Published:Updated:

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் ஆர்யா!

ஆர்யா
ஆர்யா

சைக்கிளில் வந்து தன் வாக்கை பதிவு செய்தார், நடிகர் ஆர்யா

இறுதி வரை இழுபறியாகவே இருந்து வந்த நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கெனவே திட்டமிட்டப்படி ஜூன் 23 (இன்று) நடைபெற்று வருகிறது. 3100க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இதில் 1100க்கும் மேற்பட்டோர் தபால் மூலமும் மீதமுள்ள அனைவரும் நேரிலும் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகள் மூலம் நடக்கும் வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், காலை ஏழு மணியளவில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த போட்டியாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சைக்கிளிங் செய்வதை வழக்கமாக கோண்டுள்ள நடிகர் ஆர்யா, சைக்கிளிலேயே வந்து தன் வாக்கை பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், " அனைவரும் ஒற்றுமையாகதான் இருந்தோம். தவறான புரிதலால் சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன. தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொன்னதுதான் வேடிக்கை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு