Published:Updated:

பயமுறுத்திய சிவகார்த்திகேயன், ஐடியா சொன்ன சிம்பு, நெகிழ வைத்த விமல்!

பாலசரவணன்
பிரீமியம் ஸ்டோரி
பாலசரவணன்

சிம்பு சார் வெயிட்லாஸ் பண்ணின பிறகு அவரை முதன்முதலில் நேரே பார்த்தவங்கன்னு ‘ஈஸ்வரன்’ டீமைத்தான் சொல்லணும்

பயமுறுத்திய சிவகார்த்திகேயன், ஐடியா சொன்ன சிம்பு, நெகிழ வைத்த விமல்!

சிம்பு சார் வெயிட்லாஸ் பண்ணின பிறகு அவரை முதன்முதலில் நேரே பார்த்தவங்கன்னு ‘ஈஸ்வரன்’ டீமைத்தான் சொல்லணும்

Published:Updated:
பாலசரவணன்
பிரீமியம் ஸ்டோரி
பாலசரவணன்

பாலசரவணன் சின்னச்சின்ன நக்கல் கவுண்டர்களில் கவர்பவர். ஆனாலும் பாலசரவணன் பெயர் சொல்லும் அளவுக்குப் பெரிய வாய்ப்பு இல்லை. இப்போது ‘விலங்கு’ வெப்சீரிஸ் அவர்மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டான்’, விமல், நரேன், ஆண்ட்ரியாவுடன் படங்கள் என அரை டஜன் படங்கள் கைவசம்.

“நண்பனே இயக்குநரா அமைஞ்சிட்டா ஒரு நடிகரின் கரியர், அடுத்தடுத்த லெவலுக்குப் பாயும் என்பதற்கு ஒரு உதாரணமா ‘விலங்கு’ அமைஞ்சிடுச்சு. இந்தச் சந்தர்ப்பத்துல பிரசாந்த் பாண்டிராஜ் மச்சிக்கு நன்றி சொல்லிக்கறேன்” என்றபடி பேச ஆரம்பிக்கிறார்.

பயமுறுத்திய சிவகார்த்திகேயன், ஐடியா சொன்ன சிம்பு, நெகிழ வைத்த விமல்!

``சிவகார்த்திகேயனோட ‘டான்’ல நீங்களும் ஸ்டூடன்ட் ஆகிட்டீங்க..?’’

‘`இந்த கிரெடிட் எஸ்.கே.பிரதருக்குத்தான் (சிவகார்த்திகேயன்தான்) போய்ச்சேரும். நான் ‘ஈஸ்வரன்’ல நடிக்கும் போது 102 கிலோ இருந்தேன். அந்த நேரத்துலதான் ‘டான்’ படத்துல கமிட் ஆனேன். அப்ப, எஸ்.கே.பிரதர் ‘நீங்க எப்படியாவது 20 கிலோ உடல் எடையைக் குறைச்சிடுங்க...’ன்னார். ‘அதெல்லாம் ஈஸியா குறைச்சிடுவேன்’னு சொன்னேன். உடனே அவர் சிரிச்சுகிட்டே ‘இந்தப் படத்துல நீங்க இருக்குறீங்க. அதுல நோ டவுட். ஆனா, இருபது கிலோ எடையைக் குறைச்சிட்டீங்கனா, ஸ்டூடன்ட். இல்லைன்னா டீச்சராத்தான் நடிக்க வேண்டியிருக்கும். இந்தப் படத்துல டீச்சர்ஸ் ரோல் நிறையவே இருக்கு நீங்க எடையைக் குறைச்சா, என்னோட சேர்ந்து ஸ்டூடன்டா நிற்பீங்க, இல்லைன்னா டீச்சர்தான்’னு பயமுறுத்தினார். ‘அடடா, பீதியைக் கிளப்புறாய்ங்களே’ங்கிற என் மைண்ட் வாய்ஸையும் எஸ்.கே.பிரதர் கேட்ச் பண்ணிட்டார். ‘ஆமா தலைவரே, இவ்ளோ பெரிய உடம்பை வச்சிட்டு ஸ்டூடன்ட்டா நடிச்சா, நாம ஒண்ணும் ஃபெயிலாகிப் படிக்கலையே’ன்னு கலாய்ச்சார்.

