Published:Updated:

``இன்னிக்கு மட்டும் சேதுவைப் பார்க்க முடியாம போயிடுச்சுன்னா...!" - ஆரவ் உருக்கம்

சேதுவுடன் ஆரவ்
சேதுவுடன் ஆரவ்

நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன் குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆரவ்.

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகுதான் டாக்டர் சேது எனக்கு அறிமுகமானார். போயஸ் கார்டன்ல இருக்க அவரோட கிளினிக்லதான் அவரைச் சந்திச்சேன். அதுவரைக்கும் இப்படிப்பட்ட டாக்டரை நான் சந்திச்சதே இல்லை. முதல் நாளே ப்ரதர் ஃபீல் கொடுத்துட்டார். ஒரு 40 நிமிஷம் என்கிட்ட மட்டும் பேசிட்டிருந்தார். எல்லா விஷயம் பத்தியும் என்கிட்ட ஷேர் பண்ணிப்பார். நான் கிளினிக் போனாலே ஹேப்பியாகிடுவார். `வீட்டுல அம்மா, மனைவிக்கு உங்களைப் பிடிக்கும்'னு சொல்லிட்டு இருந்தார். ரொம்ப பாஸிட்டிவான நபர். செலிபிரட்டி பலரும் அவர்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்காக போவாங்க. துளியும் தலைகனத்தோட இருக்க மாட்டார். ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப்."

சேது
சேது

``எல்லா தரப்பு மக்களும் அவர்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்காக வருவாங்க. எல்லோர் கிட்டேயும் சிரிச்ச முகம் மாறாமல் பேசுவார். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் அவரை ரெகமன்ட் பண்ணிருக்கேன். அவருக்கு ஃபிட்னஸ் பிடிக்கும். நானும் பிட்னஸ்ல ஆர்வமா இருக்குறதாலே, அடிக்கடி ஒர்க்-அவுட், டயட் பற்றியெல்லாம் பேசிக்குவோம்."

``எந்த சந்தேகம் இருந்தாலும், இரவு நேரமா இருந்தாலும் கேட்டால் உடனே பதில் சொல்வார். அவரே நம்மள கூப்பிட்டு இப்போ ஸ்கின் எப்படியிருக்கு போட்டோ எடுத்து அனுப்புங்க'னு அக்கறையா உடல்நலம் விசாரிப்பார். போயஸ் கார்டன், அண்ணாநகர், ஈசிஆர்னு 3 கிளினிக்குகள் தொடங்கியிருந்தார். 35 வயசுக்குள்ளே வாழ்க்கையில செட்டில் ஆனவர். சாதிச்சிட்டார்! இருந்தும், அவரோட இறப்பு எதிர்பாராத ஒண்ணு, தாங்கிக்க முடியாததும் கூட."

Sethuraman
Sethuraman
Sethuraman

``அவர் இறந்து 1 மணிநேரத்துல எனக்குத் தகவல் வந்தது. சோஷியல் மீடியாவுல பார்த்துட்டு அதிர்ச்சியாகிட்டேன். உடனே, சேதுவுக்கு வாட்ஸ்அப் பண்ணினேன். என்னால அவர் இறந்துட்டார்னு ஏத்துக்கவே முடியல. வதந்தியா இருக்கணும்னு நினைச்சேன். `ப்ரதர் ஆர் யூ தேர்'னு வாட்ஸ்அப்ல டைப் பண்ணுனேன். ஆன்லைன் காட்டுச்சு! அதனால, இது தப்பான செய்திதான். அவரே ரிப்ளே பண்ணுவார்னு காத்துட்டு இருந்தேன். ஆனா, எந்த ரிப்ளேயும் வரல. அப்போதான் அவர் நண்பருக்கு போன் பண்ணி பேசுனேன். அவர்தான் உறுதிப்படுத்தினார்."

``கொஞ்சமும் நம்ப முடியல. ஏன்னா, சேதுவும் நானும் ரொம்ப க்ளோஸ். `கொரோனால வீட்டை விட்டு வெளியே போகமா வீட்டுக்குள்ளயே நடந்துட்டு இருந்திருக்கார். அப்ப திடீரென்னு கார்டியாக் அரெஸ்ட் வந்த உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆனா, எந்தப் பலனும் இல்லாம போயிடுச்சு'னு சேதுவின் நண்பர் சொன்னார். கேட்டப்ப ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. கடைசியா, ஒரு மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன். ரொம்ப நல்லா பேசிட்டிருந்தார். "``

Sethuraman
Sethuraman

``கொரோனால வீட்டுல இருக்குற சூழல் இருந்தும் அவரோட இறுதிச் சடங்குக்குப் போயிட்டேன். என்னால வீட்டுலே இருக்க முடியல. சேது வீட்டுல இருக்கிறவங்க எல்லாரும் சொல்ல முடியாத சோகத்துல இருந்தாங்க. ஊரடங்கு உத்தரவுனால அதிகமான கூட்டமில்ல. நிறைய பேர்னால வரமுடியல. இன்னைக்கு சேதுவை கடைசியா பார்க்க முடியாம போயிருந்திச்சினா இந்த ரணம் வாழ்நாள் முழுக்க எனக்குள்ளே இருந்திருக்கும். சேதுவின் இறப்பு, இரவு முழுக்க என்னைத் தூங்கவிடலை. ஒரு வயசுல பெண் குழந்தை இருக்கு. சொல்ல முடியாத சோகம் எனக்குள்ளே இருக்கு. அவர் வாழ்க்கையில செட்டிலாகிற ஒவ்வொரு தருணமும் எனக்குள்ள சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. ரொம்ப ஆரோக்கியமான மனிதர் சேது. டயட் ஃபாலோ பண்ணுவார். கார்டியாக் அரெஸ்ட் திடீர்னுதான் மனுஷனுக்கு வரும். எந்த அறிகுறியும் காட்டாது. நெஞ்சுவலிக்கும் கார்டியாக் அரெஸ்ட்டுக்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கு. திடீர்னு வர்ற அழுத்தம் மனுஷனைக்கொண்டு போயிருது. எதுவும் நம்ம கையிலே இல்லை. கடவுள் கையிலதான் இருக்கு'' என மனவருத்துடன் சொன்னார் ஆரவ்.

அடுத்த கட்டுரைக்கு