Published:Updated:

`பெட் கட்றியா.. பெட் கட்றியா..!' - அமலா பால் நடிக்கும் `ஆடை' படத்தின் டிரெய்லர்!

'மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம், 'ஆடை'. அமலா பால் லீடி ரோலில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை பாலிவுட்டின் இயக்குநரான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வைபவ், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், ரத்னகுமார். அதைத் தொடர்ந்து அமலா பாலை லீடு ரோலில் வைத்து இயக்கியிருக்கும் படம், 'ஆடை'. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, பிஜிலி ரமேஷ், ரம்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீஸரை பாலிவுட் இயக்குநரான கரன் ஜோகர் தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லரை பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார். அதில், ''ஆடை படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். படம் வெளியான பிறகு பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்'' என மென்ஷன் செய்து டிரெய்லர் லிங்கை ஷேர் செய்திருந்தார். டிரெய்லரைப் பார்த்தபின் முழுக்கவே ஹீரோயின் சென்ட்ரிக் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. படம் வரும் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு