Published:Updated:

வாவ்... காதலை இவ்ளோ அழகாச் சொன்னதுக்கே... வி லவ் `வாரணம் ஆயிரம்' கெளதம்! #11YearsofVaaranamAayiram

`ஐ'ம் இன் லவ் வித் யூ' என சூர்யா, சிம்ரனிடம் சொல்லும் அந்தக் காட்சியெல்லாம் `அதையும் தாண்டி புனிதமானது!'

பெயரைப் போலவே இதுபோன்ற சினிமாக்கள் ஆயிரம் படங்களுக்கு ஒருமுறைதான் வரும். கல்லூரிக் காதல், பிரிவு, மன அழுத்தம், போதை வாழ்வு, மீட்பு, மீண்டும் லட்சியத்தை நோக்கியப் பயணம் என ஒரு லைஃப் டிராவலை இவ்வளவு அழகாகச் சொன்ன தமிழ் படங்கள் குறைவு. அதில் `வாரணம் ஆயிரம்' டேபிள் டாப்பர். சூர்யா, கெளதம் மேனன் என இருவருமே தங்களின் பெஸ்ட்டைக் கொடுத்த படம் இது! திரைக்கு வந்து 11 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது `வாரணம் ஆயிரம்.'

கிருஷ்ணன் - மாலினி:

சிம்ரன்
சிம்ரன்
வாரணம் ஆயிரம்

முடியை அழகாக திருத்தம் செய்துவிட்டு வீட்டுக்கு வரும் கிருஷ்ணன் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ரத்த வாந்தியெடுப்பார். இந்தக் காட்சியோடுதான் படம் ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட மரணப் படுக்கையிலிருக்கும் கிருஷ்ணன், சோர்ந்த குரலில் அழைக்கும் பெயர் சூர்யா. சிரித்தபடி செத்து மடிந்திருக்கும் கிருஷ்ணனின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்குமென்பதை பின்னணியில் ஒலித்த `முன் தினம் பார்த்தேனே' பி.ஜி.எம் உணர்த்தியது. போருக்குப் பறந்துகொண்டிருக்கும் சூர்யா, அப்பா இறந்த செய்தியைக் கேட்டதும் அவரது நினைவலைகள் நீள, அங்கிருந்து ஆரம்பமாகும் மாலினி - கிருஷ்ணனின் காதல் காவியம். `என்னை விரட்டி விரட்டி லவ் பண்ணார். வீ ஃபெல் இன் லவ். அதுக்கப்புறம்தான் நீ, ஷ்ரேயா எல்லாம்' என ஒற்றை வரியில் தன் காவியத்தை சொல்லத் தொடங்குவார், மாலினி. நம் அப்பா காலத்து காதல் கதைகள் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் கெளதம். `ஐ'ம் இன் லவ் வித் யூ' என சூர்யா, சிம்ரனிடம் சொல்லும் அந்தக் காட்சியெல்லாம் அதையும் தாண்டிப் புனிதமானது!

படத்தின் வசனங்களிலும் அவ்வளவு எளிமை. அவர்களுக்குப் பிறந்திருக்கும் சூர்யாவைக் கையிலேந்தியிருக்கும் கிருஷ்ணன், `கையில பத்து பைசாகூட இல்லை. ஆனா, இந்த உலகத்துலே நான்தான் சந்தோஷமான ஆள்', `இவனுக்குன்னு என்ன எழுதியிருக்குனு தெரியலை. ஆனா, ஏதாவது தப்பா எழுதியிருந்தா அதை மாத்தி எழுதுவேன்'. தாய்மையோடு சேர்த்து தகப்பனின் உறவும் புனிதப்பட்ட இடம் இது. 

கிருஷ்ணன் - சூர்யா கிருஷ்ணன்:

சூர்யா
சூர்யா
வாரணம் ஆயிரம்

`வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே கதை சொல்லிகள். மொத்த படத்துக்கும் மையப்புள்ளியே கிருஷ்ணன்தான். அவர் இறந்ததையடுத்து ஒவ்வொருவருக்கும் அலைபாயும் அவரவரது நினைவுகள். மிஷனை அபார்ட் செய்யாமல் போருக்குப் போய்க்கொண்டிருக்கும் சூர்யாவின் நினைவில் ஆரம்பிக்கிறது இவருக்கான கதை. சூர்யாவுக்கு அப்பாதான் இன்ஸ்பிரேஷன். தன்னுடைய ஃபேரி டேலையும் அம்மா - அப்பாவின் காதல் கதையை வைத்துதான் எழுதுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிருஷ்ணனுக்கும் சூர்யாவுக்கும் இடையேயான உறவு, கவிதையைப் போல் அழகானது. கிருஷ்ணன், மாலினியைக் காதலிப்பது போலவே தானும் ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டுமென்பது சூர்யாவின் ஆசை. இது மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையைக் கூட சூர்யாவுக்கு சொல்லித் தருகிறார், கிருஷ்ணன். திருப்பியடிக்கச் சொல்லி தைரியம் சொல்கிறார். அவுட் ஸ்விங் பெளலிங் போடச் சொல்லித் தருகிறார். கல்லூரியில் சேர்க்கும்போது லெட்டர் எழுதச் சொல்கிறார். அதையும் 10 வருடங்கள் கழித்து படிக்கும்போது அழகாய் இருக்குமளவுக்கு எழுதச் சொல்கிறார்.

