மணிரத்னம். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், நாராயணன் பிள்ளையாக நடித்த நாசர் ஒரு முஸ்லிம். பஷீராக நடித்த கிட்டி ஒரு இந்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பம்பாய்' படத்தில் `நான் இந்தியன்' எனும் உணர்வை வாய்மொழியாகச் சொல்லி தீர்வாக வைப்பதுபோல், நாளைய உலகம் இன்றைய குழந்தைகளுக்கானது. குழந்தைகளின் உலகம் இந்த வெறிகள் எதுவுமின்றி, மனங்களில் அப்பழுக்கின்றி அற்புதமானவை. அவர்களுக்கும் இந்த வெறியை ஊட்டிவளர்த்து, நாளைய உலகையும் குறுதிக்காடாக மாற்றிவிடாதீர்கள் என்பதை படத்தினூடே காட்சிமொழியாகச் சொல்லி விவரித்திருப்பார். சேகரும் ஷாயிலாவும் திருமணம் முடித்துவிட்டு, அவர்கள் வீட்டுக்குள் முதன்முறையாக நுழைகையில் உள்ளே சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதைக் கண்டு சேகரும் ஷாயிலாவும் மெல்லிதாய் புன்னகைப்பார்கள்.

பம்பாய்
பம்பாய்

தலையணைப் பஞ்சுகள் பறந்து, நாற்காலிகள் விழுந்து, அந்த இடமே அல்லோகலப்படும். ஆனாலும், அது அழகு. மழலையின் அழகு. குழந்தையின் கிறுக்கலைவிட, இந்த உலகத்தில் அழகான ஓவியம் என்ன இருக்கப்போகிறது? ஆனால், அதே வீடு இந்த மதவெறியர்களின் வெறியாட்டத்தால் தீக்கிரையாகி சிதைந்துபோய் கிடக்கும். அதைப் பார்த்து சேகரும் ஷாயிலாவும் வேதனையில் கண்ணீர் சிந்துவார்கள். உலகத்தின் சிறந்த ஓவியர் வரைந்ததாகவே இருந்தாலும், அது மனிதத்துக்கு எதிராக வரைந்த ஓவியமாக இருப்பின், அதைவிட அருவருப்பான ஓவியம் எதுவுமில்லை.

ஷாயிலா கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்தவுடன் ஷாயிலாவின் குடும்பத்தார், நாராயணன் வீட்டுக்கு முஸ்லிம் முறைப்படி சம்பிரதாயம் செய்ய வருவார்கள். `இதுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பொறக்கப்போவுற புள்ளைக்காக' என மனைவியிடம் சொல்லிவிட்டு, அவர்களை வீட்டினுள் அழைக்கச் சொல்வார் நாராயணன். அப்போது, ஷாயிலாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியும் நாராயணன் வீட்டிலிருக்கும் ஒரு சிறுமியும் கைப்பிடித்து ஒன்றாக வீட்டுக்குள் செல்வார்கள். குழந்தைகள் மனதில் எந்த வேற்றுமையும் கிடையாது என இயக்குநர் சொல்ல வந்ததன், மற்றொரு சான்று இந்தக் காட்சி.

மனீஷா கொய்ராலா
மனீஷா கொய்ராலா

அதேபோல், சேகர் மற்றும் ஷாயிலா இருவரின் மகன்களும், கபீர் நாராயணன், கமல் பஷீர் என்கிற பெயர்களும் அதையே சொல்கின்றன. கலவரத்தில் தன் பெற்றோரையும் சகோதரனையும் பிரிந்து, தனியாக அவர்களின் வழிதேடி அலைந்துகொண்டிருக்கும் கபீர் நாராயணனிடம், ஒரு முஸ்லிம் சிறுமி வந்து ரொட்டி கொடுப்பாள். அவள் பெயரும் ஷாயிலா எனத் தெரிந்ததும், தன் தாயை நினைத்து அழுவான் கபீர். படத்தின் இறுதிக் காட்சியிலும், இரு தரப்பு மனிதர்களின் கரங்களுக்கு இடையில் குழந்தைகளின் கரங்களே கண்ணியாக மாறி மனிதச் சங்கிலியை உருவாக்கும்.

கலவரத்தில் நால்வரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்துபோய், பிறகு சேகரும் ஷாயிலாவும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். ஷாயிலா, தன் மகன்களுக்காக தீக்கிரையான அந்த வீட்டில் காத்திருப்பாள். நிலைமை இங்கு மோசமாக இல்லை. கிளம்பிவிடலாம் என சேகர் சொல்ல, இதுதான் அவர்களின் வீடு இதைவிட்டு அவர்கள் வேறெங்கு செல்வார்கள். மீண்டும் இங்கே வந்துவிடுவார்கள் என்பாள் ஷாயிலா. அதாவது, தீக்கிரயான அந்த வீட்டை, கலவரங்களால் காயப்பட்டு கிடக்கும் இந்தியாவின் உவமையாக காட்டி, இரு மகன்களையும் இந்தியர்களாகக் காட்டியிருப்பார்கள். என்ன நடந்தாலும், யார் துண்டாட நினைத்தாலும், இந்தியாவை விட்டு எந்த இந்தியனும் செல்லமாட்டான் என்பதை உணர்த்தியிருக்கும் அந்தக் காட்சி!

பம்பாய்
பம்பாய்

25 ஆண்டுகளுக்கு முன்பு வந்தப் படம், தற்போதைய அரசியல் சூழலுக்கும் பொருந்திப்போகிறது என்பதை நினைத்து மணிரத்னம் நிச்சயம் பெருமைப்படமாட்டார். 25 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அந்த வெறி அடங்கவில்லை என வருத்தம்தான் கொள்வார். இனி வரும் காலங்களிலாவது இந்நிலை மாற, உங்கள் குழந்தைகளிடம் சொல்லி வளருங்கள், `அன்பே கடவுள். மனிதம் தாண்டி புனிதம் இல்லை' என்று!