Published:Updated:

செப்டம்பர் 6... `பிக் பாஸ்' ஆரவ் கல்யாணம்... பொண்ணு யார் தெரியுமா?

'பிக் பாஸ்' ஆரவ்
'பிக் பாஸ்' ஆரவ்

பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, ''எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கிறார்'' என ஆரவ் சொல்லியிருந்தது இவரைத்தான் என்கிறார்கள்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ரிசார்ட் ஒன்றில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ந‌டக்கிறது 'பிக் பாஸ்' முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ்வின் திருமணம்.

'நிக்கா'வுக்குத் தேதி குறித்து, அழைப்பிதழ் அடித்து மிக மிக நெருங்கிய சிலருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் தரத் தொடங்கிவிட்ட பிறகும் கூட, ஏனோ ஆரவ் தனது திருமணம் குறித்து இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.

ஆரவ்வைக் கரம் பிடிக்கிற ராஹே, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகி வரும் 'ஜோஷ்வா' மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

ராஹே
ராஹே

ஆரவ் திருமணம் தொடர்பாக அவரது நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினேன்.

"லாக்டௌன் காரணமா கூட்டம் சேர்க்க வேண்டாமேனுதான் முறைப்படி இன்னும் அறிவிக்கலைனு நினைக்கிறோம். ஆனாலும் நெருக்கத்துல தகவல் சொல்வார்" என்றவர்கள் தொடர்ந்து பேசினார்கள்.

``கல்யாணம் அவரோடதான்... ஆனா அந்தக் கல்யாண மண்டபம்?!'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா

"ராஹே குடும்பமும் ஆரவ் குடும்பமும் ஏற்கனவே பரிட்சயமானவங்கதான். அந்தத் தொடர்புல ஆரவ்-ராஹே இடையே நட்பு உண்டாச்சு. அதேநேரம் ரெண்டு பேரு வீட்டுலயுமே பெரியவங்க 'இவங்களுக்கிடையில் கல்யாணம் பண்ணலாமே'ன்னு விரும்பியிருக்காங்க. இவங்க ரெண்டு பேர்கிட்டயும் அந்த விருப்பத்தைச்சொல்லிச் சம்மதம் கேட்டதும், இவங்களும் சரினு சொல்ல, கல்யாணத்தேதி முடிவாச்சு. அதனால இந்தக் கல்யாணத்தை லவ் கம் அரேஞ்டு மேரேஜ்னே சொல்லலாம்" என்றார்கள்.

arav
arav

பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, ''எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கிறார்'' என ஆரவ் சொல்லியிருந்தது ராஹேவைத்தான் என்கிறார்கள்.

கிழக்குக் கடற்கரைச் சாலையின் வெட்டுவாங்கேனியிலுள்ள ரிசார்ட்டில் செப்டம்பர் 6-ம் தேதி காலையில் நடக்க இருக்கிற திருமணத்தில் இருதரப்பிலிருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். அதேநேரம், தன்னுடைய பிக் பாஸ் முதல் சீசன் 'ரூம் மேட்'டுகளில் பெரும்பாலானவர்களைத் திருமணத்துக்கு அழைத்திருக்கிறாராம் ஆரவ்.

லாக்டௌன் தளர்த்தப்பட்டதும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு