Published:Updated:

``அஜித் தரப்புல ஏன் அப்படி சொன்னாங்க?'' - ஆதவ் கண்ணதாசன் பதில்

ஆதவ் கண்ணதாசன்
News
ஆதவ் கண்ணதாசன்

"நிச்சயமா அஜித் சார் வார்த்தைக்கு நாம எல்லோரும் மரியாதை கொடுக்கணும். இதுக்கும் சில ரசிகர்கள் கவலைப்பட்டு ட்விட் போட்டுட்டிருக்காங்க. சிலர், இதை ஏத்துக்கவும் செஞ்சாங்க. ஆனா..."

மே 1-ம் தேதி, நடிகர் அஜித்தின் பிறந்தநாள். ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பாகவே சோஷியல் மீடியாக்களில் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முதல் கட்டமாக, அஜித் ரசிகர்கள் எல்லோருமே ஒரே டிபி வைக்க வேண்டும் என்கிற பிரசாரம் தொடங்கியிருக்கிறது. ஆனால், அஜித் இதை விரும்பவில்லை என ட்வீட் தட்டியிருக்கிறார், நடிகர் ஆதவ் கண்ணதாசன். அவரிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"தமிழ் சினிமாவை மிகவும் நேசிப்பவன் நான். இங்கே இருக்கும் எல்லா நடிகர்களின் படங்களையும் கொண்டாடுவேன். குறிப்பிட்ட நடிகரின் ரசிகனாக எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், சில ரசிகர்கள் விஜய், அஜித் பெயர்களை வெச்சு சண்டை போடுறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஏன்னா, இவங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள்தான். இவங்களுக்குள்ள எந்த மனக்கசப்பும் இல்லை; ஈகோவும் இல்லை. பொதுவெளியில, பேட்டிகள்ல கூட ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பெருமையாதான் பேசிட்டு இருப்பாங்க."

ஆதவ் கண்ணதாசன்
ஆதவ் கண்ணதாசன்

``எனக்கு 'மங்காத்தா' பிடிச்சளவுக்கு 'திருப்பாச்சி' படமும் பிடிக்கும். நான் ஸ்கூல் படிச்சப்போ, ஒரு ட்வின்ஸ் எனக்கு ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க. ஒருத்தனுக்கு அஜித் பிடிக்கும். இன்னொருத்தனுக்கு விஜய் பிடிக்கும். ரெண்டு பேரும் யார் பெரியவங்கன்னு அடிச்சிக்குவாங்க. அப்போ, இதெல்லாம் பார்க்குறப்போ சிரிப்பா வரும். இப்போ, இதுமாதிரிதான் சிலர் ட்விட்டர்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. இதை அஜித், விஜய் ரெண்டு பேருமே விரும்புறதில்லை."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``போனவாரம் எனக்கு மலேசியால இருந்து போன் வந்துச்சு. மலேசியாவில் இருக்கும் அஜித் ரசிகர்கள்னு அறிமுகம் பண்ணிக்கிட்டு, 'தல பிறந்தநாளைக் கொண்டாட நாங்க ரெடி பண்ணித் தர அவரோட புகைப்படத்தை ட்விட்டர்ல டிபி-யா வைக்க முடியுமா'ன்னு கேட்டாங்க. இதேமாதிரி பல நடிகர், நடிகைகள்கிட்டயும் கேட்டிருக்கிறதா சொன்னாங்க. ஓகே-ன்னு சொல்லிட்டேன்.

ஆதவ் கண்ணதாசன்
ஆதவ் கண்ணதாசன்

இந்த விஷயம் எப்படியோ தெரிஞ்சு, அஜித் சாரோட மேனேஜர் போன் பண்ணார். 'கொரோனா வைரஸ் தாக்கத்துனால மக்கள் எல்லாரும் கஷ்டப்பட்டுட்டு இருக்குற நேரத்துல, அஜித் சார் அவரோட பிறந்தநாளைக் கொண்டாட விரும்பல. அதனால இந்த மாதிரியான எந்த செலிபிரேஷனும் வேண்டாம்னு அஜித் சார் ஃபீல் பண்றார். டிபி-யெல்லாம் வைக்க வேண்டாம்'னு சொன்னார். இதெல்லாம் வேண்டாம்னு நான் சொன்னா எத்தனைப் பேர் கேட்பாங்கனு தெரியல. அதனால நீங்க போன் பண்ணி சொன்ன விஷயத்தை ஒரு ட்வீட்டா போடுறேன்னு அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் ட்வீட் போட்டேன்."

அஜித்
அஜித்

``நிச்சயமா அஜித் சார் வார்த்தைக்கு நாம எல்லோரும் மரியாதை கொடுக்கணும். இதுக்கும் சில ரசிகர்கள் கவலைப்பட்டு ட்விட் போட்டுட்டிருக்காங்க. சிலர், இதை ஏத்துக்கவும் செஞ்சாங்க. ஆனா, இதைத் தாண்டி அஜித் சாரோட பிறந்தநாள் அன்னிக்கு தமிழ் சினிமா நடிகர், நடிகைகள், ரசிகர்கள் எல்லாரும் ட்விட் போட்டு வாழ்த்து தெரிவிப்பாங்க. அதுல நானும் ஒருத்தனா இருப்பேன். இது போதும்னு நினைக்குறேன். ஒரு விஷயத்தை அஜித் சார் யோசிச்சு சொல்லியிருக்கார்னா, அதை நாம மதிக்கணும். ஏத்துக்கணும். கொரோனாவால் பொருளாதார பிரச்னைகள் வரும்கிற இந்தச் சூழல்ல, எல்லோரும் சிக்கனமாவும் இருக்கணும்'' என்றார்.