‘டான்’ படத்துல வாத்தியார் கேரக்டரும் ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்தான். ஆனாலும், எப்படியாவது ஸ்டூடன்ட் ஆகிடணும்னு முடிவு பண்ணிட்டேன். செம ஒர்க் அவுட் பண்ணி ஒரு மாசத்துல 14 கிலோ குறைச்சிட்டேன். அதை வீடியோ எடுத்து எஸ்.கே. பிரதருக்கு அனுப்பி வச்சேன். அடுத்த நிமிஷமே ஆச்சர்யமாகி போன் பண்ணினார். ‘வாத்தியார் ரோல்ல இருந்து தப்பிச்சிட்டீங்களே ப்ரோ... இப்ப நான் வாத்தியார் ஆகிடுவேன் போல. நானும் எடையைக் குறைச்சிடுறேன்’னு சொல்லி அவரும் செம ஃபிட்டா வந்து நின்னார். ‘டான்’ல அவரோடு ஐம்பது நாள்கள் படப்பிடிப்பில் இருந்திருப்பேன். ஆனா, பத்து வருஷ அனுபவம் கிடைச்சிடுச்சு.”

பயமுறுத்திய சிவகார்த்திகேயன், ஐடியா சொன்ன சிம்பு, நெகிழ வைத்த விமல்!

``அது சரி, நீங்க எடையைக் குறைக்க சிம்புதான் டிப்ஸ் கொடுத்தாராமே..?’’

“ஆமாங்க. சிம்பு சார் வெயிட்லாஸ் பண்ணின பிறகு அவரை முதன்முதலில் நேரே பார்த்தவங்கன்னு ‘ஈஸ்வரன்’ டீமைத்தான் சொல்லணும். அவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தார். முதல் நாள் படப்பிடிப்பு வந்த அவரைப் பார்த்தப்ப ‘மன்மதன்’ படத்துல வந்த சிம்புவைப் பார்த்த மாதிரியே இருந்துச்சு. நானே என்னை மறந்து அவரை சைட் அடிச்சிட்டேன். எங்க எல்லாரையும் சாப்பிட வச்சு அழகு பார்த்தவர், எப்பவும் டயட்ல இருப்பார். கம்மங்கூழ் மாதிரி ஏதோ ஒரு ஜூஸைக் குடிச்சிட்டு இருப்பார். அப்ப அவர், ‘இப்பல்லாம் எனக்கு சாப்பாடு தேவையில்ல. கண்ட்ரோலாகிடுச்சு’ன்னார். நானும் அவர்கிட்ட உடம்பைக் குறைக்கறது பத்தி அட்வைஸ் கேட்டேன். ‘நாம எல்லாருமே பசிங்கற ஒரு விஷயத்தை வெறுப்போம். ஆனா, பசியை என்ஜாய் பண்ணிப் பாருங்க. உடம்பைக் குறைச்சிடலாம்’ன்னார். சிம்பு சார் சொன்னது மாதிரியே டயட் இருந்தேன். 70 நாள்கள்ல 22 கிலோ எடையைக் குறைச்சிட்டேன். அப்புறம் எனக்குப் பசிக்கும்போதெல்லாம் ‘என்ஜாய் பண்ணு... என்ஜாய் பண்ணு’ன்னு எனக்கு நானே சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.”

``விமலும் நீங்களும் ‘விலங்கு’க்குப் பிறகு ரொம்ப நெருக்கமாகிட்டீங்களே..?’’

‘`நிஜம்தான். என் கூடப் பிறந்த அண்ணன்னு விமல் அண்ணனைப் பெருமையா சொல்லிக்குவேன். ‘விலங்கு’ ஸ்பாட்லகூட அத்தனை பேரிடமும் ஒரு கிராமத்துத் தன்மையோட எளிமையா பழகுவார். அதிக நாள்கள் அவரோட பழகினதுல, ஒருத்தர் ஒருத்தரோட வாழ்க்கையைப் பேசினதுல, புரிதல் அதிகமாகிடுச்சு. அவரோட தம்பி ஒருத்தரோட புகைப்படத்தைக் காட்டினார். பன்னிரெண்டு வயசில அவர் தம்பி இறந்துட்டார். அந்தப் போட்டோ பார்த்து எனக்கு ஆச்சரியமாகிடுச்சு. அச்சு அசலா அவர் தம்பி போலவே நானும் இருக்கேன். எமோஷனலாகிடுச்சு. ‘உன் மேல எனக்கு அன்பு அதிகம். நீ தம்பி மாதிரியே இருக்கறதால இன்னும் அதிக அன்பாகிடுச்சு’ன்னார். எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாவோட அதிக நேரம் பேசினார். அப்புறம் அவங்க வீட்டுக்கு நாங்க போனோம். இப்ப குடும்பத்துல ஒருத்தரா பழகிட்டோம். அடுத்தும் அவரோடு ஒரு படம் பண்ணியிருக்கேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism