Published:Updated:

"என்னைப் பற்றிய மீம்களால் என் பையனுக்கு வருத்தம்தான்!" - சமுத்திரக்கனி ஓப்பன் டாக்

 சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

"இயற்கை ரீ செட் பட்டனை எப்போதாவது அமுக்கிருச்சுனா, எல்லாரும் பின்னாடி போயிட்டு திரும்ப வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்படியொரு ரீ செட் பட்டனாத்தான் லாக்டெளனைப் பார்க்குறேன்" என ரிலாக்ஸாக பாசிட்டிவாகப் பேச்சைத் தொடங்குகிறார் சமுத்திரக்கனி.

``வாலியை டைரக்‌ஷன் பண்ணுன அனுபவம்?''

" 'அண்ணி' மெகா சீரியலுக்காக நடிக்கக் கேட்டப்ப, 'சின்னப் பசங்ககிட்டலாம் நடிக்க முடியாது. நீ டைரக்‌ஷன் பண்ணுனா நடிக்குறேன்'னு பாலசந்தர் சார்கிட்ட சொல்லிட்டார். ஸ்பாட்டுக்கு வாலி மற்றும் டைரக்டர் சார் ரெண்டு பேரும் சேர்ந்து வந்தாங்க. ரெண்டு நாள் ஷூட்டிங் முடிஞ்சப்போ டைரக்டர் சார்க்கு காய்ச்சல் வந்திருச்சு. அதனால் அவர் ஷூட்டிங் வரலை. வீட்டில் போய்ப் பார்த்தப்போ 'டேய், வாலியை ஜாக்கிரதையா கையாளணும். டக்குனு கோபம் வந்திரும்'னார்.

கவிஞர் வாலி
கவிஞர் வாலி

வாலி சார் ஸ்பாட்டுக்கு வந்தவுடனே, 'ஷாட் எடுக்க நேரமிருக்கு. வெத்திலை போட்டுட்டு வந்திருங்க'ன்னேன். 'அப்படியா'ன்னு கேட்டுட்டுப் போயிட்டு வந்தார். அப்புறம், இவரோட ஷாட் மட்டும் எடுத்துட்டு 'இன்னோரு டைமும் வெத்திலை போடுறதா இருந்தா போட்டுட்டு வாங்க'ன்னேன். அந்தப் பக்கமா போயிட்டு டைரக்டருக்கு போன் பண்ணி, 'நீ ஹாஸ்பிட்டல் போயிட்டு நேரா வீட்டுக்குப் போயிரு. என்னை கனி நல்லாவே பார்த்துக்குறான். இவன்கிட்டயே நடிச்சிக்குறேன்'னு சொன்னார். அப்புறம் நல்லா பழகிட்டார். திடீர்னு கவிதை சொல்லுங்கன்னு கேட்பேன். 'கவிதையெல்லாம் காசு கொடுத்தாதான்டா வரும். சும்மாலாம் சொல்ல முடியாதுடா'ன்னு சொல்லிட்டு ஷாட் எடுத்துட்டு இருக்குறப்போ திடீர்ன்னு கவிதை சொல்லிருவார். அவர் ஒரு ஆச்சர்யம்.''

``ரொம்ப நல்ல கேரக்டர், பெரிய இயக்குநர்கள் படமெல்லாம் பண்ணிட்டிருக்கீங்க. ஆனா, சில நேரங்களில் உங்களைப் பற்றிய சில மீம்ஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கிறீங்க?''

'`ரொம்ப சந்தோஷமா பார்த்தேன். நாம நடிக்குறதுக்கும் இத்தனை கேரக்டர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். என் பையன்தான் இதெல்லாம் எடுத்து எடுத்துக் காட்டினான். அவனுக்கு வருத்தம்தான். 'இதெல்லாம் பாசிட்டிவா எடுத்துக்கணும்டா. எவ்வளவு கெட்டப் போட்டு எனக்காக மீம்ஸ் உருவாக்கியிருக்காங்க. அந்த உழைப்பை மதிக்கணும். இதில் நல்ல கெட்டப் இருந்தா அதைப் படத்தில் பயன்படுத்திக்க வேண்டியதுதான்'னு சொன்னேன். சரிதானே?"

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

``பையனைப் பத்திச் சொல்லிட்டீங்க. உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க?''

'`பையன் ப்ளஸ் டூ முடிச்சிட்டு காலேஜ் போயிட்டார். இவர் ப்ளஸ் டூ முடிக்குறதுக்குள்ள வீடே பெரிய டென்ஷனா இருந்தது. 'நான் டென்ஷன் ஆக மாட்டேன்டா. அப்பா எப்போவும் கூலா இருப்பேன். நீ எவ்ளோ மார்க் எடுத்தாலும் எனக்கு ஓகே'ன்னுதான் சொன்னேன். '79.6 சதவிதம் மார்க் எடுத்திருக்கேன்பா'ன்னு முதல்ல என்கிட்டதான் வந்து சொன்னான். 'அறுபதுக்கும் நூற்றுக்கும் இடையில எடுத்திருக்க. சரியான மார்க்டா. இந்த மார்க் வாங்குனவனுக்குத்தான் முன்னாடி பின்னாடி இருக்குறவன் வேலை செய்வான்'னேன். பாப்பா 7-வது படிச்சிட்டிருக்கா. என் மனைவி ஜெயலட்சுமி. அக்கா பொண்ணு. என் அம்மாவுக்குப் பிறகு இவங்கதான் எல்லாம். என்னை நல்லாக் கவனிச்சுக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை.''

"உங்கள் குரு பாலச்சந்தரின் இழப்பை எப்போதெல்லாம் உணர்வீங்க?" / ``விஜயகாந்தை சமீபத்துல பார்த்தீங்களா?'' / ``ராஜமெளலிக்கும் உங்களுக்கும் பிரியமான பிணைப்பு இருக்கே... எப்படி உருவாச்சு?'' / ``ஆனந்த விகடன்ல வந்த தொடர் 'வேள்பாரி'யை ராஜமெளலிகிட்ட கொடுத்ததாச் சொல்லியிருந்தீங்க. படிச்சிட்டாரா?'' / ``கமல்ஹாசனின் 'இந்தியன் 2'-ல் நடிக்கிறீங்க... என்ன ஸ்பெஷல்?'' / ``இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகாகூட நடிச்சிட்டு வர்றீங்க, படப்பிடிப்பின் போது தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நீங்களும் போயிருந்தீங்களா?'' / ``விஜய்க்குச் சொன்ன கதை என்னாச்சு?'' / ``சசிகுமார் டைரக்‌ஷனை மிஸ் பண்ணுறீங்களா?''

இந்தக் கேள்விகளுக்கு சமுத்திரக்கனி அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்!" https://bit.ly/32blZtM
சிறப்புச் சலுகைகள்:

ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு