Published:Updated:

``தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது..?!" - `அமுல் பேபி' அமிதாஷ்

நடிகர் அமிதாஷ் பேட்டி.

`வேலையில்லா பட்டதாரி' படத்தில் எது மறந்தாலும் `ஹே... அமுல் பேபி' என்று ஆரம்பிக்கும் வசனம் யாருக்கும் மறக்காது. அந்த வில்லன் கேரக்டரில் நடித்த அமிதாஷ், இப்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் `வானம் கொட்டட்டும்' படத்திலும் கண்ணன் இயக்கும் `நின்னு கோரி' தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்தப் பட அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.

`நின்னு கோரி' தமிழ் ரீமேக்கிற்குள் எப்படி வந்தீங்க?

`` 'வானம் கொட்டட்டும்' படத்துடைய ஷூட்டிங்ல இருந்தப்போ, ``நானி, நிவேதா தாமஸ், ஆதி இவங்கள்லாம் நடிச்சிருந்த `நின்னு கோரி'ங்கிற படம் தமிழ்ல ரீமேக் ஆகுது. அதுல ஆதி நடிச்சிருந்த கேரக்டர் நீ பண்ணா நல்லாயிருக்கும். கண்ணன் சார்கிட்ட பேசிப்பாரு"னு சாந்தனு சொன்னார். அன்னிக்கு நைட்டே படத்தைப் பார்த்துட்டு கண்ணன் சார்கிட்ட பேசினேன். அவர் ஒரு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்னு சொன்னார். அவருக்கும் பிடிச்சிருந்தது. ஸோ, அப்படியே படத்துக்குள்ள வந்துட்டேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அதர்வா, அனுபமாவோட சேர்ந்து நடிக்கிற அனுபவம்?"

அமிதாஷ் - அனுபமா - அதர்வா
அமிதாஷ் - அனுபமா - அதர்வா

``ரொம்ப ஜாலியா இருக்கு. எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே வயசுங்கிறதுனால ஈஸியா செட்டாகிடுச்சு. அனுபமா, இந்தச் சின்ன வயசுல அவ்ளோ பக்குவத்தோட நடிக்கிறாங்க. அவங்க நடிக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு இன்ஸ்பயர் ஆகும். இதை நானே அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். அதர்வா ரொம்ப கூல். செட்ல அமைதியா இருப்பார்; அதிகமா யார்கிட்டேயும் பேசமாட்டார். ஸ்பாட்ல இருந்து கிளம்புறவரை அந்தக் கேரக்டர் மனநிலையிலேயே இருப்பார். கண்ணன் சாரும் எங்களை ஃப்ரெண்டு மாதிரிதான் டீல் பண்ணுவார். செம ஜாலி. அடுத்த வாரம் அஜர்பைஜான்ல ஒரு 15 நாள் ஷூட் இருக்கு. அந்தப் போர்ஷனுக்காக ரொம்ப ஆவலா காத்துக்கிட்டிருக்கேன். இது எல்லாத்துக்கும் சாந்தனுதான் காரணம். இந்த இடத்துல அவருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்."

`` `வானம் கொட்டட்டும்' பட அனுபவம் எப்படி இருக்கு?"

``எல்லா நடிகர்களையும் மாதிரி எனக்கும் மணிரத்னம் சார் படத்துல நடிக்கணும்னு ஆசை இருந்தது. ஆனா, எனக்கும் மணி சாருக்குமான கனெக்ட் ரொம்ப நாளா இருக்கு. என் அப்பாவும் சுஹாசினி மேமும் காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க. அதனால, சின்ன வயசுல அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவோம். இப்போ மணி சாருடைய `மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிப்புல நடிக்கிறது எந்தளவுக்கு சந்தோஷம்னு சொல்ல வார்த்தைகளே இல்லை. `அலைபாயுதே' மாதவன் ரோல் டோன்லதான் படத்துல என்னுடைய கேரக்டர் இருக்கும். சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் கூடதான் எனக்கு அதிக காம்பினேஷன் காட்சிகள் இருக்கு. படத்துல ஐஸ்வர்யாகிட்ட நான் வழிஞ்சு பேசுறமாதிரி ஒரு சீன் இருக்கும். அதுதான் எனக்கு ரொம்பவே பிடிச்ச சீன். மணி சாருடைய வசனங்கள் அவ்ளோ ரியலிஸ்டிக்கா இருக்கு. மனப்பாடம் பண்ணத் தேவையே இருக்காது. அவர்கிட்ட இருந்து வந்ததால, டைரக்டர் தனாவும் அதே மாதிரி ரொம்பக் கூலா வொர்க் பண்றார்."

``ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, நீங்க மூணு பேரும் இருக்கும்போது செட் எப்படி இருக்கும்?"

அமிதாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு
அமிதாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு

``செம ஜாலிதான். எந்த அளவுக்கு ஜாலியா இருக்குமோ, அந்த அளவுக்கு கத்துக்கவும் செய்யலாம். நல்ல திறமையான நடிகர்கள்கூட நடிக்கும்போது நம்முடைய நடிப்பும் அழகா வந்துடும். ஆனா, ஐஸ்வர்யா ரொம்ப ரொம்பத் திறமையான நடிகை. தனுஷ் சார்கிட்ட இருக்கிற நிறைய விஷயங்கள் இவங்ககிட்டேயும் இருக்கு. சாந்தனு நல்ல நண்பன். நாங்க மூணு பேரும் ஒரு கேங்க். இந்தப் படத்துல சரத் சார்கூட ஒரு போர்ஷன் இருக்கு. அந்த சீன் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். நான் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்னு ஆன்லைன்ல இருக்கிற எல்லாப் படங்கள், வெப்சீரிஸையும் பார்த்திடுவேன். சரத்குமார் சாரும் அப்படித்தான் போல. எங்க ரெண்டு பேரையும் சேர்த்தது இந்த விஷயம்தான். வரலட்சுமியும் நானும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்."

`` `வி.ஐ.பி' வெளிவந்த சமயத்துல ஹீரோவாகணும்னு ஆசை இருந்ததா சொல்லியிருந்தீங்களே!"

``நடிக்கணுங்கிற ஆசை எனக்கு ஷாரூக் கான் சார் படங்களைப் பார்த்து வந்தது. `வி.ஐ.பி' வெளியான சமயத்துல எனக்கு வயசு கம்மி. அந்தப் படம் முடிச்ச பிறகு, அதே மாதிரியான கேரக்டர்கள் நிறைய வந்துச்சு. நடுவுல `ஹார்ட்பீட்ஸ்'னு ஒரு ஹாலிவுட் படத்துல லீட் ரோல்ல நடிச்சேன். தெலுங்குல ராம் சரண் சார் படத்துல ஒரு சின்ன கேரக்டர் பண்ணேன். அதுக்கப்புறம் நிறைய தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்தது. ஆனா, மொழிப் பிரச்னை இருந்ததால பண்ண முடியலை. இப்போ `வானம் கொட்டட்டும்', கண்ணன் சார் படம்னு ரெண்டு படங்கள்லேயும் எனக்கு கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர்கள். நடிச்சா ஹீரோதான்னு எல்லாம்  இல்லை. விஜய் சேதுபதி சார் மாதிரி, எல்லா வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிக்க ஆசை."

``எப்படிப் பார்க்கணும்னு நினைச்சாங்களோ, அப்படியே வந்தார் இந்த வி.ஐ.பி!'' - #5YearsOfVIP

``தியேட்டர் ஆர்ட்டிஸ்டா இருந்து சினிமாவுக்கு வந்ததால நடிப்பு ஈஸியா வருதா?"

அமிதாஷ்
அமிதாஷ்

``இப்படிதான் ப்ரோ நானும் நினைச்சேன். ஆனா, உள்ள வந்த பிறகுதான் அது வேற, இது வேறனு தெரிஞ்சது. அதுல கத்துக்கிட்ட விஷயங்களை இங்கே பயன்படுத்தலாம். அவ்வளவுதான். ஆனா, சினிமாவுல கத்துக்க இன்னும் நிறைய இருக்கு. நான் கத்துக்கிட்டு இருக்கேன். தியேட்டர் ப்ளே பண்ணும்போது, ஒன்றரை மாசத்துல ஒரு ஷோவுக்கு ரிகர்சல் பார்த்துடுவோம். ஆனா, சினிமா அப்படி இல்லை. வி.ஐ.பி படத்துல தனுஷ் சார் எனக்கு வழிகாட்டினார். அந்த ஹாலிவுட் படத்துல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சார் ஆதரவா இருந்தார். இப்பவும் தனுஷ் சார்கிட்ட  அப்பப்போ பேசுவேன். "

"த்ரிஷாவுக்குப் பிடிக்காத காஸ்ட்யூம், ஃபிட் தனுஷ், வெஸ்டர்ன் சசிகுமார்..." - உத்ரா மேனன் ஷேரிங்ஸ்

``அடுத்து என்ன பிளான்?"

``ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல நான் ஒரு லீடா பண்றேன். அது, ஜனவரி மாசம் ஆரம்பமாக இருக்கு. ஸோ, வெயிட்டிங்." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு