Published:Updated:

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

அதுல் குல்கர்னி
பிரீமியம் ஸ்டோரி
அதுல் குல்கர்னி

நேரம் கிடைக்கும் போது தமிழ் மற்றும் மலையாளப் படங்களை ஓ.டி.டி-யில் பார்க் கிறேன். கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ பார்த்தேன்.

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

நேரம் கிடைக்கும் போது தமிழ் மற்றும் மலையாளப் படங்களை ஓ.டி.டி-யில் பார்க் கிறேன். கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ பார்த்தேன்.

Published:Updated:
அதுல் குல்கர்னி
பிரீமியம் ஸ்டோரி
அதுல் குல்கர்னி

இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கவே முடியவில்லை. அதுல் குல்கர்னி எளிமையின் சிகரமாக இருக்கிறார். ‘‘தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளி விழுந்திருச்சு. சீக்கிரமே என்னைச் சென்னையில் பார்க்கலாம்!’’ என்று சிரிக்கிறார்.

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

``நாடக நடிகர் டு திரைக்கதை ஆசிரியர்... இந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்க!’’

‘‘சிறுவயதிலிருந்து எனக்கு நாடகத்தின்மீது காதல் இருந்தது. அதை ஒரு கரியராக உருவாக்கிக் கொள்ள நினைத்தபோது வீட்டில் பயந்தார்கள். பெற்றோருக்காக இன்ஜினீயரிங் சேர்ந்தேன். அங்கு போயும் நாடகம் இயக்கி நடித்தேன். நண்பர்கள் ‘நீ சினிமாவில் நடிக்கலாம்’ என்று சொன்னார்கள். எனக்கு சினிமாக் கனவைவிட நாடகம்மீது பள்ளி நாள்களில் இருந்தே ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஷேக்‌ஸ்பியர் நாடகங்கள், மராத்தி நாடகக் கலைஞர் திலீப் பிரபாவால்கரின் நாடகங்கள்போல பல நாடகங்களை இயக்கி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். பள்ளியில் என் நாடகங்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. இதனாலேயே கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு டெல்லி ஸ்கூல் ஆஃப் டிராமாவில் போய்ச் சேர்ந்தேன். அங்கு போனதும் எனக்கான பல கதவுகள் திறந்தன. அதில் ஒன்றுதான் சினிமா. உண்மையில் டெல்லி என்னை எழுத்தாளனாய் மாற்றியது. நிறைய சிறுகதைகள் இந்தியில் எழுதியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எழுத்து என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் எப்போது நேரம் கிடைத்தாலும் எழுதுவேன். இப்போது ‘லால் சிங் சத்தா’ வாய்ப்பு கிடைத்ததும், என் எழுத்தை ஆமிர்கான் வாசித்ததால்தான்!

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”
“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

ஆமிர்கான் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தை ரீமேக் பண்ண ரெடியாகி என்னிடம் சொன்னபோது ‘லால் சிங் சத்தா’ பாத்திரம் மனசுக்குள் வந்து போனது. சமகால அரசியலை அந்தப் படத்துக்கான கதையில் பேச முடிந்ததற்கு ஆமிர் கொடுத்த சுதந்திரமே காரணம். ஒரு ‘தேசி ரீமேக்'காக இருக்க வேண்டும் என நினைத்ததைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்!’’

``டெல்லி ஸ்கூல் ஆஃப் டிராமா அனுபவங்கள் எப்படி இருந்தன?’’

‘‘இந்தியக் கலையுலகின் மிகப்பெரிய ஆளுமைகள் பலர் அங்கு பயின்றவர்கள்தான். ஓம்புரி, நஸ்ருதீன் ஷா, பங்கஜ் கபூர், அனுபம் கெர், சீமா பிஸ்வாஸ், பியூஷ் மிஸ்ரா, ஆசிஷ் வித்யார்த்தி எனப் பலர் அங்கு படித்து சினிமாவிலும் நாடகங்களிலும் பிஸியாக இருந்தார்கள். அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. ஒவ்வொருவரும் ஒரு பல்கலைக்கழகம் போன்றவர்கள். பல அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். எனக்கான நடிப்பை அங்குதான் வடிவமைத்துக்கொண்டேன். எதிர்பார்த்தது போலவே அங்கு என் நாடகங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. அதன்மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானேன்.’’

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”
“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

``ஆனால் ‘ஹே ராம்’தானே உங்கள் முதல் சினிமா?’’

