Published:Updated:

`தாரை தப்பட்டை' ஆர்.கே.சுரேஷ் ரகசியத் திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா?!

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் - மது திருமணம் சென்னையில் மிகவும் ரகசியமாக நடந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்தவரைத் தனது 'தாரை தப்பட்டை' படம் மூலம் நடிகராக்கினார் இயக்குநர் பாலா.

தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த ஆர்.கே.சுரேஷுக்கும் 'சுமங்கலி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கடந்தாண்டு செய்திகள் வெளியாகின. ஆர்.கே. சுரேஷே அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார்.

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

ஆனால் இடையில் என்ன நடந்ததோ, அந்தத் திருமணம் நடைபெறவில்லை. "எனக்கும் அவருக்கும் இடையில் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு பிரச்னைகளைச் சந்திப்பதற்குப் பதில், முன்கூட்டியே சுமூகமான முறையில் விலகி விடுவது நல்லது" என அப்போது திவ்யா தரப்பில் சொல்லப்பட்டது.

அமலா - நாகார்ஜுனா காதலும், பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்து வந்த பாதையும்!

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. மிகவும் ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.

`ஏன் ரகசியத் திருமணம்' என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆர்.கே.சுரேஷே முறைப்படி அவரது திருமணத்தை அறிவித்தால்தான் தேவையற்ற பேச்சுகள் அடங்கும்.

அடுத்த கட்டுரைக்கு