Published:Updated:

`10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித்!’ - கோவையில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

காலையில் மீடியாக்களைக்கூட உள்ளே அனுமதிக்காமல் கடுமைகாட்டிய போலீஸார் மதியத்துக்குமேல் அஜித் ரசிகர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.

நடிகர் அஜீத்
நடிகர் அஜீத்

கோவையில் நடைபெற்று வரும் தமிழக அளவிலான துப்பாக்கிச் சுடும் போடியில் நடிகர் அஜித் கலந்துகொண்டது அவரின் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

`10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித்!’ - கோவையில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

தமிழக அளவிலான தனது 45-வது துப்பாக்கிச்சுடும் போட்டியை கோவை காலவர் பயிற்சி மையத்தில் உள்ள 'ரைஃபில் கிளப்பில்' நடத்தி வருகிறது தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன். கடந்த 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் ஐந்து பிரிவுகளின் கீழ் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள்.

இதில் நடிகர் அஜித்குமார் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறார். அஜித் வருவது வெளியில் தெரிந்தால் அவரின் ரசிகர்களைச் சமாளிக்க முடியாது என்பதால் அஜித் போட்டியில் பங்கேற்பதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், அஜித்தின் கார் கோவை காவலர் பயிற்சி மையத்தில் நுழைந்ததும் உள்ளுக்குள் இருந்த அவரின் ரசிகர்கள் அஜித்தைப் பார்த்துவிட்ட அதீத மகிழ்ச்சியில் அவரை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர அது காட்டுத்தீயாகப் பரவியது. காலையில் மீடியாக்களைக்கூட உள்ளே அனுமதிக்காமல் கடுமைகாட்டிய போலீஸார் மதியத்துக்குமேல் அஜித் ரசிகர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.

`10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித்!’ - கோவையில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்
வைரலாகும் `அஜித்'தின் துப்பாக்கிச் சுடும் போட்டோ - பின்னணி இதுதான்!

ஷூட்டிங் நாள்களைத் தவிர பிற நாள்களில் கார் ரேஸ், ஆளில்லா விமானங்களை இயக்குவது உள்ளிட்ட பல விஷயங்களில் தன்னை ஈடுபத்திக்கொளவதில் ஆர்வம் கொண்டவர். அவர் துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் கலந்துகொண்டது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் நான்கு சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்றுள்ளார் நடிகர் அஜித்.

கோவையில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்ட அஜித். | #Ajith #TNShootingAssociation வீடியோ - எம்.புண்ணியமூர்த்தி

Posted by Cinemavikatan on Wednesday, July 31, 2019