‘‘நான் ‘பூமி கீதா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து முடித்தபிறகு டெல்லி ஸ்கூல் ஆஃப் டிராமாவில் ஒரு செமினாரில் பிஸியாக இருந்தேன். அப்போது அங்கு கமல்ஹாசனும் சௌரப் சுக்லாவும் வந்தார்கள். ‘ஹே ராம்’ படத்தில் ராம் அப்யங்கர் பாத்திரத்தில் நடித்தவர் மரணித்ததால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘உங்கள் நாடக அறிவு இந்தப் படத்துக்குத் தேவை' என்றார் கமல். காந்திஜியைக் கொன்ற கோட்சேவுக்கு இணையான கேரக்டர் அது. விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதுவும் கமல்ஹாசன் இயக்கத்தில் அவரோடு நடித்துக் கிடைத்தது எனக்கு அத்தனை மகிழ்ச்சியை அளித்தது!’’

`` ‘ஹே ராம்’ போலவே உங்களை ‘சாந்தினி பார்’ படமும் கவனிக்க வைத்தது. அந்தப் படத்தில் நடித்தது பற்றி...’’

‘‘மதுர் பண்டார்கர் ‘சாந்தினி பார்’ படத்தின் கதையைச் சொன்னபோது, இதில் நாம் என்ன பெரிதாய் சாதித்துவிட முடியும் என நினைத்தேன். ஏனென்றால் கதை தபுவுக்கான பெண்ணிய சினிமாவாக இருந்தது. ஆனால், அந்தப் படத்தில் என் பாத்திரத்தை அழகாக வடிவமைத்திருந்தார் மதுர். ஒரு கேங்ஸ்டராக நடிக்க வேண்டும் என்று ஆசை அந்தப் படத்தில் நிறைவேறியது. கேங்ஸ்டர் என்றாலே செல்வச் செழிப்பாக இருப்பார்கள் என்ற நினைப்பை அந்த பட்யா கேரக்டர் அடித்துக் காலி பண்ணியிருந்தது. கடன் வாங்கி வசதியாய் வாழும் கேங்ஸ்டர், முணுக்கென்றால் கோபப்படும் முட்டாள் என ரகளையான கேரக்டர் அது. தபுவுடன் போட்டி போட்டு நடித்தேன் எனலாம். தேசிய விருது கிடைத்தது என்மீதே எனக்கு நம்பிக்கையை அதிகரித்தது!’’

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

`` ‘ரன்’ படத்துக்குப் பிறகு பெரிய ரோல்களில் தமிழில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?’’

‘‘நடிகனாக மாறிய பிறகு பெரிய ரோல், சின்ன ரோல் என்று பார்ப்பதில்லை. நிறைய தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். தமிழில் வரும் வாய்ப்பு களைத் தவிர்த்ததில்லை. ‘ரன்’ போல வில்லனாக நடிக்க ஆசைதான். அப்படியொரு வாய்ப்பு கிட்டினால் மறுக்க முடியுமா? இப்போது வெப்சீரீஸ், அறக்கட்டளைப் பணி என பிஸியாகவே இருக்கிறேன். தமிழில் விரைவில் என்னைப் பார்க்கலாம்.’’

``தமிழ்ப்படங்கள் பார்க்கிறீர்களா..?’’

‘‘நேரம் கிடைக்கும் போது தமிழ் மற்றும் மலையாளப் படங்களை ஓ.டி.டி-யில் பார்க் கிறேன். கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ பார்த்தேன். பகத் பாசில், விஜய்சேதுபதி என எல்லோருக்கும் இடம் கொடுத்து நடித்திருந்தது அவர்மீதான மதிப்பைக் கூட்டியது. பாலிவுட் திரும்பிப் பார்க்கும் படங்களைத் தென்னிந்திய சினிமாக்கள் தர ஆரம்பித்துவிட்டன. அதிலும் பகத் பாசிலின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் அவரது மெனக்கெடலை ரொம்பவே நான் ரசிக்கிறேன்!’’

“கமல் மீது மதிப்பு கூடுகிறது!”

``நடிகர்கள் விவசாயம் பக்கம் திரும்புவது ஃபேஷனாகிவிட்டதே?’’

‘‘நான் விவசாயம் பண்ணுவதை என் தார்மிகக் கடமையாக நினைக்கிறேன். கர்நாடகாவில் என் பூர்வீகம் பெலஹாவியில் விவசாயம்தான். மகாராஷ்டிராவில் சில வறண்ட பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்து, அங்கிருக்கும் எல்லோருக்கும் நம்பிக்கை ஊட்டுகிறேன். என் மனைவி கீதாஞ்சலியும் நானும் நடிக்கும் நேரம் போக மீதி நேரங்களில் விவசாயம் செய்கிறோம். மாதக்கணக்கில் பண்ணை வீட்டில் தங்கி ஆட்களோடு ஆட்களாக வேலை பார்க்கிறோம். தற்சார்பு மட்டும் காரணமில்லை. இது ஒரு இந்தியனாக என் கடமை!’’