Published:Updated:

`பிக்பாஸுக்கு அப்புறம் நானும் கஞ்சா கருப்புவும் மீட் பண்ணோம்... அப்போ?!’ - நடிகர் பரணி

பரணி

``மறுபடி எப்ப வேலைன்னு தெரியாத சூழல் சாதாரண மனுஷனுக்கு மட்டுமில்ல என்னை மாதிரியான சில நடிகர்களுக்குமே இருக்கு. இருக்குற கையிருப்புல நாளை நகர்த்தணுமில்லையா?’’

`பிக்பாஸுக்கு அப்புறம் நானும் கஞ்சா கருப்புவும் மீட் பண்ணோம்... அப்போ?!’ - நடிகர் பரணி

``மறுபடி எப்ப வேலைன்னு தெரியாத சூழல் சாதாரண மனுஷனுக்கு மட்டுமில்ல என்னை மாதிரியான சில நடிகர்களுக்குமே இருக்கு. இருக்குற கையிருப்புல நாளை நகர்த்தணுமில்லையா?’’

Published:Updated:
பரணி

'நாடோடிகள்- 2' படத்துக்குப் பிறகு `குச்சி ஐஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் பரணி. படம் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்ட நிலையில் கொரோனா வந்துவிட, ஷூட்டிங் அப்படியே நிற்கிறது.

நடிகர் பரணி
நடிகர் பரணி

இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியது முதல் சென்னையிலிருந்த பரணி, சில தினங்களுக்கு முன் இ-பாஸ் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் மதுரை சென்றிருப்பதாகத் தகவல் வர தொடர்பு கொண்டு பேசினேன்.``தனியா இருக்கற அம்மாவைப் பார்க்கறதுக்காக இங்க வந்தேண்ணே’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``முதன் முதலா ஹீரோவா நடிச்சுப் படத்தைப் பார்த்துடலாம்னா கொரோனா கும்மியடிச்சுடுச்சு. ஹீரோவாகறதுன்னா எங்கிருந்தெல்லாம் பிரச்னை வருது பாருங்க. இத்தனைக்கும் `நாடோடிகள் -2’ வுக்கு வாங்கினதுல மூணுல ஒரு பங்கு சம்பளம்தான் `குச்சி ஐஸ்’ படத்துக்கு. சரி பார்க்கலாம். தியேட்டர்கள் பிரச்னை, ஓடிடி ரிலீஸ்னு சினிமாவுல என்னென்னவோ மாற்றங்கள் நடந்திட்டிருக்கு.

நாம விரும்பினாலும் இல்லாட்டியும் எல்லாத்தையும் கடந்துதான் ஆகணும். நான் என்னை அதுக்குத் தயார்படுத்திக்கிட்டேன். இன்னொரு ஆறு மாசத்துக்காவது எளிமையாதான் வாழ்ந்தாகணும். அப்படின்னா இவ்ளோ நாளும் பகட்டா வாழ்ந்தேன்னு அர்த்தமில்லை. இவ்ளோ நாள் இருந்ததை விட சிம்பிளா இருக்கப் பழகிக்கணும். கையிருப்பு கம்மிதாண்ணே.

பரணி
பரணி

மறுபடி எப்ப வேலைன்னு தெரியாத சூழல் சாதாரண மனுஷனுக்கு மட்டுமில்ல என்னை மாதிரியான சில நடிகர்களுக்குமே இருக்கு. இருக்கற கையிருப்புல நாளை நகர்த்தணுமில்லையா? அதேநேரம் என்னைச் சுத்தியிருக்கிற சிலருக்கு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செய்யவும் மறக்கலை’’ என்றவரிடம், ``பிக்பாஸ்ல சண்டை போட்ட பிறகு எப்போதாவது கஞ்சா கருப்புவிடம் பேசினீர்களா?’’ எனக் கேட்டேன்.

``மதுரை ஒத்தக்கடையில கபடிப் போட்டி ரொம்ப ஃபேமஸ். கொரோனாவுக்கு முன்னாடி நடந்த அந்தப் போட்டியில நான் கலந்துகிட்டேன். அங்க சிறப்பு விருந்தினரா அண்ணன் வந்திருந்தார்.

கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு

பார்த்ததும் வணக்கம் வெச்சேன். `ஏய் இங்கயும் வந்திட்டியாப்பா நீ’னு சிரிச்சார். அண்ணே, இங்க நாம ரெண்டு பேரும் போட்டியாளர்கள் இல்லை. நீங்க பரிசு தர்றதுக்கு வந்திருக்கீங்கன்னு நானும் ஜாலியாப் பேச, `சரிதான், போய் எல்லாத்தையும் அவுட் ஆக்கிட்டு வா... கோப்பையைத் தர்றேன்’னு அவரும் சிரிச்சு எனக்கு வாழ்த்துச் சொன்னார்’' என்று சிரிக்கிறார் பரணி.