காதலுக்குள் காமம்... காமத்துக்குள் இசை... மூன்றும் கலந்து காக்டெய்ல் ஆனால்! #8YearsofRockstar

சூர்யாவும் தன் கல்லூரி படிப்பை முடித்து ஒரு பக்குவத்தையடைகிறார். கடன் பெற்ற சேட்டிடம் பணத்துக்காக பதில் சொல்லும் அப்பாவைப் பார்த்ததும் சூர்யாவுக்கு பொறுப்பு வருகிறது. `நீங்க கால் மேல கால் போட்டு உட்காருங்க டாடி. நான் பார்த்துக்குறேன்' என கிருஷ்ணனுக்கு நம்பிக்கைச் சொல்கிறார், சூர்யா. கிருஷ்ணாவும் சூர்யா வளர்ந்ததை உணர்கிறார். ஒரு நாள் மேக்னா மீது தனக்கிருக்கும் காதலை அப்பாவிடம் சொல்கிறார். `இங்க இருக்குடா அமெரிக்கா... கிளம்பு' என அவரை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார் கிருஷ்ணன். காதலியைத்தேடி கேரளாவுக்குப் போகலாம் எனச் சொன்னது 'அலைபாயுதே'. அமெரிக்காவரை போகலாம் எனத் தமிழ் இளைஞனின் காதல் எல்லைகளை விரிவுபடுத்தியது `வாரணம் ஆயிரம்.'

திடீரென ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுகிறார், கிருஷ்ணன். மைல்டு ஹார்ட் அட்டாக். உடனிருந்து அப்பாவை கவனித்துக்கொள்கிறார் மகன். டிஸ்சார்ஜ் ஆனதும் வேலைகளை முனைப்புடன் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்கிறார். பின், நின்றுபோயிருந்த வீட்டுப் பணிகளை மீண்டும் தொடங்கி அதை முடித்தும்விடுகிறார். அம்மா மாலினியை வீட்டுக்குள் முதலடி எடுத்து வைக்கச் சொல்கிறார். வாழ்க்கை அழகாக ஆரம்பிக்கிறது. பிறகு, சூர்யாவுக்கு மீண்டும் மேக்னாவின் நினைப்பு. அமெரிக்காவுக்கே கிளம்புகிறார். இதற்கும் அவரின் அப்பாதான் இன்ஸ்பிரேஷன். இதேபோலத்தான் ஹாஸ்டலின் சுவர் ஏறிக் குதித்து மாலினியைப் பார்த்துவிட்டு வருவார், கிருஷ்ணன். இதுவே சூர்யாவை தூர தேசம் பயணிக்க வைத்திருக்கும். இடம் மட்டுமே வேறு, ஆனால் காதல் ஒன்றுதான்.

ஸ்டார் அல்ல நடிகன்..!

மேக்னா விபத்தில் இறக்க, சூர்யாவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. ஒருநாள் கையில் போதை ஊசி பிடித்திருக்கும் சூர்யாவைப் பார்க்கும் கிருஷ்ணனுக்கு பதற்றமும், `முன்னாடியே உன்கிட்ட பேசியிருக்கணும்' என்கிற குற்ற உணர்வும் அதிகமாகிறது. முதல் முறையாக இருவருக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. அப்பாவை அடிக்க கை ஓங்குகிறார், சூர்யா. பின், சிறு வயதில் சூர்யாவின் கோபத்தை உதாரணமாகச் சொல்லி, `உன் கோபத்தையெல்லாம் பாசிட்டிவ் எனர்ஜியா மாத்து' என்று ஒரு நிகழ்வையும் ஞாபகப்படுத்துகிறார், கிருஷ்ணன். ஓரளவு சரியாகும் சூர்யா, இந்தியா முழுவதும் பயணம் செல்கிறார். கிட்டத்தட்ட கிருஷ்ணாவும் சூர்யாவும் ஒன்றுதான். ஜெனரேஷனுக்குத் தகுந்தாற்போல் பக்குவப்படுகிறார்கள்.

சூர்யா - மேக்னா:

கிருஷ்ணன் மாலினியைப் பார்த்த முதல் நொடியே விரும்பினார். அதேபோல சூர்யாவும் மேக்னாவைப் ரயிலில் பார்த்த மறு நொடியே விரும்புகிறார். ரயில் சத்தத்தோடு அவரது இதயத் துடிப்பும் தடதடக்கிறது. கிருஷ்ணாவுக்கு`முன் தினம்' ஒலித்தது போல், சூர்யாவுக்கு `நெஞ்சுக்குள் மாமழை' பெய்தது. இவர் செய்யும் சேட்டைகளை மேக்னாவும் ரசிக்கிறார். `என் இனிய பொன்னிலாவே' என மேக்னாவை வர்ணிக்கும் சூர்யா, தனக்குள் இருக்கும் காதலை உடனே சொல்கிறார். ஆனால், பார்த்தவுடன் காதலில் மேக்னாவுக்கு நம்பிக்கையில்லை. தற்காலிகமாக விடைபெறுகிறார். சூர்யாவும் விடுவதாயில்லை. 5 நாள்களில் மறுபடியும் மேக்னாவைப் பார்க்க அவரது வீட்டுக்கே செல்கிறார். தனது அமெரிக்கா கனவை சூர்யாவிடம் சொல்கிறார், மேக்னா. அப்போது அமெரிக்காவில் அவர் தங்கப்போகும் விலாசத்தை மட்டும் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறார், சூர்யா. சிலபல கடமைகளை முடிக்கும் சூர்யாவுக்கு மீண்டும் மேக்னாவின் நினைவுகள் தொற்றுகிறது. நிஜக் காரணத்தைச் சொல்லி வீஸா பெறும் சூர்யா, அமெரிக்காவுக்கும் செல்கிறார்.

சூர்யா - சமீரா ரெட்டி
சூர்யா - சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம்

கிட்டாரைத் தூக்கிக்கொண்டு அமெரிக்காவிலிருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ முழுவதும் மேக்னாவை தேடியலைகிறார். இறுதியில் கண்டும்பிடிக்கிறார். சூர்யாவைப் பார்த்த மேக்னாவுக்குப் பயங்கர ஷாக். லேசான புன்னகையோடு சூர்யா வீட்டின் விருந்தாளியாக உள்ளே அழைக்கிறார், தங்கச் சொல்கிறார். இறுதியில் இம்ப்ரெஸும் ஆகிறார். சான் ஃப்ரான்சிஸ்கோ முழுவதும் இவர்களது கால்தடம் பதிகிறது. ஒரு நாள் சூர்யா மீது தனக்குள்ளிருக்கும் காதலை ஒப்புக்கொண்டு, `ஐ எம் இன் லவ் வித் யூ சூர்யா. எங்க அப்பாவுக்கும் உன்னைப் பிடிக்கும். எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்' என அழகாய் ப்ரபோஸ் செய்கிறார், மேக்னா. சூர்யாவால் இதை நம்பமுடியவில்லை. அவரால் மறக்க முடியாத 90 நாள்களை மேக்னா தருகிறார். பின் எதிர்பாராமல் நடக்கும் விபத்து ஒன்றில் இறந்தும் போகிறார். ஏற்றுக்கொள்ள முடியாமலும், மீள முடியாமலும் ஏதேதோ செய்கிறார். ஒன்றும் முடியவில்லை. போதைக்கு அடிமையாகிறார். என்ன செய்தாலும் அவரது அஞ்சலை, அவரது மனதைவிட்டு அகல்வதாயில்லை. கஞ்சாவிலிருந்து போதை மருந்து வரை அனைத்துக்கும் அடிமையாகிறார். 

சூர்யா கிருஷ்ணன் - ப்ரியா சூர்யா கிருஷ்ணன்:

பதின்பருவ வயதில் அரும்பு மீசையெட்டிப் பார்த்தபோது நிகழ்ந்த ஒரு பிறந்தநாள் விழாவில் `கிஸிக்கீ முஸ்கராகட்டன் பிஹோ நிஸார்' பாடலைப் பாடுகிறார் சூர்யா. ஓர் ஓரமாய் அமர்ந்து சூர்யாவை ரசிக்கிறார், ப்ரியா. பல வருடங்கள் கழித்து இருவருக்கும் உரையாடல் நிகழத் தொடங்குகிறது. மேக்னா கொடுத்திருக்கும் மீள முடியா வலியில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது ப்ரியாவுடன் பேசும் வாய்ப்பு சூர்யாவுக்குக் கிடைக்கிறது. தனது வலியை தோழியென்ற முறையில் ப்ரியாவிடம் பகிர்கிறார், சூர்யா. அப்படியே இது அங்கு கட் ஆகிறது.

சூர்யா - திவ்யா ஸ்பந்தனா
சூர்யா - திவ்யா ஸ்பந்தனா
வாரணம் ஆயிரம்

சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவின் கண்ணில்படுகிறார், ப்ரியா. 8 வயதலிருந்தே சூர்யாவுக்கு ப்ரியாவைத் தெரியும். இந்தியா முழுவதும் பயணம் சென்றுவந்த பிறகு மீண்டும் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்குகிறார்கள். சடாரெனப் ப்ரியா சூர்யாவிடம் தனது காதலைச் சொல்கிறார். சூர்யா பதில் எதுவும் சொல்லவில்லை. தனக்கிருக்கும் ஆசைப்படி ராணுவத்தில் இணைந்து பணிகளைத் தொடர்கிறார். திடீரென ஒருநாள் ப்ரியா சூர்யாவைத் தேடி வருகிறார். மேக்னா சூர்யாவைப் பார்த்து இம்ப்ரஸ் ஆனதுபோல், மாலினி கிருஷ்ணாவைப் பார்த்து இம்ப்ரஸ் ஆனதுபோல் சூர்யா ப்ரியாவைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகிறார். சூர்யா காதலுக்கு ஓகே சொல்கிறார், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களது காதலுக்கு அடையாளமாக ஒரு குழந்தையும் பிறக்கிறது. இவ்வளவு அழகானதுதான் வாழ்க்கை.

சூர்யா - பயணம்:

ஒருவனின் உற்ற நண்பனே கெட்டதொரு தருணத்தில் நடக்கும் நல்லதொரு பயணம்தான். வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்கும் சூர்யா தான் சிக்கியிருக்கும் மேக்னா நினைவிலிருந்து மெள்ள மெள்ள மீள முயல்கிறார். அதே பயணத்தின்போது தனக்கு அறிமுகமான ஷங்கர் மேனனுக்கு ஆபத்து வந்திருப்பது தெரிந்து அவருக்கு உதவ கிளம்புகிறார். இதுதான் சூர்யாவின் வாழ்க்கையில் நடக்கும் மாபெரும் திருப்பம். கடத்தப்பட்ட ஷங்கர் மேனனின் ஐந்து வயது மகனை மீட்க பயணத்துக்குள் ஒரு பயணத்துக்குப் புறப்படுகிறார், சூர்யா.

சூர்யா
சூர்யா
வாரணம் ஆயிரம்

ஊர் முழுக்க அசம்பாவிதங்கள் நடக்க வித்திடும் இடங்களைத் தெரிந்துகொள்ள அலைகிறார். சிலரது பெயரை மீண்டும் மீண்டும் கேட்கிறார். நிறைய பேர் சொன்ன ஒரே பெயர் டப்பு மாலிக். அவனைத் தேடியலைந்த பின் ஆசாத் என்ற பெயர் அடிபடுகிறது. கால் வலிக்க பயணப்படுகிறார். நிறைய தெரிந்துகொள்கிறார். இறுதியில் ஆதித்யாவைக் கண்டும் பிடிக்கிறார். பல்வேறு சண்டைகளுக்குப் பிறகும், கத்திக் குத்துகளுக்குப் பிறகும் பையனை மீட்டு ஷங்கர் மேனனிடம் சேர்க்கிறார். இங்குதான் இவரது பாதையை ராணுவத்தின் பக்கம் திருப்புகிறார். அதற்காக தன்னை தயார்படுத்தியும் கொள்கிறார். ராணுவத்திலும் இணைகிறார். படமும் இங்கிருந்துதான் விரிவடைந்தது. ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டோம்.

``அஞ்சலியை மேடம்னு கூப்பிடாததுக்கு ஜெய் என்ன பண்ணார் தெரியுமா?'' - புலம்பும் `போஸ்டர்' நந்தகுமார்!

இப்படம் ஓர் அழகான நினைவு. கிட்டத்தட்ட கௌதம் மேனன் வாழ்க்கையின் ஓர் அங்கமே இந்த `வாரணம் ஆயிரம்'. அவர் வளர்ந்த அண்ணா நகர், மூகாம்பிகை கல்லூரி, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், 'காட்ஃபாதர்' புத்தகம் என நமக்குத் தெரிந்த சில அவரது விஷயங்களைச் சுற்றியே படமும் நகரும். காலரைத் தூக்கிவிட்டும், கையிலிருக்கும் காப்பை ஏற்றியும் கர்வமாகச் சொல்லலாம், இது என்னுடைய படமென்று. வாழ்த்துகள் கௌதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு