Published:Updated:

விக்ரம் நடிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கும் `நேர்கொண்ட பார்வை' நடிகை!

`களவு', `நோட்டா', `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருக்கும் பிக் பாஸ் அபிராமி, தற்போது விக்ரம் படத்திலும் நடிக்கிறார்.

அபிராமி
அபிராமி

மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், கேரக்டர் ஆர்டிஸ்ட் என எல்லா ஏரியாவிலும் வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் அண்மையில் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தில் ஃபமீதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். எலிமினேஷன் செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கெளதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் கமிட்டாகி இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

அபிராமி
அபிராமி

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும், இன்னும் படத்துக்கான ஷூட்டிங் முடியவில்லை என்றும் தெரிவித்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. மேலும், இப்படத்தில் ரித்து வர்மா, ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், டிடி எனப் பலரும் நடித்திருக்கின்றனர். கெளதம் மேனனின் 'வாரணம் ஆயிரம்' 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்துக்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.