Published:Updated:

``மாஸ் வட்டத்துல இருந்து தமிழ் சினிமா வெளில வரணும்; ஏன்னா!" - அஜ்மல்

அஜ்மல்

கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு எல்லாம் ரத்தாகியிருக்க, க்வாரன்டீன் நாள்களுக்காக கேரளாவில் இருந்த நடிகர் அஜ்மலைத் தொடர்புகொண்டோம்.

``மாஸ் வட்டத்துல இருந்து தமிழ் சினிமா வெளில வரணும்; ஏன்னா!" - அஜ்மல்

கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு எல்லாம் ரத்தாகியிருக்க, க்வாரன்டீன் நாள்களுக்காக கேரளாவில் இருந்த நடிகர் அஜ்மலைத் தொடர்புகொண்டோம்.

Published:Updated:
அஜ்மல்

`அஞ்சாதே’ படத்தில் தனது அசத்தல் நடிப்பால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அஜ்மல். `திரு திரு துறு துறு’, `கோ’ எனப் பல படங்களில் ஹீரோ, கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன் என எல்லா கதாபாத்திரங்களிலும் கலந்துகட்டி நடித்து வந்தவர், தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவுடன் `நெற்றிக்கண்’ படத்தின் மூலம் தனது கம்பேக்குக்காகக் காத்திருக்கிறார்.

அஜ்மல்
அஜ்மல்

கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு எல்லாம் ரத்தாகியிருக்க, க்வாரன்டீன் நாள்களுக்காக கேரளாவில் இருந்தவரை தொடர்புகொண்டோம்.

சினிமா கரியர் இப்ப எப்படி போயிட்டிருக்கு?

'அஞ்சாதே’
.
'அஞ்சாதே’ .

``மருத்துவம் படிச்சிருந்தாலும் என்னோட கனவு எப்பவுமே சினிமாதான். அதுக்கான நல்ல அறிமுகமா மிஷ்கின் சாரோட `அஞ்சாதே’ அமைஞ்சது. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மாத்தி மாத்தி படங்கள் பண்ணிட்டிருந்தாலும், தமிழ் சினிமாமேல எனக்குப் பெரிய க்ரேஸ் இருக்கு. எனக்கு எப்ப நேரம் கிடைக்குதோ அப்போ தமிழ் படங்கள்தான் அதிகம் பார்ப்பேன். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு இப்ப எனக்கு சினிமாவுல கம்பேக் நேரம் இது. அதனால, பொறுமையாவும் நிறைய நல்ல படங்கள் பண்ணணும்னு காத்திட்டிருக்கேன்."

`அஞ்சாதே’, `கோ’ மாதிரியான நல்ல படங்கள் நடிச்சிட்டு அப்புறம் இடைவெளி விட்டதுக்குக் காரணம் என்ன?

'கோ’
'கோ’

`` 'அஞ்சாதே’, 'திரு திரு துறு துறு’, 'கோ’, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்’னு ஒரு நல்ல கிராஃப்லதான் போயிட்டிருந்தேன். 2018 சமயத்துல எனக்கு பிஜி படிக்கறதுக்கான வாய்ப்பு வந்ததும், சினிமாவுக்கு பிரேக் விட வேண்டியதா இருந்தது. உண்மையைச் சொல்லணும்னா, படிப்புலயும் என்னால சரியா கவனம் செலுத்த முடியல. மனசு முழுக்க சினிமாதான் ஓடிட்டிருந்தது. அந்த சமயத்துல நிறைய நல்ல படங்களோட வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டோம்கிற வருத்தம் இருக்கு. அதுக்கெல்லாம் சேர்த்து, இப்ப நிறைய நல்ல படங்கள் வந்துட்டிருக்கு."

இந்த ரெண்டு வருஷத்துல தமிழ் சினிமால நீங்க கவனிச்ச மாற்றங்கள்?

அஜ்மல்
அஜ்மல்

`` `சைக்கோ’, `அசுரன்’, `ஓ மை கடவுளே’னு இப்ப சமீபத்துல வெளிவந்த எல்லா படங்களும் பார்த்துட்டேன். எல்லா படங்களுமே நல்லா இருக்கு. ஆனா, இன்னும் நிறைய நல்ல படங்கள் தமிழ் சினிமாவுல வரணும். மலையாள சினிமா முன்ன மாதிரி இல்லை. அங்க வர்ற படங்கள் எல்லாமே இப்போ வேற லெவல்ல இருக்கு. தமிழ் சினிமாக்குள்ள வரத் தகுதியான புது இயக்குநர்கள், நடிகர்களுக்கு சரியான வாய்ப்புகள் உருவாக்கித் தரணும். சினிமா திரும்பத் திரும்ப மாஸ் எலிமென்ட்க்குள்ள சிக்கிட்டு இருக்கக் கூடாது.”

`நெற்றிக்கண்’ படத்துக்குள்ள கமிட் ஆன கதை?

’நெற்றிக்கண்’
’நெற்றிக்கண்’

``ரெண்டு வருஷம் படிப்புக்குப் பிறகு படங்கள் பண்ணலாம்னு நினைச்சப்ப, சரியான டீம் எனக்கு செட் ஆகல. அப்போ, `அவள்’ படம் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த படத்தோட இயக்குநர்கிட்ட படம் பத்தி பேசினேன். `வேற எதுவும் கதை இருந்தா சொல்லுங்க, நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சொல்லியிருந்தேன். அப்புறம் ஒரு நாள் கதை கேட்டேன். ரொம்ப பிடிச்சிருந்தது. நயன்தாராவுக்கும் எனக்கும் இந்தப் படத்துல நிறைய காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. நாங்க ரெண்டு பேரும்தான் மெயின் கேரக்டர்ஸ். அவங்க ரொம்ப சின்சியரான ஆர்ட்டிஸ்ட். 10 சதவிகித படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. இந்த க்வாரன்டீன் நாள்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு ஷூட்டிங் திரும்பவும் ஆரம்பிக்கும்."

தமிழ் சினிமாவுல உங்களோட நண்பர்கள்?

அஜ்மல்
அஜ்மல்

``என்னோட நடிச்ச நரேன், பிரசன்னா, ஜீவா, ரூபா இவங்ககூட எப்பவும் நல்ல நட்புலதான் இருக்கேன். அப்பப்ப போன் பண்ணி பேசுவோம், வெளியில எதும் பார்ட்டில மீட் பண்ணா பேசுவோம். மத்தபடி சினிமாத்துறையில எனக்கு நெருங்கிய நண்பர்கள்னு யாரும் கிடையாது.”

எப்படி போயிட்டிருக்கு க்வாரன்டீன் நாள்கள்?

அஜ்மல்
அஜ்மல்

``சினிமா ஷூட்டிங் எல்லாம் கேன்சல் ஆகி, கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகப்போகுது. நல்லா வொர்கவுட்ஸ்லாம் பண்ணி, சாப்பிட்டு, கொஞ்ச நேரம் ஈவினிங் டைம்ல விளையாட்டுனு இப்படியே போயிட்டிருக்கு. சீக்கிரமே இந்த நிலைமை சரியாகும்னு நம்பறேன்.”

கேரளால கொரோனோ பாதிப்பு இப்ப எந்த நிலைமைல இருக்கு?

கொரோனா
கொரோனா

``ஆரம்பத்துல நிலைமை மோசமா இருந்தது உண்மைதான். ஆனா, சரியான நடவடிக்கைகளை அரசு சீக்கிரமே எடுத்து இப்ப நிலைமையை கட்டுக்குள்ள கொண்டு வந்திருக்காங்க. அரசு தரப்பிலருந்து நிறைய பொருளாதார உதவிகள் மக்களுக்கு வந்துட்டிருக்கு. சரியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எல்லா பக்கமும் சோஷியல் மீடியா மூலமும் போயிட்டுதான் இருக்கு. நிலைமை இப்படி இருக்கும்போது, `எனக்கு எல்லாம் வராதுங்கிற’ அலட்சியத்தை விட்டுட்டு வெளியே கும்பலா போகாம வீட்டுக்குள்ளேயே மக்கள் இருக்கணும்."