Election bannerElection banner
Published:Updated:

``சாம்பார் சாதம் செஞ்ச அஜித்தை சைட் அடிச்சு மாட்டிக்கிட்டேன்..!’’ - அபிராமி

Abhirami
Abhirami

’நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருக்கும் அபிராமியின் பேட்டி...

'நேர்கொண்ட பார்வை' படத்தோட ரீச் எப்படியிருக்கு?

Abhirami
Abhirami

''ரொம்ப சந்தோஷமா இருக்கு. படத்தைப் பார்த்த பலரும் என்னை 'ஃபமீதா'னுதான் கூப்பிடுறாங்க. அந்தளவுக்கு இந்த கேரக்டர்ஸ்கூட ஆடியன்ஸ் எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க. ஷ்ரத்தாகூட சொன்னாங்க, 'ஆடியன்ஸ் எல்லாரும் மீரா'னு சொல்றாங்கனு. கேட்கவே நல்லயிருக்கு.''

ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருந்தது?

Abhirami
Abhirami

''ஷாட் இல்லாத நேரங்களில் நானும் ஆண்ட்ரியாவும் உட்கார்ந்து சிரிச்சி பேசிக்கிட்டிருந்தோம். அப்போ எங்களைப் பார்த்த வினோத் சார், 'மா... கொஞ்சம் படத்தோட ஃபீலிங்லேயே இருங்க'னு சொன்னார். வயித்துல புளி கரைக்க ஆரம்பிச்சிருச்சு. அப்போ எங்க வாயை மூடிட்டு உட்கார்ந்தோம். அதுக்கு அப்புறம் படம் முடியுற வரைக்கும் அதே ஃபீல்கூடதான் டிராவல் ஆனேன்.’’

ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்கூட இருந்த அனுபவம்?

Abhirami
Abhirami

’’வானத்துல நிறைய நட்சத்திரம் இருந்தாலும் பெளர்ணமி அன்னைக்கு எல்லாரும் முழுநிலவைதான் பார்ப்பாங்க. அதுமாதிரிதான் அஜித் சார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தா என் கண்ணு அவரைத் தவிர வேற எதையும் பார்க்காது. உதவி இயக்குநர் ஷார்ட் பத்தி சொல்லிட்டு போயிருப்பார். நம்மோட முழு போகஸும் அஜித் சார் மேலேயே இருக்கும். அஜித் சாரை சைட் அடிச்சு, அவர்கிட்ட மாட்டிக்கிட்டேன். நான் பார்க்குறதை அவர் பார்த்ததும், லேசா ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சிட்டு போயிட்டார். கோர்ட் சீன் எடுக்குறப்போ நாங்க மூணு பேரும் அவரையேதான் பார்த்துட்டு இருந்தோம். படத்தோட ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி எங்க எல்லாருக்கும் டின்னர் கொடுத்தார். பயப்படாமல் அவர்கூட சேர்ந்து நடிக்க அது எங்களுக்கு உதவியா இருந்தது. ஸ்பாட்டில் சாம்பார் சாதம் செஞ்சு எங்க எல்லாருக்கும் கொடுத்தார்."

"தேவையில்லாம பேச மாட்டார். மூளையைப் பயன்படுத்தி பேசுற விஷயங்களைத்தான் பேசுவார். அதிகமா ஜி பயன்படுத்திதான் பேசுவார். 'சார் நீங்க அபிராமினு கூப்பிட்டாலே போதும்'னு சொன்னேன். 'மரியாதைங்கிறது நானும் கொடுக்கணும்'னு சொன்னார். அந்த தன்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஷாலினி மேடமுக்கும் அவருக்குமான காதல் பத்தி பேசுறப்போ அவ்வளவு க்யூட்டா இருக்கும். படத்தோட ரிலீஸப்போ நான் இல்லை. ஷ்ரத்தாவும் என்னை ரிலீஸப்போ மிஸ் பண்ணுனதா சொன்னாங்க. படம் ரிலீஸுக்குப் பிறகு, அஜித் சார்கிட்ட பேசணும்னு தோணுது. நடக்குமானு தெரியல.’’
அபிராமி

முதல் நாள் காட்சியை மிஸ் பண்ணுனது எந்தளவுக்கு ஃபீல் கொடுத்துச்சு?

Abhirami
Abhirami

"நான் ரொம்ப எமோஷனலான ஆள். எந்தவொரு விஷயத்தையும் உள்ளே வெச்சுக்க முடியாது. வெளியே கொட்டிருவேன். முதல்நாள் காட்சியில் இருக்க முடியலையேங்கிற வருத்தம் எனக்குள்ளே இருந்தது. இந்தப் படம் ரிலீஸுக்குப் பிறகு எனக்கான ரசிகர்கள் வருவாங்கனு நம்புனேன். அது வீண் போகல. முக்கியமா படத்துல கோர்ட்ல நான் பேசுற 'சரி சரி'ங்கிற காட்சியில் என் நடிப்பு நல்லாயிருந்ததுனு விமர்சனம் வந்திருந்தது. நாங்க எல்லாருமே கதாபாத்திரத்தை உள்வாங்கிட்டுதான் நடிச்சோம். அதற்கான மரியாதை கிடைச்சிருக்குனு நம்புறேன்.’’

படத்துல எந்தக் காட்சியில் நடிக்க கஷ்டமா இருந்தது?

"என்னோட ஆபீஸ்ல என்னைப் பத்தி தவறான விஷயம் ஒண்ணு வந்திருக்கும். அதைப் பார்த்து அதிர்ச்சியில் நானொரு ரியாக்‌ஷன் கொடுக்கணும். என்னால அந்தக் காட்சியில் சரியான ரியாக்‌ஷன் தரமுடியல; டேக் போயிட்டே இருக்கு. எனக்காக யூனிட் காத்திருக்காங்க. ஆனாலும், நான் சரியா பண்ணல. எனக்கு அழுகை வந்திருச்சு. வினோத் சார் 2 நிமிஷம் பிரேக் கொடுத்துட்டு போயிட்டார். அப்போ, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா சார் என்னை கூல் பண்ணுனார். அவர் பேசுனதுக்குப் பிறகு நல்லா நடிச்சு கொடுத்தேன். இருந்தாலும் இன்னும் நல்லா நடிச்சிருக்கலாம்னு இப்போ பீல் பண்றேன்.’’

 சினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

உங்களோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?

"சிங்கிள்னு சொல்லலாம். ஆனா, நான் ஒருவரை காதலிக்கிறேன். அது யார்னு தமிழ்நாட்டுக்கே தெரியும்.’’

பிரேக் அப் உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா?

’’நடந்திருக்கு.’’

Abhirami with Boney Kapoor
Abhirami with Boney Kapoor

இந்தப் படத்துல வேற எந்தக் கேரக்டரில் நடிச்சிருந்தா நல்லாயிருக்கும்னு ஃபீல் பண்ணுறீங்க?

’’வித்யாபாலன் கேரக்டர். எனக்கு அஜித் சாரின் மனைவி கேரக்டரில் நடிக்கணும்னு ஆசை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு