Published:Updated:

லொக்கேஷன் லீலா பேலஸ்... ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

Shalini Ajithkumar
Shalini Ajithkumar

லீலா பேலஸ் ஹோட்டலின் `சீ வியூ' அறையிலிருந்து கடலை ரசிப்பது ஷாலினிக்கு ரொம்பப் பிடிக்குமாம். ஷாலினியிடம், பசங்களோட ஒரு டின்னர் போயிட்டு வரலாம்னு மட்டும் சொல்லி கூட்டிட்டு வந்திருக்கார் அஜித்.

மே முதல் நாளான அவருடைய பிறந்தநாளிலோ, படங்கள் வெளியாகும் தினங்களிலோ ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தங்களைச் சந்தித்துவிட மாட்டாரா' என ரசிகர்கள் ஒவ்வொருவரும் அஜித்துக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். மறுபடியும் மன்றம் காணலாம் என ரசிகர்கள் சிலரும், வெற்றிட 'அரசியலுக்குள் அவரை எப்படியும் இழுத்துவந்து விடலாம்' என அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள். மீடியாக்களோ, `அஜித்தைக் கூட்டிவந்து ஒரேயொரு பேட்டிக்கு உட்கார வைத்துவிட முடியாதா' எனக் காத்திருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் சர்ப்ரைஸ் தராத அஜித், காதல் மனைவி ஷாலினிக்கு மட்டும் அவரது பிறந்தநாளான நவம்பர் 20 வந்தால், தவறாமல் ஏதாவதொரு சர்ப்ரைஸ் தந்து விடுகிறார்.

கடந்த புதன்கிழமை, ஷாலினிக்கு 39 வயது முடிந்து 40 வயது ஆரம்பம். `தல' குடும்பத்தின் தலைவி பிறந்தநாள் என்றால் கொண்டாட்டம் இல்லாமலா?

அந்தக் கொண்டாட்டத்துக்குள் செல்லும் முன்...

Shalini Ajithkumar
Shalini Ajithkumar

திருமணம் நடைபெற்ற ஏப்ரல், 2000-த்துடன் நடிப்பை நிறுத்திவிட்டதால், 2K கிட்ஸ் எல்லோருக்கும் ஷாலினியைப் பற்றி ஒரு சின்ன ரீவைண்ட். `பேபி' ஷாலினி க்கு `குமாரி' ஷாலினி என டைட்டில் கார்டு தந்தது `காதலுக்கு மரியாதை' மினிதான். அந்த ஷாலினியை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே பிடித்திருந்தது.

`பேபி' அடைமொழியுடன் தங்கை ஷாமிலியைப் போலவே குழந்தைப் பருவத்திலேயே சினிமாவுக்கு அறிமுகமானார் ஷாலினி. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சேர்த்து சைல்டு ஆர்ட்டிஸ்டாகவே சுமார் முப்பது படங்கள் வரை நடித்திருப்பார். பின்னர், மலையாளத்தில் ஹீரோயினாக சில படங்களில் நடித்தவர், தமிழில் விஜய்க்கு ஜோடியாக `காதலுக்கு மரியாதை'யில் ஹீரோயினாக அறிமுகமானார். மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஃபாசிலின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விஜய், ஷாலினி இருவருக்குமே வாழ்க்கை தந்த படம். மினியின் சாயலிலேயே தங்கள் காதலிகளைத் தேடத் தொடங்கினார்கள் 80'ஸ் கிட்ஸ். கோலிவுட்டும் ஷாலினியின் பக்கம் பார்வையைத் திருப்பியது.

மணிரத்னம் மற்றும் ஷாலினி
மணிரத்னம் மற்றும் ஷாலினி
`மினி, மோகனா, சக்தி, நித்தி...' - `லவ்அண்ட் லவ் ஒன்லி' ஷாலினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

`காதலுக்கு மரியாதை' தந்த வெற்றியால் மறுபடியும் `கண்ணுக்குள் நிலவு' படத்தில் விஜய்யுடன் சேர்ந்தார். படம் எதிர்பார்த்த அளவு போகாவிட்டாலும், ஷாலினியின் நடிப்பு பேசப்பட்டது. விளைவு... அதே வருடம், இயக்குநர் மணிரத்னம் கண்ணில் பட, `அலைபாயுதே'வில் மாதவனுடன் நடித்தார். இந்தப் படம்தான் ஷாலினியின் கரியரில் பீக்.

தொடர்ந்து பிரஷாந்த் ஜோடியாக `பிரியாத வரம் வேண்டும்', அஜித் ஜோடியாக `அமர்க்களம்' படங்களில் நடித்தார். `அமர்க்களம்' நாள்களில் அஜித்துடன் காதல் வயப்பட, படம் வெளியான மறுவருடமே அஜித்துடன் திருமணம் நடைபெற, அத்துடன் நடிப்புக்கு `பை' சொல்லிவிட்டு, கணவர், பிள்ளைகள் என குடும்பத்தைக் கவனிப்பதில் பிசியாகிவிட்டார்.

ஷாலினி @40... அஜித் தந்த சர்ப்ரைஸ் என்ன?

``எங்களை வச்சுத்தான் அந்த சர்ப்ரைஸைத் தன்னோட மனைவிக்கு தரப்போறார்னு, எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நாங்க ஷாலினியோட கோடம்பாக்கம் ஃபாத்திமா ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். மனைவிக்கு சர்ப்ரைஸ் தர்றதுனு முடிவு செஞ்ச அஜித், நேரா தன்னோட மாமனார் மாமியார்கிட்ட போய், ஸ்கூல் டேஸ்ல ஷாலினிக்கு நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் யார்னு பார்த்து அவங்களை இன்வைட் பண்ணலாம்னு சொல்லியிருக்கார். அதாவது, ஷாலினி எதிர்பாராத நேரத்துல நாங்க போய் முன்னாடி நின்னு சர்ப்ரைஸ் தரணும்கிறதுதான் ப்ளான்'' என்ற ஷாலினியின் தோழிகள் இருவர், பார்ட்டியில் நடந்தது குறித்துப் பேசினார்கள்.

Ajith - Shalini Marriage
Ajith - Shalini Marriage

``எங்களையெல்லாம் சென்னை பட்டினப்பாக்கம் பீச்சையொட்டி இருக்கிற லீலா பேலஸ் ஹோட்டலுக்கு டின்னருக்கு வரச் சொல்லியிருந்தாங்க. லீலா பேலஸ் ஹோட்டலின் `சீ வியூ' அறையிலிருந்து கடலை ரசிப்பது ஷாலினிக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அந்த ஹோட்டல். ஷாலினிகிட்ட அனோஷ்கா, ஆத்விக்கோட ஒரு டின்னர் போயிட்டு வரலாம்னு மட்டும்தான் அஜித் சொல்லியிருக்கிறார். ஹோட்டலுக்கு நாங்க முன்கூட்டியே போயிட்டோம். சொன்னபடியே சரியான நேரத்துக்கு அஜித், ஷாலினி ரெண்டு பசங்க மட்டும் வந்தாங்க. கொஞ்ச நேரத்தில் ஷாலினியின் அப்பா அம்மா-ன்னு மொத்தக் குடும்பமும் அங்க வந்துட்டாங்க. ஒரு ஹால் ரெடியா இருந்தது. ஹால் முழுக்க ஷாலினியோட ஃபோட்டோஸ். வீடியோ ஸ்கிரீன்ல பேபி ஷாலினினு எழுதியிருந்தாங்க. நாங்க ஃப்ரெண்ட்ஸ் மொத்தமா போய் ஷாலினியை சந்திக்கலை. ஒவ்வொருத்தரா கேஷுவலா சந்திக்கிற மாதிரிதான் ப்ளான்.

அஜித் மற்றும் ஷாலினி
அஜித் மற்றும் ஷாலினி
`இந்த அஜித்... அந்த வடிவேலுவுடன் இணைய வேண்டும்..!' - மேஜிக்கிற்குக் காத்திருக்கும் ரசிகர்கள் 

அதேமாதிரி நாங்க மீட் பண்ண, `வாவ்' நீ எங்கடி இங்க'னு எங்கள்ல ஒவ்வொருத்தரா பார்த்துப் பார்த்து ஷாலு `ஹக்' பண்ண, அதை ஓரக்கண்ணால் அஜித் ரசிச்சதைப் பார்க்கணுமே... `செம'யா இருந்தது. ஆனா, ஒருகட்டத்துல கண்டுபிடிச்சுட்டாங்க. `இது பெரிய போங்காட்டமா இருக்கே... ஆனா இது யாரோட ஆட்டம்னு எனக்குத் தெரியும்'னு ஷாலினி சிரிக்க ஆரம்பிச்சிட்டா!பிறகென்ன, அந்த சர்ப்ரைஸ் பார்ட்டியில் பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ஒரே குதூகலம்தான். கேக் வெட்டி, வாழ்த்துச் சொல்லிட்டு, டின்னர் முடிச்சுட்டு கிளம்பினோம்'' என்றார்கள் ஷாலினியின் தோழிகள். வாழ்த்துகள் ஷாலினி அஜித்குமார்!

அடுத்த கட்டுரைக்கு