Published:Updated:

பிரபல நடிகர் பாலா சிங் மருத்துவமனையில் கவலைக்கிடம்! - வருத்தத்தில் திரையுலகம்

அவதாரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், `புதுப்பேட்டை', `விருமாண்டி' படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார்.

பாலா சிங்
பாலா சிங்

தமிழ் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர், மேடை நாடகக் கலைஞர் பாலா சிங். நாசரின் இயக்கத்தில் வெளியான `அவதாரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், `புதுப்பேட்டை', `விருமாண்டி' படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். 67 வயதான பாலா சிங்குக்கு, சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வடபழநியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலா சிங்
பாலா சிங்

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, `என்.ஜி.கே', `மகாமுனி' உட்பட ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். `என்.ஜி.கே'வில் அவரது நடிப்பு வெகுவான பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் பூரண உடல்நலம் பெற்று விரைவாக மீண்டுவர அவரது ரசிகர்களும் குடும்பத்தார்களும் காத்திருக்கிறார்கள்.