Published:Updated:

அப்போ இப்போ 6: `அமராவதி அஜித்துக்கு நான் நண்பன்; `வலிமை' அஜித்துக்கு என் பையன் தம்பி' - பானு பிரகாஷ்

பானு பிரகாஷ்

வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகராக நமக்கு பழக்கப்பட்ட முகம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போ இப்போ தொடருக்காக அவரை சந்தித்துப் பேசினோம்.

அப்போ இப்போ 6: `அமராவதி அஜித்துக்கு நான் நண்பன்; `வலிமை' அஜித்துக்கு என் பையன் தம்பி' - பானு பிரகாஷ்

வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகராக நமக்கு பழக்கப்பட்ட முகம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போ இப்போ தொடருக்காக அவரை சந்தித்துப் பேசினோம்.

Published:Updated:
பானு பிரகாஷ்
`அந்த காலத்துல சீரியல் பண்ணினா சினிமா பண்ண முடியாதுன்னுலாம் யாரும் சொல்ல மாட்டாங்க.. அதை எப்பவும் நான் ஏத்துக்க மாட்டேன்!' என்றவாறு பேசத் தொடங்கினார் பானு பிரகாஷ்.

வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகராக நமக்கு பழக்கப்பட்ட முகம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போ இப்போ தொடருக்காக அவரை சந்தித்துப் பேசினோம்.

பானு பிரகாஷ்
பானு பிரகாஷ்

என் அம்மா தெலுங்கு பட ஹீரோயினாக நடிச்சிருக்காங்க. அதனால சின்ன வயசிலேயே சினிமா அறிமுகமாக இருந்தாலும் படிப்பில் நல்லா வரணும்னு இன்ஜினீயரிங் படிக்க சீட் வாங்கினாங்க. பெங்களூரில் இன்ஜினீயரிங் படிக்கப் போனேன். படிச்சா தான் நமக்கு பொண்ணு கொடுப்பாங்கங்கிற எண்ணத்துல அங்க போனேன். ஆனா, அங்க போய் லைஃப் முழுசா என்ஜாய் பண்ணினே தவிர படிப்பில் முன்னேற்றம் இல்ல. அரியர் மேல அரியர் போனதும் இன்ஜினீயரிங்கை டிஸ் கண்டின்யூ பண்ணிட்டு சென்னை வந்துட்டேன்.

இங்க பிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிக்க முடிவெடுத்தேன். அங்க மொத்தமே பத்து சீட் தான்... அதுக்கு கிட்டத்தட்ட 2000 பேர் வந்திருந்தாங்க. நிச்சயம் நமக்கு சீட் கிடைக்காதுங்கிற எண்ணத்துலதான் இருந்தேன். ஆனா, அவங்க சொன்ன கான்செப்ட்டை உள்வாங்கி நடிச்சதும் அவங்களுக்கு என்ன பிடிச்சதுன்னு தெரியல என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. அப்படித்தான் என் கரியர் ஆரம்பமாச்சு. அங்க நிறைய கத்துக்கிட்டேன். 

படிக்கும்போதே எங்க காலேஜுக்கு டைரக்டர் செல்வா சார் வருவாரு. அவர் மூலமாகத்தான் `தாகம்'னு ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அது ரொம்ப சின்ன தொடர். அதுதான் என் முதல் சீரியல். `ஆசைக்கிளியே பாமா'ன்னு ஒரு படம். அந்தப் படத்துல நடிக்கும்போது என் முன்னாடி கிட்டத்தட்ட 300 பேர் நின்னுட்டு இருந்தாங்க.

எனக்கு ரொம்ப பதட்டமாகிடுச்சு. 30 டேக்கிற்கும் மேல வாங்கினேன். அந்தப் படமும் ரிலீஸ் ஆக லேட் ஆச்சு. ரெண்டாவதாக நான் பண்ணின படம் தான் `தலைவாசல்'. அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. அந்தப் படத்தில் வருகிற பிரின்சிபல் கேரக்டருக்கு சரத் சாரைத்தான் முதலில் செலக்ட் பண்ணியிருக்காங்க. அவருக்கு டேட் இல்லாததால பண்ண முடியல. அந்த கேரக்டர் பண்ண யார் சரியா இருப்பாங்கன்னு யோசிச்சப்ப எஸ்பிபி சார் தான் பர்பெக்ட் ஆக இருப்பார்னு தோணவும் அவர்கிட்ட பேசியிருக்காங்க. அது நிஜ கேரக்டர்கள் என்பதால் அந்த காலத்துல அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்பவே நாங்க எல்லாரும் `தலைவாசல் 2' வரும்னு எதிர்பார்த்திருந்தோம். இப்ப கூட ரெண்டாவது பாகம் வந்தா நல்லா தான் இருக்கும் என்றவரிடம் சின்னத்திரை என்ட்ரி குறித்துக் கேட்டோம்.

குடும்பத்தினருடன் பானு பிரகாஷ்
குடும்பத்தினருடன் பானு பிரகாஷ்

அமராவதி படத்துக்குப் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரல. ஒரு சின்ன கேப் வந்துச்சு. அந்த டைம்ல `சக்தி' சீரியலில் நடிக்க கேட்டாங்க. அந்த சீரியலுக்கு நார்த்ல இருந்து வந்து டெக்னிக் சொல்லிக் கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் சீரியல் ஷூட் வேற மாதிரி நடந்துச்சு. அந்த சீரியலில் நடிக்கும்போது வேற மாதிரி பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாங்க. மாசத்துல 22 நாள் ஷூட்டிங் நடக்கும். அந்த சீரியலில் ஜெய் கணேஷ் சாருடன் சேர்ந்து நடிச்சேன். அவருடன் நடிக்கிறது ரொம்பவே கஷ்டம். ஸ்கிரிப்ட்ல இல்லாத டயலாக் எல்லாம் பேசி கடைசி ஷாட் அவருக்கு வச்சுப்பார். சக்தி சீரியல் பண்ணும்போது எனக்கு இடையில் உடம்பு சரியில்லாம போச்சு. என்னை நேரில் சந்திச்சு, 'உனக்கு ஒண்ணும் ஆகாது.. நல்லா வருவ'ன்னு சொல்லி விபூதி வச்சிட்டு போனார். அதே மாதிரி நல்லாவும் ஆனேன். `ருத்ரவீணை', 'மர்மதேசம்', `அண்ணாமலை'ன்னு தொடர்ந்து சீரியலில் நடிச்சேன். அதே மாதிரி, `சூலம்' தொடருக்கு எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராக ஒர்க் பண்ண ஆரம்பிச்சு அது குறித்தும் தெரிஞ்சுகிட்டேன். அடுத்து அதுவும் செட் ஆகலைன்னு அதிலிருந்தும் விலகிட்டேன்.

மறுபடி நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துகிட்டு பிசினஸில் கவனம் செலுத்திட்டு இருந்தேன். `நந்தினி' சீரியல் மூலமா மறுபடி ரீ என்ட்ரி கொடுத்தேன். அப்புறம் சாக்லேட் சீரியல் பண்ணினேன். அதுக்கப்புறமாகத்தான் இப்ப விஜய் டிவியில் ஒளிபரப்பாகிற `காற்றுக்கென்ன வேலி' சீரியலில் நடிக்கிறேன். அந்த சீரியலில் மகாதேவன் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைச்சிருக்கு என்றவரிடம் ஃபேமிலி குறித்துக் கேட்டோம்.

குடும்பத்தினருடன் பானு பிரகாஷ்
குடும்பத்தினருடன் பானு பிரகாஷ்

என் பையன் ராஜ் ஐயப்பாவும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கான். `100' படத்தில் வில்லனாக நடிச்சிருந்தான். சமீபத்தில் `வலிமை' படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடிச்சிருந்தான். அஜித் சாருடன் நானும் நடிச்சிருக்கேன், என் பையனும் நடிச்சிருக்கான்னு எனக்கு ரொம்பவே சந்தோஷம். அவர் மாறவே இல்ல. அந்த காலத்தில் எப்படி பார்த்தேனோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறார். பொண்ணு நம்ரிதா இப்ப மீம் பாய்ஸ்னு ஒரு வெப் சீரிஸ் பண்ணியிருக்காங்க. தவிர, மலையாளப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிச்சிருக்காங்க. நான் சினிமாவில் நடிக்கிறதுக்கே என் மனைவி சம்மதிக்காம இருந்தாங்க. இப்ப பசங்களும் அந்த ஃபீல்டுதான் செலக்ட் பண்ணியிருக்காங்கன்னு ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும் அப்புறமா பிள்ளைங்க சந்தோஷம் தான் நம்ம சந்தோஷம்னு மனசை தேத்திக்கிட்டாங்க!' எனப் புன்னகைக்கிறார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!